ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் ரூ.40,000 கோடி மதிப்பு பங்குகள், சொத்துக்கள் யாருக்குச் செல்லும்?
இந்திய கோடீஸ்வரரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மரணம், அவருக்குச் சொந்தமான 400 கோடி மதிப்பிலான பங்குகள் யாரைச் சென்றடையும் என புகழ் பெற்ற முதலீட்டாளர்கள் இடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இந்திய கோடீஸ்வரரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மரணம், அவருக்குச் சொந்தமான 400 கோடி மதிப்பிலான பங்குகள் யாரைச் சென்றடையும் என புகழ் பெற்ற முதலீட்டாளர்கள் இடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இந்தியாவின் 'வாரன் பஃபெட்' என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 62வது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்துள்ளார், இந்தியாவின் பல நிறுவனங்களின் நிர்வாகக்குழுவிலும் இருந்துள்ளார். கடைசியாக தொடங்கப்பட்ட ஆகாசா ஏர் விமான நிறுவனத்தை தொடங்க தனது 40 சதவீத பங்குகளுக்காக $35 மில்லியன் முதலீடு செய்திருந்தார்.
நாட்டின் வளர்ந்து வரும் சில்லறை முதலீட்டாளர்களின் கூட்டத்தினரால் "பிக் புல்" என்றும் அழைக்கப்பட்ட ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்தியாவின் வளர்ச்சிக் கதையின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.
ப்ளூம்பெர்க் தொகுத்த தரவுகளின்படி, மூத்த வர்த்தகரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா ஆகியோருக்கு நகை சில்லறை விற்பனையாளரான டாடா நிறுவனத்தின் டைட்ன் நிறுவனத்தில் மட்டும் 140 கோடி டாலருக்கு பங்குகளை வாங்கிக் குவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஸ்டார் ஹெல்த் & அலைட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 88.40 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகள், காலணி தயாரிப்பு நிறுவனமான மெட்ரோ பிராண்ட்களில் 28.10 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகள், ஆட்டோமேக்கரான டாடா மோட்டார்ஸில் 26.20 கோடி மதிப்புள்ள பங்குகள், கிரிசிலில் 16.40 கோடி பங்குகள், போர்டிஸ் ஹெல்த்கேரில் 11.30 கோடி பங்குகளை ஜூன்ஜூன்வாலா வைத்துள்ளார். இதில் ஜூன்ஜூன்வாலா ஸ்டார் ஹெல்த், ஆப்டெக், நசாரா ஆகியவற்றில் 10 சதவீதத்துக்கும் மேல் பங்குகளை வைத்துள்ளார்.
அவரது போர்ட்ஃபோலியோவில் ராலிஸ் இந்தியா, எஸ்கார்ட்ஸ், கனரா வங்கி, இந்தியன் ஹோட்டல் கம்பெனி, அக்ரோ டெக் ஃபுட்ஸ், டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களும் அடங்கும். ஒட்டுமொத்தமாக, அவர் ஜூன் 2022 காலாண்டின் முடிவில் 47 நிறுவனங்களில் பங்குகளை வைத்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் ஆசியாவின் பரோபகாரத்தின் ஹீரோக்களின் பட்டியலில் இடம்பெற்ற ராகேஷ் ஜுன்ஜுன்வாலா,
"2008 இல் நான் கோடீஸ்வரரானபோது, என் தந்தை எனது நிகர மதிப்பில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் நான் எவ்வளவை தானமாக கொடுக்க விரும்புகிறேன் என்பதை பற்றியும் அறிந்து கொள்ளவில்லை,” எனத் தெரிவித்திருந்தார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின்படி, தனது வாழ்நாளில் தனது சொத்துக்களில் 25% கொடுக்க விரும்புவதாக அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தார்.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவைத் தொடர்ந்து அவரது பங்குகள் மனைவி மற்றும் 3 பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுக்கப்படுமா? அல்லது மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்படுமா? என்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், தற்போது வந்து செய்திகளின்படி, ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தான் இறப்பதற்கு முன்பே, தனது பங்குகள் மற்றும் சொத்துக்களை அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுக்கு வழங்கிட உயில் எழுதி பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜுன்ஜுன்வாலா, தனது சொத்துக்களை - பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் உள்ள நேரடி சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்களை - தனது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா மற்றும் மூன்று வாரிசுகளுக்கு (ஒரு மகள், இரட்டை மகன்கள்) விட்டுச் சென்றுள்ளார், என்று நம்பகத்தகுந்தவர் சொன்னதாக எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அவருடைய எஸ்டேட்களை வல்லுனர்களை அடங்கிய குழு மற்றும் குடும்பத்தினர் நிர்வகிப்பார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு - கனிமொழி