வேலைவாய்ப்பு விளம்பரங்களில் வயது, பாலினம், திருமண நிலை தகவல்களை கைவிட ஃபாக்ஸ்கான் உத்தரவு!
ஆப்பிள் சார்பில் ஐபோன்களை தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், ஆலை பணிக்கான விளம்பரங்களில் வயது, பாலினம், திருமண விவரம் உள்ளிட்ட தகவல்களை நீக்குமாறு தொழிலாளர்களை நியமிக்கும் பொறுப்பேற்றுள்ள ஏஜென்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆப்பிள் சார்பில் ஐபோன்களை தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், ஆலை பணிக்கான விளம்பரங்களில் வயது, பாலினம், திருமண விவரம் உள்ளிட்ட தகவல்களை நீக்குமாறு தொழிலாளர்களை நியமிக்கும் பொறுப்பேற்றுள்ள ஏஜென்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. உற்பத்தி நிறுவன பெயரையும் நீக்குமாறு நிறுவனம் தெரிவித்துள்ளதாக, இந்த விஷயம் குறித்து அறிந்தவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
சென்னை அருகே அமைந்துள்ள ஐபோன் உற்பத்தி ஆலையில் ஃபாக்ஸ்கான் திருமணமான பெண்களை விலக்குவதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் ஜூன் மாதம் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்ட நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அருகே ஸ்ரீபெரும்பத்தூரில் ஃபாக்ஸ்கான் ஆலை அமைந்துள்ளது. இதற்கான ஊழியர்களை மூன்றாம் தரப்பு ஒப்பந்த நிறுவனம் மூலம் ஃபாக்ஸ்கான் மேற்கொள்கிறது. ஏஜெண்ட்கள் ஊழியர்களை தேர்வு செய்த பிறகு ஃபாக்ஸ்கான் இறுதி தேர்வு செய்கிறது.
ராய்டர்ஸ் நிறுவனம், 2023 ஜனவரி முதல் 2023 மே மாதம் வரையான ஃபாக்ஸ்கான் நியமன வெண்டர்கள் விளம்பரங்களை ஆய்வு செய்து, திருமணமாகாத பெண்கள் மட்டுமே வேலைக்கு உரியவர்கள் என தெரிவித்திருப்பதை கண்டறிந்தது. இது ஆப்பிள் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவன கொள்கைகளுக்கு எதிராக பாகுபாடு கொண்டது.
ராய்டர்ஸ் செய்தி வெளியான பிறகு, ஃபாக்ஸ்கான் மனிதவளத்துறை அதிகாரிகள், இந்திய வெண்டர்கள் பலருக்கு வேலை நியமன விளம்பரங்களை நிறுவனம் அளித்த வார்ப்பிற்கு ஏற்ப அமைக்குமாறு உத்தரவிட்டதாக தெரிகிறது.
பின்னர், நடைபெற்ற கூட்டத்தில், நிறுவன அதிகாரிகள், விளம்பரங்களில் நிறுவன பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர் என ஏஜெண்ட் ஒருவர் கூறியுள்ளார்.
"திருமணமாகாதவர்கள் தேவை என குறிப்பிட வேண்டாம், வயது, பாலினமும் குறிப்பிடப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஏஜெண்ட ஒருவர் கூறினார்.
ஏஜெண்ட்களுக்கான எச்சரிக்கை தொடர்பாக ராய்டர்ஸ் கேள்விகளுக்கு ஃபாக்ஸ்கான் பதில் அளிக்கவில்லை. ஐபோன் ஆலைகளில் திருமணமான பெண்களுக்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டதா எனும் கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் திருமணமான பெண்களை நியமனம் செய்வதாக முன்னதாகக் கூறியிருந்தன.
ஃபாக்ஸ்கான் அண்மை காலமாக திருமணமான பெண்களை பணிக்கு அதிக அளவில் எடுத்துக்கொள்கிறதா என்பதை சுயேட்சையாக ராய்டர்ஸ் நிறுவனதால் உறுதி செய்ய முடியவில்லை எனினும், அண்மை விளம்பரங்களில் மாற்றம் உள்ளது.
ராய்டர்ஸ் ஆய்வு செய்த புதிய விளம்பரம் ஒன்றில், வயது, பாலினம் போன்றவை குறிப்பிடப்படவில்லை. திருமணம் விவரமும் இல்லை.
அக்டோபர் மாதம் ராய்டர்ஸ் ஸ்ரீபெரும்பத்தூரில் ஃபாக்ஸ்கான் சார்பிலான விளம்பரங்களை ஆய்வு செய்தது. இதில் நிறுவன பெயர் இல்லை என்றாலும், ஃபாக்ஸ்கானுக்கானது என வெண்டர்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ராய்டர்ஸ் தகவல் அறிய முயன்ற போது ஆள நியமன வெண்டர்கள் இது பற்றி பேச முன்வரவில்லை.
ஆப்பிள் நிறுவனம் சீனாவுக்கு மாற்றாக இந்தியாவை உற்பத்தி மையமாக பார்க்கிறது. ராய்டர்ஸ் செய்தியை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, ஜூலை மாதம் அதிகாரிகள் நிறுவனத்தில் விசாரணை நடத்தினாலும் இது பற்றிய விவரம் வெளியிடப்படவில்ல.
செய்தி- என்டிடிவி, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan