குடியரசு தினம் 2021: இந்தியர் என பெருமிதம் கொள்ளவைக்கும் 11 விஷயங்கள்!
குடியரசு தினத்தன்று, இந்தியாவை உலக அளவில் பெருமிதம் கொள்ள வைத்த இந்தியர்கள், மற்றும் மகத்தான தருணங்களை நினைத்துப்பார்க்கலாம்.
இந்தியா, 1954ல் அணுசக்தி திட்டத்தை அறிமுகம் செய்த முதல் நாடாக விளங்கியது. சுதந்திரம் அடைந்த பிறகு, ஹோமி பாபா தலைமையிலான இந்திய விஞ்ஞானிகள் குழு, அணு சக்தி ஆய்வு தொடர்பாக பிரதமர் நேருவின் சம்மத்ததை பெற்றனர்.
இதனையடுத்து 1948 அணுசக்தி சட்டம், இந்திய அணுசக்தி ஆணையத்தால் அமைக்கப்பட்டது. வளர்ச்சி மற்றும் அத்துடன் தொடர்புடைய பணிகளுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட அணுசக்தியை பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
1956ல் இந்தியா, ஆசியாவின் முதல் அணுசக்தி ஆலையை Apsara உருவாக்கியது. இந்தியாவின் மிகவும் பழமையான அணு உலையாக அப்சரா விளங்குகிறது. பாபா அணுசக்தி ஆய்வு மையத்தால் வடிவமைக்கப்பட்டு யுனைடெட் கிங்டம் உதவியுடன் இது உருவாக்கப்பட்டது. இந்நாடு ஆரம்பக் கட்ட எரிசக்தியான செறிவூட்டப்பட்ட யூரேனியத்தையும் வழங்கியது.
1968ல், டாக்டர்.ஃபிரபுல்ல குமார் சென், ஆசியாவில் மாற்று இதய அறுவை சிகிச்சை செய்த முதல் மருத்துவராக விளங்கினார்.
மோசமான இதய நோயால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவருக்கு டாக்டர்.பிரபல்லா சென் மற்றும் குழுவினர் இதய அறுவை சிகிச்சை செய்தனர். மாற்று இதயம் தரக்கூடியவரை கண்டறிய ஒரு மாதம் ஆனது. ரெயில் விபத்தில் தலையில் காயமடைந்து, 20 வயது பெண்ணின் இதயம் பொருத்தப்பட்டது.
1975ல் இந்தியா முதல் விண்வெளி செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது.
பெங்களூருவில் உள்ள பீன்யாவில் உருவாக்கப்பட்ட ஆர்யபட்டா செயற்கைகோள் 1975ல் ஏப்ரல் 19ம் தேதி ரஷ்ய ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இஸ்ரோவின் சந்திராயன்-1 சந்திரனில் தண்ணீர் இருப்பதை முதலில் கண்டுபிடித்தது. இந்தியா நிலவுக்கு அனுப்பிய சந்திராயன்– 1 விண்கலம், 2008 அக்டோபர் 22ம் தேதி செலுத்தப்பட்டது. நிலவைச்சுற்றி, 3,400 முறைக்கு மேல் சுழன்ற இந்த விண்கலம், அங்கு தண்ணீர் இருப்பதை முதலில் கண்டறிந்தது. 2009ல் இந்த விண்கலடத்துடனான தொடர்பு முறிந்தது.
இஸ்ரோ செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி வைத்து, இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் ஆசிய நாடானது. உலக அளவில் முதல் முயற்சியில் வெற்றிகரமாக செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய நாடும் எனும் சிறப்பையும் பெற்றது.
மங்கல்யான் என்றும் அழைக்கப்பட்ட மார்ஸ் ஆர்பிடர் மிஷன், 2013 நவம்பர் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டு, 2014 செப்டம்பர் செவ்வாயை அடைந்தது.
உலகின் மிகப்பெரிய ராணுவ சேவையை கொண்ட நாடு இந்தியா.
தன்னார்வ தன்மை கொண்ட இந்திய ராணுவம் நாட்டின் பாதுகாப்புப் படையில் 80 சதவீதத்தை பெற்றுள்ளது. 1,237,117 வீரர்கள் மற்றும் 960,000 ரிசர்வ் வீரர்களுடன் உலகின் மிகப்பெரிய ராணுவமாக திகழ்கிறது.
குழந்தைகளுக்கான மிகப்பெரிய இந்திய மதிய உணவுத் திட்டம்.
1955ல் துவக்கப்பட்ட மதிய உணவுத் திட்டம், நாடு தழுவிய அளவில் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்கும் நோக்கம் கொண்டது. இந்தத் திட்டம், 120,000,000 பள்ளிக்குழந்தைகளுக்கு 1,265,000 பள்ளிகள் மூலம் மதிய உணவு வழங்குகிறது.
சுதந்திரம் பெற்றது முதல் அனைத்து இந்தியர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை.
இந்திய அரசியல் சாசன, சாதி, மத, சமூக அந்தஸ்து வேறுபாடு இன்றி, 18 வயதான எல்லா இந்தியர்களுக்கும் வாக்குரிமை அளிக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த உரிமை சுதந்திரம் அடைந்த 150 ஆண்டுகளுக்குப் பிறகே சாத்தியமானது.
பிரதமர், குடியரசுத்தலைவர் உள்ளிட்ட உயர் பதவி வகித்த பெண்கள்.
1966ல் இந்திரா காந்தி முதல் இந்திய பெண் பிரதமரானார். பிரதிபா பாட்டில் முதல் பெண் குடியரசுத்தலைவரானார். 1947ல் முதல் அமைச்சரவையில், ராஜ்குமாரி அம்ரித் கவுர் சுகாதார அமைச்சராக இருந்தார்.
உலகின் மிகப்பெரிய வலைப்பின்னலான இந்திய ரெயில்வே.
இந்திய ரெயில்வே 8.7 பில்லியன் பயணிகளை ஆண்டுதோறும் ஏற்றிச்செல்கிறது. 100 கோடி டன் சரக்குகளைக் கொண்டு செல்கிறது. 68,155 கி.மீ தொலைவு ரெயில் பாதையை கொண்டுள்ளது. 1.3 மில்லியன் ஊழியர்களைக் கொண்டுள்ளது.
கட்டுரை: யுவர்ஸ்டோரி குழு | தமிழில்: சைபர் சிம்மன்