Rupee vs Dollar: வரலாறு காணாது சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு: காரணம் என்ன?
அமெரிக்கப் பத்திரங்களின் வருவாயின் அதிகரிப்புக்கு மத்தியில், புதன்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 81.93 வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்கப் பத்திரங்களின் வருவாயின் அதிகரிப்புக்கு மத்தியில், புதன்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 81.93 வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.
2022 காலண்டர் ஆண்டில் இதுவரை கிரீன்பேக்கிற்கு எதிராக உள்நாட்டு நாணயத்தின் ஏற்கனவே சுமார் 9% குறைந்துள்ள நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது இந்திய பணமதிப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க டாலர் குறியீடானது, மற்ற முக்கிய நாணயங்களின் எதிராக அதிகரித்து வருகிறது. தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு 114.68 அளவுக்கு உயர்ந்துள்ளதால், அந்நாட்டின் கருவூல வருவாய் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முதன் முறையாக 4 சதவீதத்தை எட்டியுள்ளது.
திங்கட்கிழமையன்று ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் 81.6525ஐ எட்டியது. செவ்வாய்க்கிழமை 81.30 - 81.64 வரம்பில் வர்த்தகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று 40 காசுகள் சரிந்து 81.93 ரூபாயாக உள்ளது.
அதிகரித்து வரும் அமெரிக்க பத்திரங்கள் மீதான முதலீடுகளும், அமெரிக்க டாலர்களின் மதிப்பும் வளர்ந்து வரும் நாடுகளின் வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்த தூண்டுகிறது. எனவே, இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிவிப்பிற்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர்.