ஸ்டீவ் ஜாப்ஸ் அணிந்திருந்த செருப்புக்கு இவ்வளவு மதிப்பா? எவ்வளவு கோடிக்கு ஏலம் போயிருக்கு பாருங்க!
ஆப்பிள் நிறுவனத்தின் தந்தையான ஸ்டீவ் ஜாப்ஸ் அணிந்திருந்த காலணிகள் 220,000 டாலர்களுக்கு விற்கப்பட்டதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் தந்தையான ஸ்டீவ் ஜாப்ஸ் அணிந்திருந்த காலணிகள் 220,000 டாலர்களுக்கு விற்கப்பட்டதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஒரு ஜோடி பழைய காலணிகளை கோடிகளைக் கொட்டிக்கொடுத்து யாராவது வாங்குவார்களா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்த வினோதமான சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. அதாவது, ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் இணை நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய ஒரு ஜோடி செருப்புகள் 1.7 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த ‘ஜூலியன்ஸ் ஆக்ஷன்ஸ்’ என்ற ஏல நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸின் பழைய காலணிகளை சமீபத்தில் ஏலத்தில் விட்டுள்ளது. அவற்றை 2 லட்சத்து 18 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.1 கோடியே 77 லட்சம்) கொடுத்து ஒருவர் வாங்கியுள்ளார்.
ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸின் பழைய காலணிகள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாக விற்கப்பட்டதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏலத்தில் $60,000 பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவை $2,18,750-க்கு விற்றுள்ளதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், வழக்கம் போல் அவற்றை வாங்கியவர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
ஏல நிறுவனத்தின் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி,
“கார்க் மற்றும் சணலால் ஆன ஒரு ஜோடி காலணிகள் ஸ்டீவ் ஜாப்ஸால் 1970கள் மற்றும் 80களில் ஆப்பிள் கம்ப்யூட்டர் உருவாக்கத்தின் முக்கிய காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்டதாவும், பல ஆண்டுகளாக அவற்றைப் பயன்படுத்தியதால் அவரது கால்தடங்கள் அவற்றில் தெளிவாகத் தெரிவதாகவும்,” குறிப்பிடப்பட்டுள்ளது.
1970-களில் ஸ்டீவ் ஜாப் அரிசோனா நிறுவனத்தைச் சேர்ந்த பிர்கன்ஸ்டாக் தோல் செருப்பை அணிந்திருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், ஸ்டீவ் ஜாப் இந்த காலணிகளை அவரது வீட்டு மேலாளரான மார்க் ஷெஃப் என்பவருக்கு வழங்கியதாக ஏலம் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
1976ல் லாஸ் ஆல்டோஸ் கேரேஜில் ஆப்பிள் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியபோது ஜாப்ஸ் இந்த காலணிகளை அணிந்திருந்தார். இந்த செருப்புகள் கடந்த காலங்களில் பல கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
2017ல் இத்தாலியின் மிலனில் உள்ள சலோன் டெல் மொபைல், 2017ல் ஜெர்மனியின் ரஹ்ம்ஸில் உள்ள பிர்கன்ஸ்டாக் தலைமையகம் மற்றும் நியூயார்க்கின் சோஹோ நிறுவனத்தின் முதல் யு.எஸ். ஜெர்மனியின் கொலோனில் நடந்த IMM கோல்ன் ஃபர்னிச்சர் ஃபேர், 2018ல் Die Zeit இதழுக்கான Zeit Event Berlin, மற்றும் மிக சமீபத்தில், ஜெர்மனியின் Stuttgart இல் உள்ள வரலாற்று அருங்காட்சியகம் Württemberg போன்ற பல கண்காட்சிகளில் இந்த செருப்புகள் தோன்றியுள்ளன.
ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் 1976ல் கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினர். அதன் பிறகு, கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்களில் உலகின் முன்னணி நிறுவனமாக ஆப்பிள் ஆனது.