அரசியல்வாதிகள் முதல் பிரபலங்கள் வரை பரவிய #SareeTwitter டிரெண்ட்!
இணையதளத்தை பொறுத்தவரை இன்று விளையாட்டாக போடப்படும் ஒரு பதிவு நாளை உலகளவில் பிரபலமாகலாம். சில வாரங்களுக்கு முன் #PrayForNesamani உலகளவில் ட்விட்டரில் பிரபலமானது. அதுப்போல் இப்பொழுது வலம் வரும் ட்விட்டர் டிரெண்ட் #SareeTwitter.
திங்கட்கிழமை அன்று இந்த ஹாஷ்டேக் டிரெண்டாகத் துவங்கி இன்று இந்தியா முழுவதும் பரவி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வரை பரவி விட்டது. சாதாரணமாக ஒரு பெண், தான் புடவை அணிந்திருக்கும் புகைப்படைத்தை #SareeTwitter என எழுதி பதிவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது நண்பர்களும் புடவையுடன் இருக்கும் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து இந்த Hashtag டிரெண்ட் செய்துள்ளனர்.
பொதுவாகவே இந்தியா என்றாலே பலருக்கு நியாபகம் வரும் உடை புடவை தான், மேற்கத்திய ஆடைகள் பரவலாக வந்தாலும் இந்திய கலாச்சாரத்தையும் புடவையையும் என்றும் பிரிக்க முடியாது. இந்த காலத்து பெண்களும் புடவையை விரும்பியே உடுத்திக் கொள்கின்றனர்.
இதனால் புடவை மீதான தங்கள் ஈடுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் பல பெண்கள் தாங்கள் புடவை அணிந்திருக்கும் படத்தை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தங்களின் தாய், சகோதரிகள் மற்றும் தங்களுக்கு பிடித்த பிரபலங்கள் புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெள்யிட்டு இந்த டிரெண்டில் இணைந்துக் கொண்டுள்ளனர். அமுல், இஸ்ரேல் இந்தியா எம்பசி போன்ற சில ட்விட்டர் பக்கங்களும் இதில் பங்கேற்றுள்ளன.
இந்த டிரெண்டில் அரசியல் தலைவரும் காங்கிரளின் பிரியங்கா காந்தி – தன் திருமண நாள் அன்று எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
நடிகை மற்றும் அரசியல்வாதியான நக்மா – இந்திய கலாச்சாரத்தை முன்னிறுத்தும் உடை புடவை என்று பதிவிட்டார்.
இஸ்ரேல் இந்தியாவின் உறவை பலப்படுத்த உருவாக்கப்பட்டிருக்கும் ட்விட்டர் கணக்கிலும் ”புடவை இந்தியாவின் பாரம்பரியம், இன்று பலமான ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் புடவை மட்டும்தான். பெண்கள் இதை அணிந்தால் ஸ்டைலிஷாகவும், மிக அழகாகவும் இருப்பார்கள்,” என்று ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இந்தியன் எம்பசியில் இருக்கும் அத்வாவும் இந்த டிரெண்டில் கலந்துக் கொண்டார்.
இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்தோரும் இந்த டிரெண்டில் பங்கேற்று உள்ளனர். ஜெர்மனைச் சேர்ந்த இந்திய நடிகை சுசானே தான் புடவையில் உள்ள புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இவர்களை தவிர்த்து பிஜிபி, ஷிவ் சேனா போன்ற கட்சித் தலைவர்கள், பாலிவுட் நடிகர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். பழமையை மறக்காமல் நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் இந்த டிரெண்ட் பாராட்டுக்குரியது தானே?