இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் அதிகரிப்பு; எந்த வங்கி? எவ்வளவு?
தனியார் வங்கியான ஆர்பிஎல் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தை செப்டம்பர் 5ம் தேதி முதல் உயர்த்தியுள்ளது.
தனியார் வங்கியான RBL சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தை செப்டம்பர் 5ம் தேதி முதல் உயர்த்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் கோலாப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஆர்பிஎல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் செப்டம்பர் 5ம் தேதி முதல் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம் மாற்றப்படும் என அறிவித்திருந்தது.
தனியார் வங்கியான ஆர்பிஎல் வங்கியில் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, திருத்தத்தைத் தொடர்ந்து சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தை 6.25 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக ஆர்பிஎல் வங்கி அறிவித்துள்ளது.
RBL வங்கி தனது இணையதளத்தில் கூறியது,
“வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வாடிக்கையாளர்கள்/பொதுமக்களின் கவனத்திற்க, சேமிப்பு வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்கள் (NRE/NRO சேமிப்புகள் உட்பட) செப்டம்பர் 05, 2022 தேதி முதல் உயர்த்தப்படுகிறது,” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள்:
ஆர்பிஎல் வங்கி, சேமிப்பு வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 5.75% லிருந்து 6.10% ஆக அதிகரித்துள்ளது.
- ஆர்பிஎல் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் ரூ.1 லட்சம் வரை இருப்புத் தொகை இருந்தால் 4.25 சதவீத வட்டி வழங்கப்படும்.
- ரூ. 1 லட்சத்திற்கு மேல் ரூ.10 லட்சம் வரையிலான சேமிப்பு கணக்கு இருப்புத்தொகைக்கு 5.50% ஆக வட்டி விகிதம் அதிகரிக்கப்படும்.
- சேமிப்பு கணக்கில் உள்ள இருப்புத்தொகை 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 6 சதவீத வட்டி வழங்கப்படும்.
- சேமிப்பு வங்கி வைப்புத்தொகை ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை இருந்தால், 6 சதவீதம் முதல் 6.25 சதவீதம் வரை வட்டி வழங்கபடுகிறது.
- சேமிப்புக் கணக்கில் ரூ. 5 கோடி மற்றும் ரூ. 7.5 கோடி வரையுள்ள இருப்புத் தொகைக்கு 5.75 சதவீதம் வரை வட்டி கணக்கிடப்படும்.
- ரூ.7.5 கோடிக்கு மேலிருந்து 10 கோடி ரூபாய் வரை சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் 6.25 சதவீதம் வரை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
- ரூ.10 கோடிக்கும் மேற்பட்ட ரூ.50 கோடி வரையிலான இருப்புத் தொகைக்கு ரூ.5.25 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும்.
- ரூ. 50 கோடிக்கு மேற்பட்ட தொகையில் இருந்து 100 கோடி வரையில் இருப்பு வகைப்பட்டுள்ள சேமிப்பு கணக்குகளுக்கு 5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- ரூ. 200 கோடிக்கும் அதிகமான ரூ.500 கோடி வரையிலான சேமிப்புத் தொகைக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 4 சதவீத வட்டி விகிதம் தற்போது 4.50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு - கனிமொழி