SBI WhatsApp Banking - வாட்ஸ்அப் மூலம் உங்கள் வங்கிக் கணக்கு பார்ப்பது எப்படி?
எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தி மினி ஸ்டேட்மெண்ட்கள் மற்றும் கணக்கு இருப்புகளை உடனடியாகச் சரிபார்க்கலாம்.
எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தி மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் அக்கவுண்ட் பேலன்ஸ் போன்றவற்றை உடனடியாகச் சரிபார்க்கலாம்.
நாட்டிலேயே மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்குத் தேவையான தொழில்நுட்பம் அடிப்படையிலான அப்டேட்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் மூலமாக அறிந்து கொள்ளக்கூடிய குறிப்பிட்ட சில வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி சில வங்கிச் சேவைகளைப் பெற முடியும்.
வாட்ஸ்அப் பேங்கிங் மூலமாக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்டில் உள்ள இருப்புத் தொகையை அறிந்து கொள்ளலாம். அதேபோல், மினி ஸ்டேட்மெண்ட் வசதியும் ஆக்டிவ் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில்,
“வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர்கள் அக்கவுண்ட் பேலன்ஸ் சரிபார்க்கலாம். அத்துடன் மினி ஸ்டேட்மெண்ட்டை பெறவும் முடியும். வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்த விரும்பும் பயனாளிகள் முதலில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்,” என அறிவித்துள்ளது.
SBI வாட்ஸ்அப் வங்கி சேவையை பெறுவது எப்படி?
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் பேங்கிங்கை பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்...
- 7208933148 என்ற எண்ணுக்கு SMSஇல் 'WAREG மொபைல் எண்' (WAREG 56XXXXXXXXX) என்ற வடிவில் மெசேஜ் அனுப்ப வேண்டும். இப்போது உங்கள் வாட்ஸ்அப் பேங்கிற்கு உங்கள் எண் பதிவாகிவிடும். நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், உங்கள் SBI கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள அதே செல்போன் எண்ணிலிருந்து இந்த SMS அனுப்ப வேண்டும்.
- இப்போது +919022690226 என்ற எண்ணை பதிவு செய்து வாட்ஸ்அப் மூலமாக ‘Hi SBI’ என அனுப்பவும்.
- அதற்குப் பதிலாக “அன்புள்ள வாடிக்கையாளரே, நீங்கள் SBI வாட்ஸ்அப் பேங்கிங் சேவைகளுக்கு வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளீர்கள்” என்று ரிப்ளே மெசெஜ் கிடைக்கும்.
- அத்துடன் Account Balance, Mini statement, De-register from WhatsApp banking ஆகிய மூன்று ஆப்ஷன்கள் வரும். இதில் முதல் ஆப்ஷன் மூலமாக நீங்கள் வங்கிக் கணக்கில் உள்ள இருப்புத்தொகையை அறியலாம், இரண்டாவது ஆப்ஷன் மினி ஸ்டேட்மெண்டிற்கானது, மூன்றாவது ஆப்ஷனை தேர்வு செய்வதன் மூலமாக வங்கி வாட்ஸ்அப் சேவையிலிருந்து வெளியேறலாம்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதன் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கும் வாட்ஸ்அப் அடிப்படையிலான சேவைகளை ‘எஸ்பிஐ கார்டு வாட்ஸ்அப் கனெக்ட்’ (SBI Card WhatsApp Connect) என்ற பெயரில் வழங்குகிறது.
இதன் மூலம், எஸ்பிஐ கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டு மினி ஸ்டேட்மெண்ட், கிரெடிட் ஸ்கோர், நிலுவையில் உள்ள இருப்பு, கார்டு பணம் செலுத்துதல் மற்றும் பலவற்றைச் சரிபார்க்கும் அம்சங்கள் உள்ளன.