Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

செய்யாறில் உலகளாவிய உற்பத்தி மையத்தில் 1 மெகாவாட் சூரிய மின்சக்தி அமைப்பை அமைத்துள்ள Schwing Stetter நிறுவனம்!

ஷ்விங் ஸ்டெட்டர், இந்தியா என்ற நாட்டின் முன்னிலை கட்டுமான மற்றும் கான்க்ரீட் சாதனங்களின் உற்பத்தி நிறுவனம் செய்யாறில் சமீபமாக 1 மெகா வாட் சூரிய ஒளி மின்னுற்பத்தித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது சூரிய ஒளி மின்னுற்பத்தித் திட்டத்தின் உலகளாவிய மையம். இந்த உலகளாவிய உற்பத்தி மையத்தை ஷ்விங் ஸ்டெட்டர் நி

செய்யாறில் உலகளாவிய உற்பத்தி மையத்தில் 1 மெகாவாட் சூரிய மின்சக்தி அமைப்பை அமைத்துள்ள Schwing Stetter நிறுவனம்!

Wednesday April 03, 2024 , 2 min Read

ஷ்விங் ஸ்டெட்டர், இந்தியா என்ற நாட்டின் முன்னிலை கட்டுமான மற்றும் கான்க்ரீட் சாதனங்களின் உற்பத்தி நிறுவனம் செய்யாறில் சமீபமாக 1 மெகா வாட் சூரிய ஒளி மின்னுற்பத்தித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது சூரிய ஒளி மின்னுற்பத்தித் திட்டத்தின் உலகளாவிய மையம். இந்த உலகளாவிய உற்பத்தி மையத்தை ஷ்விங் ஸ்டெட்டர் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநரான சக்திகுமார் தொடங்கி வைத்தார்.

எதிர்காலத்தில் கரியமிலவாயு வெளியேற்றத்தை வீரியமிழக்கச் செய்யும் இத்தகைய முறை ஆற்றல் உற்பத்தியின் நோக்கம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி மையம் 14 லட்சம் கிலோவாட் மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும்.

தங்கள் உற்பத்திக்குத் தேவையான மின்சக்தியில் 20% மின்சாரத்தை இதன் மூலமே ஷ்விங் ஸ்டெட்டர் பெற்று விடும். ஷ்விங் உற்பத்தி மையம் ஆண்டொன்றிற்கு 14,000 இயந்திரங்களை உற்பத்தி செய்யக்கூடிய அபரிமிதமான உற்பத்தித் திறன் கொண்டது என்பதால் ஷ்விங்கின் இத்தகைய சூரிய மின்சக்தி திட்டம் நீடித்தத் தன்மைக்கான உறுதியாக அமைந்துள்ளது.

Solar Power hub

2026ம் ஆண்டுக்குள் நாட்டின் சூரிய மின்சக்தி உற்பத்தியை இரட்டிப்பாக்கும் மத்திய புதிய மற்றும் புத்தாக்க ஆற்றல் உற்பத்தித் திட்டத்தின் கீழ் ஷ்விங் நிறுவனம் வருகிறது.

ஷ்விங் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் வி.ஜி.சக்திகுமார் கூறும்போது,

“அரசின் பசுமை எரிசக்தி லட்சியங்களுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான எங்களது அர்ப்பணிப்பு நிச்சயம் இதன் மூலம் உறுதி செய்யப்படும். கரியமிலவாயு வெளியேற்றத்தை வீரியமிழக்கச் செய்வதன் முயற்சியே எங்களது ஆற்றல் உற்பத்தி மாற்றம் ஆகும்,” என்றார்.

கடந்த ஆண்டு, ஷ்விங்கின் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவும், கரியமிலவாயு வெளியேற்ற முனைப்பழிப்பை ஊக்குவிக்கவும், நிறுவனம் நாடு முழுவதும் 2,50,000 மரக்கன்றுகளை நட்டது குறிப்பிடத்தக்கது

ஷ்விங் ஸ்டெட்டர் இந்தியா நிறுவனம் பற்றி...

இந்த நிறுவனம் 1998ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டு 1999ம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கியது. இது. Schwing GmbH என்னும் 1.30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமான ஜெர்மன் இயந்திர உற்பத்தி நிறுவனத்தின் கிளை நிறுவனமாகும். XCMG குழுமத்தின் ஒரு பகுதியாகவும் செயல்படுகிறது. கான்க்ரீட் தயாரிப்புக்கு வெண்டிய உபகரணங்களைத் தயாரிக்கிறது ஷ்விங் ஸ்டெட்டர். 12 நாடுகளில் இதன் தொழிற்சாலைகள் உள்ளன.