’என் இளமையின் ரகசியம் தென்னிந்திய உணவு’ - நடிகர் அனில் கபூர்
62 வயதாகும் அனில் கபூர், இந்த வயதிலும் தன்னில் பாதி வயதாகும் இளைஞர்களுக்கு சவால் விடும் துடிப்புடனும் அதே துள்ளலுடனும் மின்னுவதற்கு இவரின் உணவுப்பழக்கமும் ஒரு காரணமாம்.
வருடங்கள் பல ஓடினாலும் 90’களில் இருந்த தனது இளமை மட்டும் மாறாமல் இருக்கிறார், 62 வயதாகும் அனில் கபூர். இந்த வயதிலும் தன்னில் பாதி வயதாகும் இளைஞர்களுக்கு சவால் விடும் துடிப்புடனும் அதே துள்ளலுடனும் மின்னுகிறார் அவர்.
'மார்க்கண்டேயன்' என்று செல்லமாக அழைக்கப்படும் அவர் நம்புவது நல்ல உணவும், அதற்கு ஏற்ற உடற்பயிற்சியும் தான். மூன்று வளர்ந்த குழந்தைகளுக்கு தந்தையானாலும், பார்ப்பதற்க்கு அவர்களின் சகோதரன் போலவே தெரிகிறார். தனது இந்த கட்டுடலுக்கு ஒழுக்கமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு தவறாத உடற்பயிற்சி ஆகியவை தான் தாரக மந்திரம் என்று உறுதியாக கூறுகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,
"என் இளமையின் ரகசியம் தென்னிந்திய உணவின் மேல் நான் கொண்ட அபிமானம் தான். இத்தனை வருடங்களாக நான் விரும்பி உண்டது தென்னிந்திய பண்டங்கள் தான்," என்று கூறினார்.
தென்னிந்திய உணவின் வகைகள் சுவையானவை மட்டும் அல்ல உடலுக்கு அதிக கலோரிகள் சேராமல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்காதவை, என்கிறார் அனில்.
"இட்லி, சாம்பார், சட்னி, தோசை, சாதம், ரசம், தயிர் மற்றும் அனைத்து ஊறுகாய் வகைகளும் தான் காரணம் என்று நினைக்கிறேன். தென்னிந்திய உணவு வகைகளான இட்லியும் தோசையும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவுகளாகும். ஒருவருக்கு உடல் நலம் சரியில்லாத போது, அவர்களின் உணவு பெரும்பாலும் இட்லியாக தான் இருக்கும் - அது மிகவும் பாதுகாப்பானதும் கூட," என்று கூறினார்.
வயதாகாமல் என்றும் இளமையாகவே இருப்பது யாருக்கு தான் பிடிக்காது? அனில் கபூர் சொல்வதைக் கேட்டவுடன் தென்னிந்திய உணவை சுவைக்க இனியும் காரணம் வேண்டாம்.
தென்னிந்திய உணவு வகைகள் தவிர வேறு எந்த உணவு வகைகள் அவருக்கு பிடிக்கும் என்று அனில் கபூரிடம் கேட்டோம். அவர் ஒரு பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு வழக்கமான பஞ்சாபிய உணவு வகைகளான ராஜ்மா, வெண்டைக்காய் வறுவல், தந்தூரி கோழி, புலாவ் ஆகிவை மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.
பட்டினி கிடந்தால் உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருக்கும் என்னும் கருத்தில் அவருக்கு உடன்பாடு இல்லை. அனைத்து உணவு வகைகளும் விரும்பும் அனில் கபூர் அவரது இன்ஸ்டாகிராம் கைப்பிடியில் பல உணவுப் புகைப்படங்களை பதிவிட்டு நிரப்பியுள்ளார். இந்த கட்டுரையில் உள்ள புகைப்படங்களை போன்று மேலும் பலவற்றை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் நிரப்பியுள்ளார். அவை உணவின் மீது அவர் கொண்ட பற்றை நிரூபிக்கின்றன.
அனில் கபூர் கடந்த நாற்பது வருடங்களாக பல மொழிகளில் பிரபல திரைப்படங்களில் நடித்துள்ளார். விரைவில் மோஹித் சூரி இயக்கத்தில் மலங் படத்தில் அவரை பார்க்கலாம். இளம் நடிகர்களான திஷா பதானி மற்றும் ஆதித்ய ராய் கபூர் இவர்களுடன் அவர் தோற்றமளிப்பார். பாலிவுட் நடிகர்களிடையே அவர் வயதிற்கேற்ற கதாபாத்திரம் நடிக்காத ஒரே நடிகர் இவர் மட்டும் தான்.