மதுரை மத்திய சிறைக் கைதிகளால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை - அப்படி என்ன ஸ்பெஷல்?

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரக்கூடிய நிலையில், மதுரை மத்திய சிறைக்கைதிகளால் உருவாக்கப்பட்ட விதை களிமண் விநாயகர் விற்பனையில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

மதுரை மத்திய சிறைக் கைதிகளால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை - அப்படி என்ன ஸ்பெஷல்?

Monday September 18, 2023,

1 min Read

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரக்கூடிய நிலையில், மதுரை மத்திய சிறைக்கைதிகளால் உருவாக்கப்பட்ட விதை களிமண் விநாயகர் விற்பனையில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு புரட்டாசி மாதம் வந்துள்ளது. இந்த விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் இல்லத்திலும் பகுதியிலும் விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.

Vinayagar

சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், சேலம், விருதுநகர், தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி என்றாலே ஆண்டுதோறும் விதவிதமான பிள்ளையர் சிலைகள் விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலும், மரம் வளர்ப்பை அதிகரிக்கும் விதமாகவும் தயாரிக்கப்படும் விதை விநாயகர் சிலைகள் விற்பனையில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

Vinayagar

அந்த வகையில், சிறை கைதிகளால் களிமண்ணால் தயாரிக்கப்பட்ட விதை விநாயகர் சிலைகள் தனி கவனம் பெற்றுள்ளன. மதுரையின் மத்திய சிறைச்சாலை கைதிகள் மூலம் களிமண்ணால் தயார் செய்யப்பட்ட விதை களிமண் விநாயகர் விற்பனை செய்யப்படுகிறது.

அரை அடி முதல் ஒரு அடி உயரம் உள்ள சிலைகள் 75 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது . ரசாயன பொருட்கள் கலப்பில்லாமல் வேப்பம் மர விதைகள், வெள்ளை எருக்க விதை பந்துகள் உள்ளே வைக்கப்பட்ட 500க்கு மேற்பட்ட சிலைகளை விற்பனை செய்ய பட உள்ளது.