எஸ்.எல்.பி ஸ்டார்ட் அப் பயிற்சி திட்டத்தின் ’Emerge 2019’ மற்றும் டெமோ தினம்!
இளம் ஸ்டார்ட் அப் நிறுவனர்களுக்கு பயிற்சி அளித்து ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் 'ஸ்டார்ட் அப் லீடர்ஷிப்' திட்டத்தின் டெமோ நிகழ்ச்சி வரும் 13 ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இத்திட்டத்தில் பங்கேற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான பட்டமளிப்பு விழா 'எமெர்ஜ் 2019' நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனம் துவக்குவதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு வழிகாட்டி ஊக்குவிப்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. SLP என குறிப்பிடப்படும் ஸ்டார்ட் அப் லீடர்ஷிப் புரோகிராம், இவற்றில் ஒன்றாக திகழ்கிறது.
அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் 2006 ஆம் ஆண்டு துவங்கிய இந்தத் திட்டம், சர்வதேச அளவில் தேர்ந்தெடுத்த ஸ்டார்ட் அப் ஆர்வலர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த திட்டம் உலகின் 12 நாடுகளில் 28 நகரங்களில் நடைபெறும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. ஒவ்வொரு நகரிலும், 15 முதல் 25 ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் இந்த பயிற்சி திட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இதுவரை இந்தத்திட்டம் மூலம் 1,600 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்கப்பட்டு, 500 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக சென்னை நகரிலும் எஸ்.எல்.பி ஸ்டார்ட் அப் பயிற்சி திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 2018 -19 ஆம் ஆண்டுக்கான பிரிவில் 21 ஸ்டார்ட் அப்கள் பங்கேற்றன. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான பட்டமளிப்பு விழா சென்னையில் அமேசான் டெவலெப்மண்ட் செண்டரில் வரும் 13ம் தேதி நடை பெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு எமெர்ஜ் 2019 என பெயரிடப்பட்டுள்ளது.
ஜோஹோ, இகோ ஆர்கானிக், கென்சில், பேட்மன் சொசைட்டி, அமேசான், ஸ்டார்ட் அப் காரம், ஸ்டார்ட் அப் பைட், பிரிலவ்டு புக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த திட்டத்தின் பாட்னர்களாக இருக்கின்றன.
இந்த திட்டத்தில் பங்கேற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஹைபர் லோக்கல் காமர்ஸ், கல்வி, விவசாயம், சுற்றுலா, உணவு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளைச் சேந்தவைகளாக உள்ளன. டிலைட்ஸ் இன், ஜாக்ரோ எக்ஸ்பீரின்சஸ், அப்ஸ்டார்ட்லி, சம்மோர் புட்ஸ், யோலோ பாக்ஸ், கிராசர் மெயில், இராஸ் சிஸ்காம், பிரி லவ்டு புக்ஸ், ஷக்தி ரிடைல்ஸ் இந்தியாம் சானோ ஹோலிஸ்டிக் நியூட்ரிஷன் கிளினிக், பிஸ்கோஸ், ரைன்மேன், ஷீக்ஷா ஜூனியர் பிளேஸ்கூல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போதைய திட்டத்தில் பங்கேற்றுள்ளன.
வரும் 13ம் தேதி, ஸ்டார்ட் அப்களுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் டெமோ நிகழ்ச்சி இரண்டும் இணைந்து நடைபெற உள்ளது. இதில் 13 ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் ஐந்து முதலீட்டாளர்களிடம் தங்கள் ஐடியாக்களை முன் வைப்பார்கள். சுலேகாவின் விஜய் ஆனந்த், அஸ்பிரேஷன் எனர்ஜியின் பூவராகவன் திருமலை, இந்தியன் ஏஞ்சல் இன்வெஸ்ட்மெண்டின் ராமன் கோவிந்தராஜன், வில்க்ரோ இன்வெஸ்ட்ன்மெண்ட்சின் சக்ரவர்த்தி மற்றும் சென்னை ஏஞ்சல்சின் பல்ராம் நாயர் ஆகிய முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர்.
8 கே மைல்ஸ் சாப்ட்வேர் நிறுவன சி.ஓ.ஓ லேனா கண்ணப்பன், ஜோஹோ ஃபார் ஸ்டார்ட் அப்சின் முதன்மை தூதர் குப்புலட்சுமி, வாஸப் நிறுவனர் பாலசந்தர் ஆகியோர் இந்த ஸ்டார்ட் அப் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
எஸ்.எல்.பி டெமோ நிகழ்ச்சியில் பங்கேற்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்து கொள்ள: http://tinyurl.com/yxjnzavc
இதில் பங்கேற்கும் ஸ்டார்ட் அப்கள் பற்றி மேலும் அறிய: Facebook& Instagram Page
கட்டுரையாளர்: சைபர்சிம்மன்