பதிப்புகளில்
ஸ்டார்ட்-அப் நாயகர்கள்

இந்தியாவின் சிறிய நகரங்களின் வெற்றிக் கதைகளை சொல்லும் 'ஸ்டார்ட் அப் பார்த்'

மெட்ரோ அல்லாத நகரங்களில் உருவாகும் ஸ்டார்ட் அப்'கள் மற்றும் இந்தியாவின் சிறிய நகரங்களில் நிகழும் புதுமையாக்கங்களை கண்டறியும் முயற்சியாக 'ஸ்டார்ட் அப் பாரத்' அமைகிறது.

YS TEAM TAMIL
11th Feb 2019
Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share

இதுவரை, ஸ்டார்ட் அப் என்றாலே, பெங்களூரு, தில்லி, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்கள் தான் நினைவுக்கு வரும். சென்னை, புனே நகரங்களையும் இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவில், பில்வாரா முதல் ஷில்லாங் வரை, ஸ்ரீநகர் முதல் தஞ்சை வரை சிறிய நகரங்களிலும் இப்போது ஸ்டார்ட் அப் முயற்சிகள் நிகழ்கின்றன.  

இந்த ஸ்டார்ட் அப்கள் வலுவான, வளர்ச்சி மற்றும் வருவாய் ஈட்டும் வாய்ப்புள்ள எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. மக்கள்தொகையின் பெரும் பகுதி மீது தாக்கம் செலுத்தக்கூடிய யதார்த்த உலகின் பிரச்சனைகளில் கவனம் செலுத்துகின்றன.  

விவசாயம் முதல் கல்வி நுட்பம் வரை, மருத்துவ நுட்பம் முதல் நிதி நுட்பம் வரை பல்வேறு துறைகளில் இவை புதுமையாக்கத்தை கொண்டு வருகின்றன.

நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு இவை உண்மையான தீர்வுகளை அளிக்கின்றன.

தொழில்நுட்பம் நமக்கான வளமான எதிர்காலத்தை உருவாக்கும் எனும் கருத்தில் நம்பிக்கைக் கொண்டுள்ள முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டிய ஸ்டார்ட் அப்களாக இவை இருக்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள ஊக்கம் தரும் கதைகளை உங்களுக்கு அளித்து வருகிறோம். உங்களில் பலர், சிறிய நகரங்களின் ஸ்டார்ட் அப்’கள் பற்றியும் அதிகம் கூறுமாறு கேட்டிருக்கிறீர்கள். எனவே உங்கள் கோரிக்கையையை ஏற்று ’ஸ்டார்ட் அப் பாரத்’ முயற்சியை துவங்கியுள்ளோம். இந்தப் பகுதியில், தங்கள் எண்ணங்களை வர்த்தமாக மாற்ற எல்லாவற்றையும் ரிஸ்க் எடுக்க துணியும் புதுமுக தொழில்முனைவோர்கள் பற்றி எழுத இருக்கிறோம்.

ஸ்டார்ட் அப் பார்த மூலம், அடுத்த பெரிய தொழில்முனைவோர் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர்களை கண்டறியும் பயணத்தை தொடர இருக்கிறோம்.

இந்தப்பகுதியில் இந்தியா முழுவதும் உள்ள துணிச்சல் மிகு தொழில்முனைவோர்கள் பற்றி எழுத உள்ளோம். எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த தொழில்முனைவோர் பற்றி பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

யுவர்ஸ்டோரி குழு

Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக