கழுதைப்பால் விலை ரூ.5000-7000; கழுதைப் பண்ணை வைத்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்!
குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த திரன் சோலங்கி தன் கிராமத்தில் கழுதைப் பண்ணை வைத்து ஒரு லிட்டர் கழுதப்பாலை ரூ.7,000 வரை விலை வைத்து விற்று மாதம் ரூ.2-3 லட்சம் வரை சம்பாதிக்கிறார்.
குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த திரன் சோலங்கி தன் கிராமத்தில் கழுதைப் பண்ணை வைத்து ஒரு லிட்டர் கழுதப்பாலை ரூ.7,000 வரை விலை வைத்து விற்று மாதம் ரூ.2-3 லட்சம் வரை சம்பாதிக்கிறார்.
என்.டி.டிவி. ஊடகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியின் படி, இவரது பண்ணையில் 42 கழுதைகள் உள்ளன. அவர் கூறும்போது,
“எனக்கு சில தனியார் வேலைகள் கிடைத்தன, ஆனால் ஊதியம் எனது குடும்பச் செலவுகளை ஈடுசெய்யவே போதவில்லை. இந்த நேரத்தில், தென்னிந்தியாவில் கழுதை வளர்ப்பு பற்றி நான் அறிந்தேன். நான் சிலரைச் சந்தித்து 8 மாதங்களுக்கு முன்பு எனது கிராமத்தில் இந்தப் பண்ணையை அமைத்தேன்.
"நான் முதலில் 20 கழுதைகளுடன் ரூ.22 லட்சம் முதலீட்டுடன் இந்தத் தொழிலை தொடங்கினேன். ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டேன். முதல் 5 மாதங்களில் வருமானம் வரவில்லை ஏனெனில் கழுதைப்பாலுக்கான தேவை குஜராத்தில் இல்லை."
இதனையடுத்து, தென் இந்தியாவில் உள்ள கழுதைப்பால் தேவைப்படும் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டேன். இப்போது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கழுதைப்பால் சப்ளை செய்கிறேன், என்றார்.
காஸ்மெடிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு இவர் கழுதைப்பாலை விற்கிறார். பசும்பால் லிட்டருக்கு ரூ.65 என்றால் கழுதைப்பால் லிட்டருக்கு ரூ.5,000 முதல் ரூ.7000 வரை விலை வைத்து விற்க முடிகிறது.
இதனை ஃப்ரீசர்களில் வைத்துப் பாதுகாப்பதோடு கழுதைப்பால் பவுடரையும் சோலங்கி தயாரித்து வருகிறார். கழுதைப்பால் பவுடர் விலை கிலோவுக்கு ரூ.1 லட்சம் வரை போகும் என்கிறார் சோலங்கி.
இப்போது ரூ.38 லட்சம் முதலீடு செய்துள்ள சோலங்கி, தன் பண்ணையில் கழுதைகள் எண்ணிக்கையை 42 ஆக அதிகரித்துள்ளார்.
கழுதைப்பால் பயன்கள் பற்றி இதுவரை உள்ள கதையாடல்கள்:
எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்ததாக கர்ண பரம்பரை உண்டு. மருத்துவத் தந்தையான பண்டைய கிரேக்கத்தின் ஹிப்போகிரேட்ஸ் கழுதைப்பால் மூக்கிலிருந்து ரத்தம் வழிதல், விஷமுறிவு, லிவர் பிரச்சனைகள், தொற்று மற்றும் காய்ச்சல்களுக்கு நல்ல மருந்து என்று கூறியதாகவும் கதைகள் உண்டு.
மனித பாலுக்கு நிகரான குணம் கொண்ட இந்த பால் பழங்காலத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அன்று பொறியாளர்; இன்று பால் பண்ணை அதிபர் - Gau Organics-ன் தனித்துவ வெற்றிக் கதை!