ஸ்டார்ட்-அப் தொழிலுக்கு ஏற்ற சூழலமைவு - சென்னைக்கு 18-வது இடம்!
சர்வதேச அளவில் ஸ்டார்ட்-அப் தொழில் முனவுக்கான சூழலமைவு குறித்து ஸ்டார்ட்-அப் ஜெனோம் (start-up genome) மற்றும் உலகத் தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பு அமைப்பின் (Glolbal Start-up Eco System) அறிக்கையில் சென்னைக்கு 18வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆசிய பிராந்தியத்தில் ஸ்டார்ட்அப்-களுக்கேற்ற சூழமைவு உள்ள நகரங்கள் பட்டியலில் சென்னை 18-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக ஸ்டார்ட்-அப் ஜெனோம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் ஸ்டார்ட்-அப் தொழில் முனவுக்கான சூழலமைவு குறித்து 'ஸ்டார்ட்-அப் ஜெனோம்' (start-up genome) மற்றும் உலகத் தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பு அமைப்பின் (Glolbal Start-up Eco System) அறிகையில் சென்னைக்கு 18வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 50 நாடுகளில் 290 ஸ்டார்ட்-அப் பொருளாதாரச் சூழல் குறித்தும் 35 ஸ்டார்ட்-அப்கள் குறித்தும் ஆய்வு செய்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். ஸ்டார்ட் அப் ஜெனோம் என்பது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வெற்றிகரமாகச் செயல்படவும், அதன் வளர்ச்சிக்கான சூழமைவை உருவாக்கவும் செயல்பட்டு வருகிறது.
வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப் பொருளாதாரச் சூழலமைவு கொண்ட நகரங்களில் சென்னை மாநகரம் 21ம் இடத்திலிருந்து 30ம் இடத்திற்குள் உள்ளது. 2021ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் சூழலமைவு மூலம் தமிழ்நாடு ரூ.2,27,440 கோடி திரட்டியிருப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஈக்கோ சிஸ்டம் என்று பொதுவாக அழைக்கப்படும் பொருளாதார சூழல் மதிப்பு என்பது பொருளாதார தாக்கம் மற்றும் வெளியேறிய ஸ்டார்ட்-அப்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் கணக்கிடப்படுவதாகும்.
குறைந்த ஊதியத்தில் திறன்மிக்க பணியாளர்கள் என்ற அளவீட்டில் சென்னை சர்வதேச அளவில் 25 இடங்களுக்குள் ஒன்றாக உள்ளது. நிதி முதலீட்டிற்கான சூழலமைவில் சர்வதேச அளவில் 20 இடங்களுக்குள் சென்னை உள்ளது. திறன்மிகு பணியாளர்கள் என்ற மதிப்பீட்டில் சென்னை ஆசிய அளவில் 25 இடங்களுக்குள் உள்ளது.
சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் ஸ்டார்ட்-அப் வளர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தி வெளியீடு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
துபாயில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஸ்டார்ட் அப் ஒருங்கிணைப்பு மையம் மூலம் தமிழ்நாட்டிலிருந்து ஸ்டார்ட் அப்கள் துபாய் சென்று அங்குள்ள வாய்ப்புகளைப் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும்ம் தமிழ்நாட்டின் பட்டியலினத்தவர் பழங்குடியினர்களின் மேம்பாட்டிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நிதியம் முன்னோடியான ஒரு செயல்பாடாகத் திகழ்கிறது.
மேலும், நிதி ஆயோக் அமைப்பின் கீழ் செயல்படும் அடல் புத்தாக்க மிஷன் 2023-ம் ஆண்டில் ஸ்டார்ட் அப் சூழலமைவுக்கான செயல் திட்டங்களுக்காக சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.
‘சென்னைக்கு வருகிறது உங்கள் யுவர்ஸ்டோரி' - ஜூலை மாதம் தமிழ்நாட்டின் ப்ராண்ட் கதைகளைக் கொண்டாடத் தயாராகுங்கள்!