இளம் ஸ்டார்ட் அப்'களை கண்டறிந்து ஊக்குவிக்க 'விதை’ ஆக்சிலரேட்டர் நிறுவனம் சென்னையில் துவக்கம்!
தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதுமையான எண்ணங்கள் கொண்ட இளம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் நோக்கத்துடன் புதிய ஆக்சிலரேட்டர் நிறுவனம் `Vidhai' துவக்கப்பட்டுள்ளது.
தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதுமையான எண்ணங்கள் கொண்ட இளம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் நோக்கம் கொண்ட புதிய ஆக்சிலரேட்டர் நிறுவனம் 'விதை' துவக்கப்பட்டுள்ளது. மாநில அமைச்சர் தா.மோ.அன்பரசன் இதன் துவக்க விழாவில் பங்கேற்று நிறுவனத்தை அறிமுகம் செய்தார்.
ஸ்டார்ட் அப் துறையில் அனுபவம் மிக்க, ஹரிஹரன் வேதமூர்த்தி மற்றும் சமீர் பரத் ராம் இணைந்து விதை நிறுவனத்தை துவக்கியுள்ளனர். இதன் ஆலோசனை குழுவில், மகிந்திரா நிறுவன முன்னாள் செயல் இயக்குனர் அருண் கே.நந்தா, முதலீட்டாளர்கள் சபரீசன் வேதமூர்த்தி, ரவி மரிவாலா உள்ளிட்டோர் உள்ளனர்.
தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எண்ணம் கொண்ட் ஸ்டார்ட் அப் நிறுவனர்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது. இளம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்வதற்கு தேவையான மேடையாக இந்நிறுவனம் விளங்கும்.
கடந்த கால அனுபவம் மூலம் வழிகாட்டுவது, முதலீட்டாளர்களை அறிமுகம் செய்வது, வெற்றிகரமாக நிதி திரட்டும் சுழற்சியை புரிந்து கொள்ள உதவுவது ஆகிய சேவைகளை 'விதை` வழங்கும். மேலும், ஸ்டார்ட் அப் சூழலில் உள்ள அமைப்புகளுடன் இணைந்து, பயிலறங்குகள், கண்காட்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்கள்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில எம்.எஸ்.எம்.இ துறை அமைச்சர் தா.மோ.அம்பரசன் நிறுவனத்தை அறிமுகம் செய்தார். இளம் தொழில்முனைவோரை ஆதரிக்கும் இத்தகைய முயற்சி வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் தெரிவித்தார்.
”வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் சூழலில், இந்தியா சர்வதேச அளவில் முக்கியமாக திகழ்கிறது. ஆக்சிலரேட்டர்கள் மற்றும் இன்குபேட்டர்களும் அதிகரித்து வருகின்றன. இந்தியாவை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல ஸ்டார்ட் அப்'களுக்கு உதவுவதோடு, இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் கவனம் செலுத்தி ஸ்டார்ட் அப் தொழில்நுட்பத்தை ஜனநாயகமயமாக்க இருக்கிறோம்,” என்று 'விதை' நிறுவனர் ஹரிஹரன் வேதமூர்த்தி தெரிவித்தார்.
விதை நிறுவனத்தில் பங்கு வகிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக சபரீசன் வேதமூர்த்தி மற்றும் அருண் கே.நந்தா தெரிவித்தனர்.
Edited by Induja Raghunathan