Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

இந்தியாவின் அடுத்த SaaS மையமாக கோவையை மாற்றும் Kovai.co

கோவையில் உலகத் தரம் வாய்ந்த SaaS ஸ்டார்ட் அப்பை உருவாக்கும் முயற்சியில் Kovai.co நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் அடுத்த SaaS மையமாக கோவையை மாற்றும் Kovai.co

Thursday December 03, 2020 , 3 min Read

சரவணகுமார் தொழில்நுட்ப வல்லுநர். இவர் BizTalk ஆலோசகர். பெருநிறுவனங்கள் தங்கள் வணிக செயல்பாடுகளை ஆட்டோமேட் செய்ய பிஸ்டாக் உதவுகிறது.


சரவணா ஆரம்பத்தில் மைக்ரோசாப்ட், அக்சென்சர், ஃபிடலிட்டி இண்டர்நேஷனல் போன்ற நிறுவனங்களில் கிட்டத்தட்ட எட்டாண்டுகள் இந்த மென்பொருளைப் பயன்படுத்தினார். நிறுவன பாதுகாப்பு, கட்டுப்பாடு போன்றவற்றைப் பொருத்தவரை பல்வேறு இடைவெளி இருப்பதை உணரமுடிந்தது என்று யுவர்ஸ்டோரி உடன் பகிர்ந்துகொண்டார்.

1

2011-ம் ஆண்டு இந்தத் தொழில்நுட்ப இடைவெளியைப் பூர்த்திசெய்யும் விதமாக தொழில்முனைவு முயற்சியில் ஈடுபட விரும்பி Kovai.co நிறுவனத்தை நிறுவினார்.

“படிப்படியாக இந்த நிறுவனம் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியது. 2013-ம் ஆண்டில் ஷெல், போயிங் என மிகப்பெரிய ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்த பிராடக்டிற்கான சந்தை தேவை நிலவுவதை இந்த ஒப்பந்தங்கள் உணர்த்தின,” என்கிறார் சரவணா.

2014-ம் ஆண்டு கோவையில் முதல் அலுவலகத்தை நிறுவினார்.

2
“கோவையில் திறமையான ஊழியர்களைக் கண்டறிவது கடினம் என்பதே பலரது கருத்தாக இருந்தது. சென்னை அல்லது பெங்களூருவிற்கு மாற்றலாக வேண்டும் என்றார்கள். என்னுடைய சொந்த பகுதியில் இருப்பவர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்று நினைத்தேன்,” என்று சரவணா குறிப்பிடுகிறார்.

அவர் மேலும் கூறும்போது,

“கோவையில் ஊழியர்கள் வேலையை விட்டு விலகும் விகிதம் மிகக்குறைவு. இந்திய அலுவலகத்தில் 150 ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆரம்பத்தில் இருந்து எங்களுடன் இணைந்துள்ளார்கள்,” என்றார்.

2015-ம் ஆண்டில் Kovai.co இரண்டாம் நிலை நகரத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு (SEZ) மாற்றலாகியது. அடுத்தடுத்த கட்டங்களுக்கு படிப்படியாக விரிவடைந்தது.

“2016-ம் ஆண்டு வரை வேறு எந்த பிராடக்டையும் அறிமுகப்படுத்தவில்லை. BizTalk360-யில் மட்டுமே முழு கவனமும் இருந்தது. பெரிய நிறுவனங்கள் சந்தித்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப்பட்டது,” என்கிறார்.

ஆனால் Microsoft Azure, Cloud போன்ற வாய்ப்புகள் உருவான நிலையில் Kovai.co நிறுவனம், 2017-ம் ஆண்டு Serverless360, 2018-ம் ஆண்டு Document360 ஆகிய இரண்டு பிராடக்டுகளை தங்களது தொகுப்பில் சேர்த்துக்கொண்டது.


இந்த இரண்டு பிராடக்டுகளுமே பி2பி SaaS பிரிவில் செயல்பட்டது. நிறுவனங்கள் தங்கள் வணிக செயல்முறைகள், ஆவணப்படுத்துதல், வாடிக்கையாளர் சப்போர்ட் என முழுமையான நடவடிக்கைகளை நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் இவை உதவுகின்றன.

3

வளர்ச்சி

Kovai.co நிறுவனத்தின் பி2பி வாடிக்கையாளர் தொகுப்பு 1,200 என்கிற எண்ணிக்கையில் வளர்ச்சியடைந்து 60 நாடுகளைச் சென்றடைந்துள்ளது.


இந்நிறுவனத்தின் 40 சதவீத வாடிக்கையாளர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். ஐரோப்பா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் 30 சதவீதம் பங்களிக்கின்றனர். Microsoft, Vodafone, Pfizer, HP, Siemens, BBC, Asics, Ralph Lauren போன்ற முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக இணைந்துள்ளனர்.


இந்த ஸ்டார்ட் அப் தொடர்ந்து சுயநிதியில் இயங்கி வரும் நிலையில் ஆண்டு வருவாய் விகிதம் 10 மில்லியன் டாலராக உள்ளது. நிறுவனர் தங்கியுள்ள லண்டன் பகுதியில் ஒரு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

“எங்கள் சராசரி வணிக ஒப்பந்த அளவு 10,000 டாலரில் இருந்து 1,00,000 டாலராக அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர் தொகுப்பை விரைவாக அதிகப்படுத்த உதவும் வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம்,” என்றார்.

கடந்த இரண்டாண்டுகளில் Kovai.co நிறுவனத்தின் முக்கிய பிராடக்டாக Document360 மாறியுள்ளது. தேடல், நிகழ்நேர தரவு பகுப்பாய்வு, பயிற்சி, தொழில்நுட்ப ஆவணப்படுத்துதல் போன்றவற்றை வழங்கும் இந்த மென்பொருள் 300 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

சரவணா விவரிக்கும்போது,

“ஆவணமாக்கலை (Documentation) ஒழுங்குபடுத்தவேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமாக உள்ளது. குறிப்பாக கோவிட்-19 தொற்றுக்குப் பிறகு பலரும் இதில் கவனம் செலுத்துகின்றனர். தொலைதூரங்களில் இருந்து பணிபுரியும் சூழலுக்கு Document360 மிகவும் பொருத்தமானதாக உள்ளது. இன்றைய நவீன தலைமுறையினர் சப்போர்ட் உதவியை விரும்புவதில்லை. இதனால் சுயமாக இதனை உருவாக்கிக்கொள்ளவேண்டிய அவசியம் நிலவுகிறது. வாடிக்கையாளர் சப்போர்ட் தொடர்பான செலவும் குறைகிறது. அதேசமயம் கேள்விகளுக்கான பதிலையும் விரைவாகக் கண்டறியமுடியும்,” என்றார்.
4

Kovai.co நவம்பர் மாதம் உதய்பூரைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான Cerebrata நிறுவனத்தை வாங்கியது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களை இந்நிறுவனம் வெளியிடவில்லை. Cerebrata நிறுவனத்தின் சொத்துக்கள், IP, குழு போன்றவற்றை Kovai.Co எடுத்துக்கொள்ள உள்ளது.


இந்த நடவடிக்கையானது Kovai.co நிறுவனத்தின் Microsoft Azure Management Tools தொகுப்பை விரிவுபடுத்தவும் 250 வாடிக்கையாளர்களைக் கூடுதலாக இணைக்கவும் சர்வதேச அளவில் முக்கிய சந்தைகளில் செயல்பாடுகளைத் தொடங்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இரு நிறுவனமும் ஒரே பிரிவில் ஒரே மாதியாக செயல்படுகின்றன. எனவே நாங்கள் ஒன்று சேர்ந்து பெரியளவில் செயல்பட விரும்புகிறோம். Cerebrata தனிநபர் டெவலப்பர்களில் கவனம் செலுத்துகிறது. நாங்கள் பெரிய நிறுவனங்களில் கவனம் செலுத்துகிறோம். இரு நிறுவனங்களின் பிராடக்டுகளும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதால் மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக உணர்கிறோம். Cerebrata நிறுவனத்தை வாங்கியதன் மூலம் மொத்த வருவாய் 15-20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார் சரவணா.

Kovai.co பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“முன்பைக் காட்டிலும் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அடுத்த மூன்றாண்டுகளில் வருவாய் இருமடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார்.
5

கோவை SaaS மையம் ஆகவேண்டும்

இரு நிறுவனங்களின் இணைப்பானது கோவையை இந்தியாவின் அடுத்த SaaS மையமாக மாற்றவேண்டும் என்கிற Kovai.co இலக்கு எட்டப்படுவதை துரிதமாக்கும்.

“ஃப்ரெஷ்வொர்க் நிறுவனம் சென்னைக்கு என்ன செய்ததோ அதையே நாங்கள் கோவைக்கு செய்ய விரும்புகிறோம்,” என்றார்.

அவர் மேலும் கூறும்போது,

“ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்திற்கு உட்புற வடிவமைப்பு செய்த அதே நிறுவனம்தான் 40,000 சதுர அடி கொண்ட எங்கள் அலுவலகத்தையும் அழகுப்படுத்தியது. உள்கட்டமைப்பிற்காக நாங்கள் 1.2 மில்லியன் டாலர் செலவு செய்துள்ளோம். கோவையில் இதற்கு முன்பு இப்படி ஒரு அலுவலகம் அமைக்கப்பட்டதில்லை,” என்றார்.

வரும் ஆண்டுகளில் இந்தியாவிலும் உலகளவிலும் SaaS வளர்ந்து வரும் பிரிவாக இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் Kovai.co செயல்படுகிறது.

“பாரம்பரியமாக செயல்படும் வணிகங்கள்கூட தற்போது SaaS சார்ந்தே செயல்பட்டு வருகிறது. கடந்த இருபதாண்டு காலம் தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் அடுத்த பத்தாண்டுகள் எளிமையான, பிராடக்ட் சார்ந்த, டெவலப்பர்களில் கவனம் செலுத்தும் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும்,” என்கிறார் சரவணா.


ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில்: ஸ்ரீவித்யா