‘ஸ்மார்ட் டாய்லெட்’ டூ ‘ராக்கெட்’ - ஸ்டார்ட் அப் இந்தியா மாநாட்டில் புதுமை ஐடியாக்கள்!
மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய செயலிகள், நடமாடும் செங்கல் தயாரிப்பு இயந்திரம். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக்கூடிய பலாப்பழ மாவு உள்ளிட்ட ஐடியாக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
கார்பன் இழைப் பாகங்களைத் தொடர்ந்து அச்சிடக்கூடிய 3டி பிரிண்டர், இண்டெர்நெட் ஆப் திங்சை பயன்படுத்தும் ஸ்மார்ட் டாய்லெட், விண்வெளி ஆய்வுக்கான ராக்கெட் உள்ளிட்டவை, ‘Prarambh’- ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய செயலிகள், நடமாடும் செங்கல் தயாரிப்பு இயந்திரம். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக்கூடிய பலாப்பழ மாவு, மக்கும் தன்மை கொண்ட தனிநபர் பாதுகாப்புக் கவசம் உள்ளிட்டவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த ஐடியாக்களை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயர் அதிகாரிகள், முதலீட்டாளர்கள் வர்த்தகத் தலைவர்கள் முன் எடுத்துரைத்தன.
“இளைஞர்களின் கனவு மற்றும் ஆற்றல் மிகவும் பெரியது. நீங்கள் அதற்கான மகத்தான உதாரணங்களாக விளங்குகிறீர்கள். இந்த நம்பிக்கை இவ்விதமாகவே தொடர வேண்டும்,” என பிரதமர் நரேந்திர மோடி ஸ்டார்ட் அப் நிறுவனர்களிடம் கூறினார்.
“இந்த ஸ்டார்ட் அப் வகைகளை பாருங்கள். கார்பன் 3ட்- பிரிண்டிங், செயற்கைக்கோள் ஏவுவாகனம், இ-டாய்லெட், மக்கும் தன்மை கொண்ட பிபி.இ கிட், மாற்றுத்திறனாளிகளுக்கான செயலி ஆகியவை இதில் அடக்கம். உங்கள் ஸ்டார்ட் அப் பற்றி நீங்கள் கூறியவை அனைத்தும் எதிர்காலத்தை மாற்றும் எண்ணத்தை அளிக்கின்றன. இது பெரும் ஆற்றலாகும்,” என்று மோடி மேலும் கூறினார்.
இத்தகைய நிறுவனங்களில் ஒன்றாக, தினேஷ கனகராஜ்-ன் Fabheads விளங்குகிறது. சென்னையச் சேர்ந்த இந்நிறுவனம், கார்பன் இழை 3டி பிரிண்டிங் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. இதன் தயாரிப்பு பல்வேறு பயன்பாட்டைக் கொண்டுள்ளது.
உதாரணமாக, ட்ரோன்கள் செயல்பாட்டில் எடை ஒரு விஷயமாக இருக்கிறது. கார்ப்ன இழை பாகங்கள் கொண்ட ட்ரோன் லேசான எடையில் அதிக ஆற்றல் கொண்டிருக்கும்.
புதுமையான உற்பத்தித் தொழில்நுட்பம் கொண்டுள்ள இந்நிறுவனம், இந்திய ட்ரோன் நிறுவனங்கள் கூட்டு முயற்சிக்கு விரும்பி நாடப்படுகிறது. தனது பங்குதார நிறுவனம் மூலம் இந்தியக் கடற்படைக்கும் ட்ரோன்களை சப்ளை செய்கிறது.
“கார்பன் இழை டிரோன் ஒரு நாளில் உருவாக்கப்படலாம். மற்ற தயாரிப்பு முறைகளில் இதற்கு 4 அல்லது 5 நாட்கள் ஆகலாம்,” என்கிறார் Fabheads நிறுவனர் கனகராஜ். இவர் முன்னாள் இஸ்ரோ பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல, போபாலில், அசுடோஷ் கிரி, தொழில்நுட்பம் சார்ந்த, சுகாதார ஸ்டார்ட் அப் நிறுவனமான Fresh Rooms-ஸை உருவாக்கியுள்ளார். கட்டணக் கழிப்பறையாக செயல்படும் இது பரிசுப்புள்ளிகளையும் கொண்டுள்ளது. பிரெஷ் ரூம்ஸ் இண்டெர்நெட் ஆப் திங்சை பயன்பத்துகிறது. இதன் மூலம், தூய்மையை கடைப்பிடிக்கிறது.
பொதுக் கழிப்பறைகளில் தூய்மை பிரச்சனைக்குத் தீர்வு அளிக்கும் பிரெஷ்ரூம்ஸ், பயனாளிகள் லகேஜ் பாதுகாப்பிற்கும் வழி செய்கிறது. இதன் செயலி அருகாமை டாய்லெட்டை அடையாளம் காட்டுகிறது, 2024ம் ஆண்டு வாக்கில் 5,000 ஸ்மார்ட் டாய்லெட்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளார்.
மற்றொரு தொழில்முனைவோரான, கவுரவ் மிட்டல், தனது ஜிஞ்சர் மைண்ட் ஸ்டார்ட் அப் சார்பாக, Eye-D எனும் ஏ.ஐ நுட்பம் சார்ந்த தீர்வை உருவாக்கியுள்ளார். இது பார்வை குறைபாடு கொண்டவர்கள் பொருட்களைக் கண்டறிய, போன் மூலம் படிக்க உதவுகிறது.
இந்த செயலி பார்வை குறைபாடு கொண்டவர்களுடன் உரையாடுவதன் மூலம் அவர்களுக்கு வழிகாட்டுகிறது. மாற்றுத்திறனாளிகளிக்கான அணிகணிணி தீர்வுகளையும் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. பயனாளிகள் செய்தித்தாளை ஸ்கேன் செய்தால் அதன் செய்திகளை செயலி வாசித்துக்காட்டும். நிறுவனம் உலகம் முழுவதும் 70,000க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி பயனாளிகளை கொண்டுள்ளது.
ஐதராபாத்தைச்சேர்ந்த பவன் குமார் சன்ந்தனா, ராகெட்களை தயாரிக்கும் தனது ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை அறிமுகம் செய்தார். விமானச் சேவை போல, விண்வெளிச் சேவையை நம்பகமானதாக்க இந்த நிறுவனம் முனைகிறது.
ஸ்கைரூட் நிறுவனம், அண்மையில் கலாம்-5 ராக்கெட்டை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இஸ்ரோவின் ராக்கெட் வடிவமைப்பு மையத்தின் முன்னாள் பொறியாளர்கள் இந்நிறுவனத்தை துவக்கியுள்ளனர்.
“ஒரு நாளில் அசம்பிள் செய்து விண்வெளியில் ஏவக்கூடிய மேம்பட்ட ராக்கெட்களை உருவாக்குகிறோம்,” என்கிறார் சந்தனா.
இதே போல, ஹரியானாவின், சதீஷ் குமார் மற்றும் விலாஸ் சிகாரா உருவாக்கிய நடமாடும் செங்கல் தயாரிப்பு இயந்திரம் (SnPC Machines) எந்த இடத்திலும் செங்கல் தயாரிக்கும் வாய்ப்பை அளிக்கிறது. இந்த இயந்திரம் மணிக்கு 12,000 செங்கல்கள் தயாரிக்கும் திறன் கொண்டது. மற்ற இயந்திரங்களுடன் ஒப்பிடும் போது, இது உற்பத்திச் செலவை பாதியாக குறைக்கும் திறன் கொண்டுள்ளது.
இந்த இயந்திரத்தை இண்டெர்நெட் ஆப் திங்ஸ் மூலம் இயக்கலாம் என்கிறார் சிகாரா. டாக்டர்.பவன் மெகரோத்ரா உருவாக்கியுள்ள தனிநபர் பாதுகாப்புக் கவசம் மக்கும் தன்மை கொண்டுள்ளது. இது, சுகாதாரப் பணியாளர்கள், நகராட்சி ஊழியர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடியது. இதை அணியும் போது எளிதாகவும் உணரலாம்.
தொகுப்பு: தமிழில்- சைபர்சிம்மன்