Stock News: ஆட்டம் காணும் அதானி பங்குகள்; இந்திய பங்குச்சந்தை பின்னடைவு!
இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை நிலவரம் (25/05/2023):
தொடர்ந்து 3 நாட்களாக உயர்வுடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தை, இன்று கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 115.46 புள்ளிகள் சரிந்து 61,658 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 31.60 புள்ளிகள் சரிந்து 18,256 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

சரிவுக்கான காரணம்:
எல்ஐசி நிறுவனம் நான்காம் காலாண்டில் 466 சதவீத லாபத்தை பதிவு செய்ததை அடுத்து பங்குச்சந்தையில் அதன் மதிப்பு 3 சதவீதம் வரை உயர்ந்தது. இருப்பினும் நாட்டின் முன்னணி நிறுவனமான அதானி குழும பங்குகள் 3 நாள் உயர்வுக்குப் பிறகு இன்று சரியத்தொடங்கியது பங்குச்சந்தைக்கு பின்னடைவாக அமைந்தது.
மேலும், பொதுத்துறை வங்கி பங்குகள் 0.59 சதவீதம், ஆட்டோ பங்குகள் 0.34 சதவீதமும், ஐடி பங்குகள் 0.33 சதவீதமும், மீடியா மற்றும் ஆயில் நிறுவன பங்குகள் 0.32 சதவீதமும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
பிரிட்டானியா
பவர்கிரிட்
பஜாஜ் ஆட்டோ
ஐடிசி
நெஸ்லே இந்தியா
கோடக் மஹிந்திரா பேங்க்
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
பார்தி ஏர்டெல்
எல்&டி
இறக்கம் கண்ட பங்குகள்:
அதானி எண்டர்பிரைசஸ்
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்
டாடா மோட்டார்ஸ்
அதானி போர்ட்ஸ்
சன் பார்மா
மாருதி
ஓஎன்ஜிசி
ஆக்சிஸ் பேங்க்
டாடா ஸ்டீல்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் குறைந்து 82.66 ஆக உள்ளது.

Gold Rate Chennai: நகைப்பிரியர்களுக்கு நற்செய்தி; மிஸ் பண்ணிடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!