Stock News: பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி - சென்செக்ஸ் 700+ புள்ளிகள் சரிவு!
சர்வதேச அளவிலான பாதகப் போக்குகள் உள்ளிட்ட காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கும் மேலாக சரிந்துள்ளது.
சர்வதேச அளவிலான பாதகப் போக்குகள் உள்ளிட்ட காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கும் மேலாக சரிந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.27) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 343 புள்ளிகள் சரிந்து 75,847.46 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 108.95 புள்ளிகள் சரிந்து 22,983.25 ஆக இருந்தது.
வாரத்தின் தொடக்க நாளிலேயே பங்குச் சந்தையில் கடும் விழ்ச்சி கண்டு வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை கூட்டியுள்ளது.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 776.29 புள்ளிகள் (1.02%) சரிந்து 75,414.17 ஆகவும், நிஃப்டி 249.80 புள்ளிகள் (1.08%) சரிந்து 22,842.40 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை சரிவுடன் நிறைவடைந்த நிலையில், ஆசிய பங்குச் சந்தைகளான சியோல் மற்றும் டோக்கியோ பங்குச் சந்தைகளில் தடுமாற்றமும், ஹாங்காங், ஷாங்காய் ஆகிய பங்குச் சந்தைகளில் ஓரளவு ஏற்றமும் நிலவுகிறது.
அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முடிவு, மத்திய அரசு பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு உள்ளிட்ட காரணங்களால், நிச்சயமற்ற தன்மையின் எதிரொலியாக பங்குச் சந்தையில் இந்த வாரம் முழுவதுமே தடுமாற்றம் இருக்கலாம் என வர்த்தகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஏற்றம் காணும் பங்குகள்:
ஐசிஐசிஐ பேங்க்
இந்துஸ்தான் யூனிலீவர்
நெஸ்லே இந்தியா
எஸ்பிஐ
இறங்கு முகம் காணும் பங்குகள்:
விப்ரோ
இன்ஃபோசிஸ்
என்டிபிசி
டாடா ஸ்டீல்
கோடக் மஹிந்திரா பேங்க்
பாரதி ஏர்டெல்
ஐடிசி
டிசிஎஸ்
ஆக்சிஸ் பேங்க்
மாருதி சுசுகி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டாடா மோட்டார்ஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 பைசா வீழ்ச்சி கண்டு ரூ.86.44 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan