Stock News: பங்குச் சந்தையில் திடீர் கடும் வீழ்ச்சி - காரணம் என்ன?
இந்திய பங்குச் சந்தையில் ஏற்றத்துடன் ஆரம்பித்த வர்த்தகம் சில நிமிடங்களிலேயே கடும் வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் கடும் சரிவு நிலவுகிறது. பல்வேறு நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சி கண்டுள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் ஏற்றத்துடன் ஆரம்பித்த வர்த்தகம் சில நிமிடங்களிலேயே கடும் வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் கடும் சரிவு நிலவுகிறது. பல்வேறு நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சி கண்டுள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.21) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 224.28 புள்ளிகள் உயர்ந்து 77,297.72 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 81.55 புள்ளிகள் உயர்ந்து 23,426.30 ஆக இருந்தது.
ஆனால், இந்தப் போக்கு சட்டென மாறி, பச்சைக்கு பதிலாக சிவப்பு விளக்கு எரியத் தொடங்கியது. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் தற்போது கடும் வீழ்ச்சி நிலவி வருகிறது.
இன்று முற்பகல் 11.10 மணியளவில் சென்செக்ஸ் 805.51 புள்ளிகள் (1.05%) சரிந்து 76,267.93 ஆகவும், நிஃப்டி 189.25 புள்ளிகள் (0.81%) சரிந்து 23,155.50 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் டோக்கியோ, ஹாங்காங், ஷாங்காய் மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவுகிறது. எனினும், அது இந்தியப் பங்குச் சந்தையில் எதிரொலிக்கவில்லை.
எதிர்வரும் மத்திய பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகளுடன். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், அவரது பொருளாதார நடவடிக்கைகள் குறித்த கலக்கமும் இந்திய பங்குச் சந்தையில் எதிரொலிப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்றம் காணும் பங்குகள்:
அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்
ஐடிசி
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
விப்ரோ
நெஸ்லே இந்தியா
ஏசியன் பெயின்ட்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
எல் அண்ட் டி
இன்ஃபோசிஸ்
சன் பார்மா
டெக் மஹிந்திரா
டிசிஎஸ்
டாடா மோட்டார்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
பாரதி ஏர்டெல்
மாருதி சுசுகி
ஆக்சிஸ் பேங்க்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 17 பைசா உயர்ந்து ரூ.86.28 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan