Stock News: ட்ரம்ப் தாக்கத்தைத் தாண்டி மீண்டெழும் பங்குச் சந்தை!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிம் தாக்கத்தைத் தாண்டி, வீழ்ச்சிக்குப் பிறகு சற்றே மீளத் தொடங்கியிருக்கிறது இந்தியப் பங்குச் சந்தை. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வு கண்டுள்ளன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிம் தாக்கத்தைத் தாண்டி, வீழ்ச்சிக்குப் பிறகு சற்றே மீளத் தொடங்கியிருக்கிறது இந்தியப் பங்குச் சந்தை. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வு கண்டுள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.23) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 202.87 புள்ளிகள் சரிந்து 76,202.12 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 64.7 புள்ளிகள் சரிந்து 23,090.65 ஆக இருந்தது.
எனினும், உடனடியாக இந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு ஏற்றம் பெறத் தொடங்கியது, பங்கு வர்த்தகர்கள் மத்தியில் நிம்மதியைத் தந்துள்ளது.
இன்று முற்பகல் 11.10 மணியளவில் சென்செக்ஸ் 203.29 புள்ளிகள் (0.27%) உயர்ந்து 76,608.28 ஆகவும், நிஃப்டி 73.30 புள்ளிகள் (0.32%) உயர்ந்து 23,228.65 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்கா மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளில் கலவையான போக்குகளே நீடிக்கின்றன. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அடுத்தடுத்த நகர்வுகள் தொடர்ந்து பங்குச் சந்தைகளை ஆட்டம் காண வைத்துள்ளது. ஆனாலும், இந்தியப் பங்குச் சந்தை வேறு காரணங்களால் மீளத் தொடங்கியுள்ளன. ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட நிறுவனங்களின் காலாண்டு வருவாய் முடிவுகளும், ஐடி நிறுவனப் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வத்தாலும் மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் சாதகப் போக்கு நிலவுகிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்
விப்ரோ
டெக் மஹிந்திரா
சன் பார்மா
ஏசியன் பெயின்ட்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
டாடா மோட்டார்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
இன்போசிஸ்
ஐசிஐசிஐ பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
என்டிபிசி
கோடக் மஹிந்திரா பேங்க்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
நெஸ்லே இந்தியா
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
எல் அண்ட் டி
எஸ்பிஐ
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா குறைந்து ரூ.86.40 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan