Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Stock News: சென்செக்ஸ், நிப்டி பின்னடைவு- அதானி குழும பங்குகள் சரிவு...

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 85 புள்ளிகள் பின்னடைந்து 80,025.34 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 20.30 புள்ளிகள் குறைந்து 24,201.60 புள்ளிகளாகவும் உள்ளன.

Stock News: சென்செக்ஸ், நிப்டி பின்னடைவு- அதானி குழும பங்குகள் சரிவு...

Tuesday November 26, 2024 , 1 min Read

இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமையான இன்று (26-11-2024) தொடக்கத்தில் கண்ட உயர்வுகளை இழந்துள்ளது. சென்செக்ஸ் சுமார் 115 புள்ளிகளும் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு சுமார் 28 புள்ளிகளும் பின்னடைவு கண்டுள்ளன.

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:37 மணி நிலவரப்படி, 85 புள்ளிகள் பின்னடைந்து 80,025.34 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 20.30 புள்ளிகள் குறைந்து 24,201.60 புள்ளிகளாகவும் உள்ளன.

நிப்டி பேங்க் குறியீடு இன்று 116.50 புள்ளிகள் குறைய, நிப்டி ஐடி குறியீடு மட்டும் 478 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பிஎஸ்இ ஸ்மால் கேப் 150 புள்ளிகள் அதிகரித்தது. செக்டார்களில் ஆட்டோ, பவர், ஃபார்மா பங்குகள் 0.5% சரிவு கண்டன. அதானி குழுமப் பங்குகள் பின்னடைவு கண்டுள்ளன.

காரணம்:

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமை மஹாயுதி அபார வெற்றி கண்டதையடுத்து நேற்று உயர்ந்த பங்குச் சந்தை இன்று முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று வருவதால் பங்குச் சந்தை லேசான பின்னடைவு கண்டு வருகின்றன.

stock exchange

ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:

பாரத் எலெக்ட்ரானிக்ஸ்

இன்போசிஸ்

டெக் மகிந்திரா

பிரிட்டானியா

ஏஷியன் பெயிண்ட்ஸ்

இறக்கம் கண்ட பங்குகள்:

பஜாஜ் ஆட்டோ

அல்ட்ரா டெக் சிமெண்ட்

அதானி போர்ட்ஸ்

அதானி எண்டெர்பிரைசஸ்

எய்ஷர் மோட்டார்ஸ்

இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே உயர்வு:

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்து டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.28 ஆக உள்ளது.