Stock News: சரிந்தது பங்குச்சந்தை - சென்செக்ஸ் 190 புள்ளிகள் சரிவு; கச்சா, எரிவாயு பங்குகள் உயர்வு!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:45 மணி நிலவரப்படி, 80 புள்ளிகள் குறைந்து 81,892.98 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச்சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 35 புள்ளிகள் குறைந்து 25,092.90 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமையான இன்று (15-10-2024) சரிவு கண்டுள்ளன. சென்செக்ஸ் சுமார் 190 புள்ளிகள் குறைந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 25,100 புள்ளிகளுக்கும் கீழ் குறைந்தது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:45 மணி நிலவரப்படி, 80 புள்ளிகள் குறைந்து 81,892.98 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 35 புள்ளிகள் குறைந்து 25,092.90 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 121 புள்ளிகள் உயர, தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு சுமார் 23 புள்ளிகள் குறைந்துள்ளது. பிஎஸ்இ ஸ்மால் கேப் 329 புள்ளிகள் உயர்வு கண்டுள்ளன.
காரணம்:
ஆட்டோ மற்றும் மெட்டல் தொழில்துறை நிறுவனப் பங்குகள் சற்றே பின்னடைவு கண்டதால் பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் காணப்படுகின்றன.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
பீபிசிஎல்
இன்போசிஸ்
ஏஷியன் பெயிண்ட்ஸ்
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்
ஹெச்.சி.எல்.டெக்னாலஜீஸ்
இறக்கம் கண்ட பங்குகள்:
ஓ.என்.ஜி.சி.
நெஸ்லே இந்தியா
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்
ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்து டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.06 ஆக உள்ளது.