Stock News: இந்திய பங்குச்சந்தையில் அதிரடி மாற்றம்; அதானி பங்குகளின் நிலவரம் என்ன?
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய பங்குச்சந்தையானது இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய பங்குச்சந்தையானது இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம் (03/02/2023)
கடந்த வாரம் முதலே அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடி குறித்த குற்றச்சாட்டுக்களால் இந்திய பங்குச்சந்தையான கடும் சரிவை சந்தித்து வந்தது. இந்நிலையில், இன்று இந்திய பங்குச்சந்தையானது உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 297.48 புள்ளிகள் உயர்ந்து 60,229 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி46.25 புள்ளிகள் உயர்ந்து 17,654 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

உயர்வுக்கான காரணம் என்ன?
சர்வதேச அளவில் பங்குச்சந்தைகளின் சாதகமான சூழ்நிலையை அடுத்து இன்று இந்திய பங்குச்சந்தையானது நீண்ட நாட்களுக்குப் பிறகு பச்சை வண்ணத்தில் வர்த்தகமாகி வருகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு வங்கி பங்குகளின் மதிப்பு அதிகரித்துள்ளதும் இந்திய பங்குச்சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது. இன்று வங்கி நிஃப்டி 469.35 புள்ளிகள் அல்லது 1.15% உயர்ந்து 41,138.65 ஆக உள்ளது.
அதானி பங்குகளின் நிலை என்ன?
அதானி நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி நிறுவனப் பங்குகள் கடும் சரிவை கடந்த ஒரு வாரமாகச் சந்தித்துவருகிறது. இந்நிலையில் ரூ.20000 கோடி மதிப்பிலான எஃப்.பி.ஓ பங்கு விற்பனையை தொடங்கவிருந்த அதானி குழுமம் அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது.
அதானி குழும பங்குகளின் தொடர் சரிவை கணக்கில் கொண்டு, தேசிய பங்குச்சந்தையானது அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & எஸ்இஇசட் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் குறுகிய விற்பனையைக் கட்டுப்படுத்த, பிப்ரவரி 3, 2023 முதல் இந்த நிறுவனங்களை கூடுதல் கண்காணிப்பு அளவீட்டு கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 35 சதவீதம் சரிந்தன. அதானி எண்டர்பிரைசஸ் அதன் ரூ.20,000 கோடி எஃப்பிஓவை ரத்து செய்ததைத் தொடர்ந்து பங்குகளின் விலை கடுமையான வீழ்ச்சியை அடைந்துள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
டைட்டன்
இண்டஸ்இண்ட் பேங்க்
பஜாஜ் பைனான்ஸ்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
பஜாஜ் பின்சர்வ்
இறக்கம் கண்ட பங்குகள்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பவர் கிரிட்
நெஸ்லே இந்தியா
டெக் மஹிந்திரா
ஹெச்சிஎல் டெக்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் அதிகரித்து 82.70 ஆக உள்ளது.

Gold Rate Chennai: ஒரே நாளில் 720 ரூபாய் உயர்ந்தது தங்கம் விலை - சவரன் எவ்வளவு தெரியுமா?