Stock News: பங்குச்சந்தை சாதனை உயர்வு - சென்செக்ஸ் 77000 புள்ளிகளை எட்டியது!
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று திங்கட்கிழமையன்று (10-06-2024) தொடக்க நிலவரப்படி, சாதனை உயர்வு கண்டது. மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 77000 புள்ளிகள் என்ற மைல்கல்லை எட்டியது.
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று திங்கட்கிழமையன்று (10-06-2024) தொடக்க நிலவரப்படி, சாதனை உயர்வு கண்டது. மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 77000 புள்ளிகள் என்ற மைல்கல்லை எட்டியது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 387புள்ளிகள் உயர்ந்து 77,079 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடும் ஏற்றம் கண்டு 23411 புள்ளிகளாகவும் தொடக்க நிலவரப்படி இருந்தன.
பங்குச் சந்தையின் இண்டீசஸ்களில் நிப்டி பிஎஸ்யு பேங்க், நிப்டி ரியல், மற்றும் நிப்டி ஆயில் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் பங்குகள் அதிகரித்துள்ளன. ஆனால், தேசியப்பங்குச் சந்தை நிப்டி ஐடி குறியீடு 633.80 புள்ளிகள் சரிவு கண்டு 34536 புள்ளிகளாக உள்ளது.
பிஎஸ்இ மிட் கேப் 1.07% அதிகரித்தது. பிஎஸ்.இ. ஸ்மால் கேப் குறியீடு 1.27 புள்ளிகள் அதிகரித்து 49,102 புள்ளிகளாக உள்ளன.
காரணங்கள்:
அமெரிக்க வேலை வாய்ப்பு அறிக்கை பாசிட்டிவ் ஆக இருப்பதாலும் சம்பளங்களும் உயர்வதாலும் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைப்பதில் அவசரம் காட்டாததாலும் ஆசியப் பங்குச் சந்தைகளில் கலவையான நிலை உள்ளது, அதுதான் இந்தியப் பங்குச் சந்தைகளிலு பிரதிபலித்துள்ளது.
![sensex](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/share10-1717994500949.jpg?fm=png&auto=format)
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ரிலையன்ஸ்
வோடஃபோன் ஐடியா
அமர ராஜா
என்.டி.பி.சி
பவர் கிரிட்
டாடா மோட்டார்ஸ்
ஆக்சிஸ் வங்கி
இறக்கம் கண்ட பங்குகள்:
டிசிஎஸ்
விப்ரோ
இன்போசிஸ்
டெக் மகீந்திரா
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே மாற்றமடைந்து டாலர் ஒன்றுக்கு இன்று ரூ. 83.49 ஆகஉள்ளது.