Stock News: பங்குச் சந்தையில் ஏற்றம் - உயரத் தொடங்கிய ரூபாய் மதிப்பு!
சர்வதேச அளவிலான சாதகப் போக்குகளின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவி வருகிறது. பெரும்பாலான நிறுவன பங்குகளின் மதிப்பும் உயர்ந்துள்ளன.
சர்வதேச அளவிலான சாதகப் போக்குகளின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவி வருகிறது. பெரும்பாலான நிறுவன பங்குகளின் மதிப்பும் உயர்ந்துள்ளன. இதனிடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் சற்றே வெகுவாக உயரத் தொடங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.24) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 282.35 புள்ளிகள் உயர்ந்து 76,802.73 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 86.7 புள்ளிகள் உயர்ந்து 23,292.05 ஆக இருந்தது.
பங்குச் சந்தையில் இடையிடையே தடுமாற்றம் நிலவினாலும், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் தொடர்ந்து சற்றே உயர்ந்து வருவது, பங்கு வர்த்தகர்கள் மத்தியில் நிம்மதியைத் தந்துள்ளது.
இன்று முற்பகல் 11.40 மணியளவில் சென்செக்ஸ் 249.77 புள்ளிகள் (0.33%) உயர்ந்து 76,770.15 ஆகவும், நிஃப்டி 71.30 புள்ளிகள் (0.31%) உயர்ந்து 23,276.65 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தையில் வெகுவாக ஏற்றம் நிலவியது. சியோல், டோக்கியோ, ஹாங்காங், ஷாங்காய் ஆகிய ஆசிய பங்குச் சந்தைகளிலும் ஏற்றம் நிலவி வருகிறது. இந்த சாதகப் போக்கின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் சாதகப் போக்கு நிலவுகின்றன. அதேவேளையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் உயரத் தொடங்கியிருப்பது நம்பிக்கையைக் கூட்டுகிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
விப்ரோ
இந்துஸ்தான் யூனிலீவர்
இன்ஃபோசிஸ்
என்டிபிசி
டாடா ஸ்டீல்
ஐசிஐசிஐ பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
நெஸ்லே இந்தியா
பாரதி ஏர்டெல்
ஐடிசி
எஸ்பிஐ
டிசிஎஸ்
ஆக்சிஸ் பேங்க்
மாருதி சுசுகி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
எல் அண்ட் டி
பஜாஜ் ஃபின்சர்வ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
டாடா மோட்டார்ஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 பைசா உயர்ந்து ரூ.86.26 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan