Stock News: சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வு - நிப்டி 24,300க்கும் மேல் உயர்வு!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 200.58 புள்ளிகள் உயர்ந்து 80,434.66 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 67 புள்ளிகள் உயர்ந்து 24,341.80 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமையான இன்று (28-11-2024) ஏற்றம் கண்டுள்ளன. சென்செக்ஸ் சுமார் 200 புள்ளிகள் அதிகரித்துள்ளது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடும் அதிகரித்து 24,300 புள்ளிகளுக்கும் அதிகம் உயர்ந்துள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:11 மணி நிலவரப்படி, 200.58 புள்ளிகள் உயர்ந்து 80,434.66 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 67 புள்ளிகள் உயர்ந்து 24,341.80 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 450 புள்ளிகள் உயர நிப்டி ஐடி குறியீடு 381 புள்ளிகள் சரிவு கண்டுள்ளது. பிஎஸ்இ ஸ்மால் கேப் 554 புள்ளிகள் அதிகரித்தது. செக்டார்களில் ரியால்டி, எஃப்.எம்.சி.ஜி, மீடியா பங்குகள் 1% அதிகரித்தது.
காரணம்:
அயல்நாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் மீண்டும் முதலீட்டை அதிகரித்ததால் சென்செக்ஸ் சற்றே உயர்ந்துள்ளது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
அதானி எண்டெர்பிரைசஸ்
ஹெச்.டி.எஃப்.சி. லைஃப்
அதானி போர்ட்ஸ்
ஹெச்.யு.எல்.
கோல் இந்தியா
இறக்கம் கண்ட பங்குகள்:
எய்ஷர் மோட்டார்ஸ்
எம் அண்ட் எம்
இன்போசிஸ்
சிப்ளா
ட்ரெண்ட்
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்து டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.47 ஆக உள்ளது.