Stock News: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு: டெக் மகிந்திரா பங்குகள் 3% உயர்வு!
நிப்ட் பேங்க் குறியீடு 18 புள்ளிகள் சரிந்து 52,960 புள்ளிகளாக உள்ளது. நிப்டி ஐடி குறியீடு 365 புள்ளிகள் உயர்ந்து காணப்பட மும்பைப் பங்குச் சந்தையின் ஸ்மால் கேப் குறியீடு 223 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமையான இன்று (01-10-2024) ஏற்றம் கண்டுள்ளன. பங்குச்சந்தையின் பிரதான சென்செக்ஸ் குறியீடு தொடக்கத்தில் 300 புள்ளிகள் வரை உயர்ந்தது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சற்று முன் நிலவரப்படி, 90 புள்ளிகள் உயர்ந்து 84,390.29 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 24 புள்ளிகள் உயர்ந்து 25,833.90 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு 18 புள்ளிகள் சரிந்து 52,960 புள்ளிகளாக உள்ளது. நிப்டி ஐடி குறியீடு 365 புள்ளிகள் உயர்ந்து காணப்பட மும்பைப் பங்குச் சந்தையின் ஸ்மால் கேப் குறியீடு 223 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன.
காரணம்:
பங்குச் சந்தையில் புதிய பரிவர்த்தனைக் கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதோடு செக்யூரிட்டி ட்ரான்சாக்ஷன் வரியும் இன்று முதல் அமலாவதால் சந்தையில் நிலவரம் சற்றே முன்னும் பின்னும் உள்ளன.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
டெக் மகிந்திரா
விப்ரோ
என்.டி.பி.சி.
ரிலையன்ஸ்
இன்போசிஸ்
இறக்கம் கண்ட பங்குகள்:
ஏஷியன் பெயிண்ட்ஸ்
டைட்டன் கம்பெனி
பஜாஜ் பைனான்ஸ்
ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல்ஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.83.79 ஆக உள்ளது.