Stock News: சென்செக்ஸ் 500+ புள்ளிகள் உயர்வு- ஐடி குறியீடு 1000+ புள்ளிகள் உயர்வு!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 562 புள்ளிகள் உயர்ந்து 80,039 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 175.40 புள்ளிகள் உயர்ந்து 24,388.70 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன் கிழமையான இன்று (6-11-2024) சரிவிலிருந்து மீண்டு உயர்வுப்பாதைக்குத் திரும்பியுள்ளன. சென்செக்ஸ் சுமார் 500+புள்ளிகள் உயந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 175 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:25 மணி நிலவரப்படி, 562 புள்ளிகள் உயர்ந்து 80,039 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 175.40 புள்ளிகள் உயர்ந்து 24,388.70 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 150.45 புள்ளிகள் உயர்ந்தது. தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு 1100 புள்ளிகள் உயர்ந்தது. பிஎஸ்இ ஸ்மால் கேப் 565.45 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
காரணம்:
அமேரிக்க அதிபர் தேர்தலில் ஆரம்ப நிலவரங்களின் படி, ட்ரம்ப் முன்னிலை பெற்றுள்ளதையடுத்தும், உலக அளவில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அதிகரித்திருப்பதாலும் இன்று ஐடி நிறுவனங்களின் பங்குகள் முன்னேற்றம் கண்டதாலும் இந்தியப் பங்குச் சந்தை உயர்வுப்பாதைக்குத் திரும்பியுள்ளது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
வாரீ எனெர்ஜீஸ்
டாக்டர் ரெட்டீஸ் லேப்
ட்ரெண்ட்
பாரத் எலெக்ட்ரானிக்ஸ்
ஹெச்.சி.எல்
இன்போசிஸ்
டிசிஎஸ்
இறக்கம் கண்ட பங்குகள்:
டைட்டன்
டாடா ஸ்டீல்ஸ்
எஸ்பிஐ லைஃப்
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்
ஹிண்டால்கோ
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவடைந்து இன்று ரூ.84.19ஆக உள்ளது.