Stock News: மகாராஷ்டிரா தேர்தல் முடிவு எதிரொலி: சென்செக்ஸ் 1,200+ புள்ளிகள் உயர்வு!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 1,275.34 புள்ளிகள் உயர்ந்து 80,392.45 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 415 புள்ளிகள் உயர்ந்து 24,321.85 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கட்கிழமையான இன்று (25-11-2024) மீண்டும் நல்ல உயர்வு கண்டுள்ளன. சென்செக்ஸ் சுமார் 1,200-க்கும் கூடுதலான புள்ளிகளும் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 400 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு கண்டன.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:36 மணி நிலவரப்படி 1,275.34 புள்ளிகள் உயர்ந்து 80,392.45 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 415 புள்ளிகள் உயர்ந்து 24,321.85 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 1061.95 புள்ளிகள் உயர, நிப்டி ஐடி குறியீடு மட்டும் 225 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பிஎஸ்இ ஸ்மால் கேப் 1031 புள்ளிகள் அதிகரித்தது. செக்டார்களில் ஆட்டோ, வங்கி, மீடியா, டெலிகாம், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை, ரியல் எஸ்டேட் துறைப் பங்குகள் சுமார் 1-2% அதிகரித்துளது.
காரணம்:
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமை மஹாயுதி அபார வெற்றி கண்டதையடுத்தும் நிப்டி பேங்க் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகளில் முதலீடுகள் அதிகரித்ததாலும் பங்குச் சந்தைகள் இன்று உயர்ந்தன.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி
சொமேட்டோ
ரிலையன்ஸ்
எஸ்பிஐ
பாரத் எலெக்ட்ரானிக்ஸ்
பீபிசிஎல்
ஓஎன்ஜிசி
ஸ்ரீராம் பைனான்ஸ்
எல் அண்ட் டி
இறக்கம் கண்ட பங்குகள்:
ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்
இன்போசிஸ்
ஹெச்.சி.எல்.டெக்
இந்தியன் ஹோட்டல்ஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு அனைத்து கால சரிவு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்து டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.47ஆக உள்ளது.