Stock News: பங்குச் சந்தையில் தொடரும் எழுச்சி - சென்செக்ஸ் 350+ புள்ளிகள் உயர்வு!
ஐடி நிறுவனப் பங்குகளின் மீதான மவுசு, வெளிநாட்டு முதலீட்டாளர்களிடன் ஆர்வம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவி வருகிறது.
ஐடி நிறுவனப் பங்குகளின் மீதான மவுசு, வெளிநாட்டு முதலீட்டாளர்களிடன் ஆர்வம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவி வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (டிச.4) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 190.47 புள்ளிகள் உயர்ந்து 81,036.22 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 48.1 புள்ளிகள் உயர்ந்து 24,505.25 இருந்தது. இந்த எழுச்சியான வர்த்தகம் தொடரவே செய்தது.
இன்று முற்பகல் 11.50 மணியளவில் சென்செக்ஸ் 372.33 புள்ளிகள் (0.46%) உயர்ந்து 81,218.08 ஆகவும், நிஃப்டி 85.35 புள்ளிகள் (0.35%) உயர்ந்து 24,542.50 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகம் பாசிட்டிவாகவே நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய், சியோல், டோக்கியோ பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி நிலவினாலும், ஹாங்காங் பங்குச் சந்தை ஏற்றம் கண்டது. இந்தியப் பங்குச் சந்தையை பொறுத்தவரையில் ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் மற்றும் ஐடி நிறுவனப் பங்குகளுக்கு மவுசு கூடியிருந்தது. அதேபோல், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டி வரும் ஆர்வத்தின் காரணமாகவும் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து வருகின்றன.
ஏற்றம் காணும் பங்குகள்:
ஹெச்டிஎஃப்சி பேங்க்
டிசிஎஸ்
என்டிபிசி
டைடன் கம்பெனி
விப்ரோ
பஜாஜ் ஃபின்சர்வ்
கோடக் மஹிந்திரா பேங்க்
இன்ஃபோசிஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
நெஸ்லே இந்தியா
சன் பார்மா
இண்டஸ்இண்ட் பேங்க்
மாருது சுசுகி
டாடா ஸ்டீல்
பவர் கிரிட் கார்பரேஷன்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.68 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan