Stock News: போக்கு காட்டும் பங்குச் சந்தை - சென்செக்ஸ், நிஃப்டி சரிவு!
சர்வதேச பங்குச் சந்தைகளின் பாதகமான போக்குகள், வெளிநாட்டு முதலீடுகள் குறைந்தது முதலான காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி நிலவி வருகிறது.
சர்வதேச பங்குச் சந்தைகளின் பாதகமான போக்குகள், வெளிநாட்டு முதலீடுகள் குறைந்தது முதலான காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி நிலவி வருகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (டிச.31) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 468.14 புள்ளிகள் சரிந்து 77,779.99 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 117.05 புள்ளிகள் சரிந்து 23,527.85 ஆக இருந்தது.
வர்த்தகம் தொடங்கியதில் இருந்து பங்குச் சந்தை வர்த்தகத்தில் தடுமாற்றம் நிலவி வருவது, முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், பின்னர் வீழ்ச்சி குறையத் தொடங்கியது.
இன்று முற்பகல் 11.50 மணியளவில் சென்செக்ஸ் 179.48 புள்ளிகள் (0.23%) சரிந்து 78,068.65 ஆகவும், நிஃப்டி 34.30 புள்ளிகள் (0.15%) சரிந்து 23,610.60 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தையில் பாதக நிலையுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய், சியோல் மற்றும் டோக்கியோ பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. ஷாங்காய் பங்குச் சந்தை மட்டும் ஏற்றம் கண்டுள்ளது. சர்வதேசப் போக்குடன், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டாததன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் பாதக நிலை ஏற்பட்டது.
ஏற்றம் காணும் பங்குகள்:
கோடக் மஹிந்திரா பேங்க்
சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ்
டாடா மோட்டார்ஸ்
எஸ்பிஐ
டாடா ஸ்டீல்
ஐடிசி
இந்துஸ்தான் யூனிலீவர்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
மாருதி சுசுகி
ஏசியன் பெயின்ட்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்
டைட்டன் கம்பெனி
என்டிபிசி
பாரதி ஏர்டெல்
இண்டஸ்இண்ட் பேங்க்
இஃன்போசிஸ்
விப்ரோ
டிசிஎஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா குறைந்து ரூ.85.61 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan