முதல் முயற்சியிலே கிட்டுவது வெற்றி அல்ல, ஓர் எச்சரிக்கை: இஸ்ரோ தலைவர்
டெக்ஸ்பார்க்ஸ் பெங்களூரு 2024 நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், தீவிரமான பரிசோதனை முறைகளில் தோல்வியை எதிர்நோக்கும் இஸ்ரோ கலாச்சாரம் பற்றி விளக்கினார்.
எளிதான வெற்றியை துரத்திச் செல்வதைவிட, புதுமையாக்கத்தை நாடுபவர்கள் தோல்வியை எதிர்நோக்கி, அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று இஸ்ரோ தலைவர் டாக்டர்.எஸ்.சோம்நாத் கூறினார்.
அலசி ஆராயும் அணுகுமுறையை கொண்டிருப்பது, துடிப்பான, நீடித்த வெற்றியை ஸ்டார்ட் அப்களுக்கு தேடித்தரும் என்கிறார் இஸ்ரோ தலைவர்.
"எல்லா நேரங்களிலும் இளைஞர்களிடம், இதைத்தான் சொல்கிறேன்: நீங்கள் மிகவும் அவநம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்… தோல்வியை நோக்குங்கள், ஏதேனும் ஒன்று வெற்றி பெற்றால் கூட தோல்வியை நோக்குங்கள்” என்று பெங்களூருவில் டெக்ஸ்பார்க்ஸ் 2024 நிகழ்ச்சியில் யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஷரத்தா சர்மாவுடனான உரையாடலின் போது சோம்நாத் கூறினார்.
வெற்றிகரமான பலன் கவலை அளிக்கும் விஷயமாகும். ஏனெனில், தோல்வி அம்சங்களை பார்க்க மறந்துவிடுகின்றனர் என்கிறார் அவர்.
"ஏதேனும் ஒன்று முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செயல்பட்டால், அது எனக்கு கவலை அளிக்கும்” என்றார்.
பரிசோதனை மற்றும் உறுதி செய்வது தொடர்பான இஸ்ரோ அணுகுமுறையையும் அவர் விளக்கினார். ஒவ்வொரு கட்டத்திலும் இந்த அமைப்பு சந்தேகம் கொள்வதாக அவர் கூறினார்.
"தவறாக நிகழக் கூடிய விஷயங்களை ஆராய்ந்து, அவற்றை சரி செய்கிறோம். வடிவமைப்பு, அசெம்ப்ளி என எல்லாவற்றிலும் இதே அணுகுமுறைதான். பரிசோதனை செய்வதை ஒரு குணமாகவே உருவாக்கியுள்ளோம்” என்கிறார்.
அடிப்படை தர நெறிமுறைகளை உறுதி செய்வதற்காக இஸ்ரோ எச்சரிக்கை மிகுந்த அலசி ஆராயும் சோதனை அணுகுமுறையை கொண்டிருப்பதாக கூறுகிறார்.
"செலுத்தும் முயற்சி துவங்குவதற்கு முன், இதில் தோல்வி ஏற்படுவதற்கான வழிகள் என்ன என்பதே முதல் கேள்வியாக அமைகிறது. இந்த முறை எப்படி வெற்றிகரமாக அமையும் என்பது அல்ல” என்கிறார்.
மிகை நம்பிக்கை கொள்வது பற்றியும் எச்சரிக்கிறார். “எல்லாம் நல்லவிதமாக செயல்படுவதில் மகிழ்ச்சி அடையத் துவங்கினால் தோல்வி தவிர்க்க இயலாதது” என்கிறார்.
- சயான் சென்
Edited by Induja Raghunathan