அன்று பொறியாளர்; இன்று பால் பண்ணை அதிபர் - Gau Organics-ன் தனித்துவ வெற்றிக் கதை!
பொறியாளராக இருந்து பால்பொருள் விற்பனையில் வெற்றிக் கொடி நாட்டிய இளம் தொழிலதிபர் அமன்பிரீத் சிங்கின் வெற்றிக் கதை, இந்தச் சமூகத்துக்கு ஆரோக்கியம் தரவல்லது.
ராஜஸ்தானின் வரலாற்று நிலப்பரப்பில் ‘காவ் ஆர்கானிக்ஸ்’ (
) மூலம் ஒரு நவீன மாற்றம் நடந்து வருகிறது. 2016-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பால் பண்ணை பழமையான விவசாய மரபுகளை சமகால சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் நீடித்த நடைமுறைகளுடன் தடையின்றி ஒருங்கிணைக்கிறது.வெற்றிக்கொடி நாட்டிய பொறியாளர்!
ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரியான அமன்பிரீத் சிங் ‘காவ் ஆர்கானிக்ஸ்’ நிறுவன உருவாக்கத்தின் பின்னணியில் இருப்பவர். பொறியியலாளர் ஆனாலும் கூட, விவசாயத்தின் கிராமிய வசீகரமும் சிறுவயது விவசாய நினைவுகளும் அவரை பால்பொருள் தயாரிப்பின்பால் ஈர்த்தது. அவர் தொழில்நுட்பப் பின்னணி உடையவராக இருந்தபோதிலும், பால் பண்ணை மீதான காதல் நீடித்தது. இந்த ஆர்வத்தைத் தணிக்க, அவர் பால் அறிவியல் பாடத்தில் தன்னை மூழ்கடித்துக் கொண்டார். பின்னர், இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் பால் தானியக்கத் துறையில் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார்.
இஸ்ரேலில் கற்ற புத்தறிவுடன் இந்தியா திரும்பிய அமன்பிரீத் சிங், இஸ்ரேலிய பால் நிறுவனம் ஒன்றுடன் கூட்டு சேர்ந்து தன் சகோதரர்களான உத்தம் ஜியோத், ககன் பிரீத் ஆகியோருடன் கைகோர்க்க ‘கவ் ஆர்கானிக்ஸ்’ என்ற பால் பண்ணை நிறுவனம் பிறந்தது. இதற்காக கோட்டாவில் (Kota) 50 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட்டது.
ஆர்கானிக் பரிணாமம்
முதலில் சிறிய அளவில் 27 பசுக்களுடன் தொடங்கினார்கள். இது தொடக்கம்தான். ஆனால், இன்று அவர்களிடையே வெண்ணெய், நெய், தேன் என்று மதிப்புக்கூட்டப்பட்ட ஆர்கானிக் பால்பொருள்கள் தயாரிப்பில் உள்ளன. ஆனால், இதில் முக்கியமானது என்னவெனில், அவர்களது சூழலியல் அக்கறைதான். பண்ணைக்குத் தேவையான 70 விழுக்காடு மின்சாரமும் இவர்களாலேயே அங்கேயே தயாரிக்கப்படுகிறது. இது இவர்களது சுற்றுச்சூழல் அக்கறையை காட்டுகிறது.
கோவிட் ஊரடங்கு மற்றும் நீண்ட லாக்டவுன் காலக்கட்டங்களில் வீட்டுத் தோட்ட உருவாக்கம் மற்றும் பரமாரிப்பில் ஈடுபட்டனர். அப்போது மாட்டுச் சாணப் பொருட்களை ஆன்லைனில் சந்தைப்படுத்தினர். இது அவர்களின் வருவாயை கூடுதலாக்கியதோடு மட்டுமல்லாமல், நகர்ப்புற மக்களுக்கு இயற்கை வேளாண்மைக்கு தேவையானவற்றை அறிமுகப்படுத்தியது.
லாபம் ஈட்டும் முயற்சியை விட, அமன்பிரீத் சிங்கின் நோக்கம் சமூகத்தினருக்கு அதிகாரமளிப்பதை பிரதானமாகக் கொள்வதாக இருந்தது. பயிற்சி முயற்சிகள் மூலம் சக விவசாயிகளின், குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் அவர் கருவியாக இருந்தார்.
சுயசார்பு அசத்தல்கள்
பண்ணையின் பசுமையாக்க முயற்சிகள் தங்களுக்குத் தேவையான மின்சார ஆற்றலை உற்பத்தி செய்து கொள்வது வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
பயோ கியாஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அவர்கள் இரண்டு 40 கிலோவாட் ஆலைகளை இயக்கி, மாட்டுச் சாணத்தை மின்சாரமாக மாற்றியுள்ளனர்.
இந்த பசுமை முயற்சி ஆற்றல் தேவைகளை நிவர்த்தி செய்யும்போது அவற்றின் கரியமிலவாயு தடத்தை கணிசமாக குறைக்கிறது.
தரம் மற்றும் பசுமை சூழல் நிலைத்தன்மைக்கான கவ் ஆர்கானிக்ஸின் அர்ப்பணிப்பு கவனிக்கப்படாமல் போகவில்லை. அவர்களின் தயாரிப்புகள் தென்னாப்பிரிக்கா, துபாய் மற்றும் அதற்கு அப்பால் உள்ள சந்தைகளை அடைந்து, எல்லைகளைத் தாண்டி பலரையும் சென்றடைந்துள்ளது. இன்னும் பலரையும் ஈர்த்துள்ளது. ‘தி பெட்டர் இந்தியா’ அறிக்கையின்படி, அவர்களின் வெற்றிக்கான சான்று ரூ.6 கோடி ஆண்டு வருமானமே.
அமன்பிரீத் சிங்கின் ‘காவ் ஆர்கானிக்ஸ்’ நிறுவனத்தை ஒரு வெற்றிகரமான பிராண்ட் என்பதற்கும் மேலாகக் கருதுகிறார்.
அமுல் நிறுவனத்தினால் ஈர்க்கப்பட்டு இந்தியாவின் ஊட்டச்சத்துக் கட்டமைப்பை மேலும் செழுமைப்படுத்தும் இயற்கை உணவு கூட்டுறவுக்கு முன்னோடியாக செயல்படுவதை அவர் நோக்கமாகக் கொண்டுள்ளார்.
காவ் ஆர்கானிக்ஸ் நிறுவனம் அமன்பிரீத் சிங்கின் தலைமையின் கீழ் ஆர்வம், புதுமை மற்றும் பசுமைச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றின் கலவையைக் காட்டுகிறது. குறுகிய காலத்தில் அவர்கள் ஒரு புதிய தொடக்கத்திலிருந்து ஒரு நிலையான பால் பொருள் தயாரிப்பு முன்மாதிரியாக உருமாறி, அவர்களின் தனித்துவமான முயற்சியினால் உலகிற்கே ஒரு தூண்டுகோலாக விளங்குகின்றனர்.
மூலம்: Nucleus_AI | தமிழில்: ஜெய்
தொடர் தோல்விக்குப் பின் வெற்றி - ஒரே ஆண்டில் ரூ.2,463 கோடி மதிப்பு நிறுவனத்தை கட்டமைத்த மிஸ்பா!
Edited by Induja Raghunathan