Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

தொடர் தோல்விக்குப் பின் வெற்றி - ஒரே ஆண்டில் ரூ.2,463 கோடி மதிப்பு நிறுவனத்தை கட்டமைத்த மிஸ்பா!

எளிய பின்னணியில் இருந்து ஸ்டார்ட்-அப் முயற்சிகளில் பல தோல்விகளைக் கண்டு, ஒரே ஆண்டில் ரூ.2,463 கோடி மதிப்பு நிறுவனத்தை கட்டமைத்த மிஸ்பாவின் வெற்றிக் கதை.

தொடர் தோல்விக்குப் பின் வெற்றி - ஒரே ஆண்டில் ரூ.2,463 கோடி மதிப்பு நிறுவனத்தை கட்டமைத்த மிஸ்பா!

Friday August 25, 2023 , 2 min Read

வர்த்தகம் என்பது ஒரு கடல். அதில் மூழ்கி முத்தெடுத்தவர்களின் உணர்வு மிக்க உற்சாகமிக்க கதைகள் எப்போதும் உத்வேகமூட்டக் கூடியவை. இப்போது நாம் பார்க்கப்போகும் மிஸ்பா அஷ்ரப் என்பவரின் கதையும் தொழில்நுட்ப மன்னர்களான பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றோரின் மன உறுதிக்கு ஈடான ஒரு மன உறுதிக் கதைதான்.

எளிமையான தொடக்கமே வேர்!

பீகாரின் நாலந்தா மாவட்டத்தின் பீகார் ஷெரீப் பகுதியைச் சேர்ந்த மிஸ்பா நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது தந்தை ஓர் ஆசிரியர். அவர் வழங்கிய வாழ்நாள் அறிவுரை மிஸ்பாவை வழிநடத்தியது. அந்த அறிவுரை இதுதான்.

“மெதுவாக நடப்பவர்கள் கீழே விழுந்துவிடுவார்கள்.”

இந்த மூதுரையையே அறிவுரையாக வழங்கினார் அந்த ஆசிரிய தந்தை. அந்த ஞானமே மிஸ்பாவின் வழிகாட்டி வெளிச்சமாக மாறியது. இதுவே அவர் கல்லூரியை விட்டு வெளியேறவும், தொழில்முனைவோராவதற்கு முன்னுரிமை கொடுக்கவும் வழிவகுத்தது.

misba

சோதனைகளும் வெற்றிகளும்

மிஸ்பாவின் முதல் முயற்சி 'சிபோலா' என்ற சமூகப் பணம் பரிமாறும் கருவி என்ற கன்னி முயற்சியாகும். இது செப்டம்பர் 2013-இல் ஐஐடி-டெல்லியின் நண்பர்களுடன் இணைந்து நிறுவப்பட்டது. ஆனால், சிபோலா நீண்ட நாள் தாக்குப்பிடிக்கவில்லை. இதன் தோல்வி குறித்து மிஸ்பா சிந்தித்தார். சந்தை இயக்கவியலை அறியாமல் தவறான கணக்கீட்டில் இதை தொடங்கி தோல்வி அடைந்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

ஆனால், தன் அடுத்த முயற்சியில் சற்றும் மனம் தளராத மிஸ்பா, ஆகஸ்ட் 2017-ல் Marsplay-வை தொடங்கினார். இந்த இ-காமர்ஸ் தளம் விரைவான வளர்ச்சியை அடைந்தது. குறுகிய காலத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களைக் குவித்தது. இருப்பினும், கோவிட்-19 பெருந்தொற்று எதிர்பாராத சவால்களை முன்வைத்தது. நிதி நெருக்கடிக்கு மத்தியில் மார்ஸ்ப்ளே, இறுதியில் மற்றொரு இ-காமர்ஸ் நிறுவனமான ஃபாக்ஸிக்கு விற்கப்பட்டது. ஆகவே இரண்டாவது தோல்வியையும் சந்தித்தார் மிஸ்பா.

நிதித் தொழில்நுட்பம் ‘ஜார்’ கை கொடுத்த விதம்

கடந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்ட மிஸ்பா மே 2021-இல் 'ஜார்' (Jar) என்பதை அறிமுகப்படுத்தினார். இது பயனர்கள் சேமிக்கவும் முதலீடு செய்யவும் உதவுவதை மையமாகக் கொண்ட நிதித் தொழில்நுட்ப முயற்சியாகும். இந்த முயற்சி ஒரே இரவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 18 மாதங்களுக்குள் ஜார் 18 மில்லியன் பயனர்களைப் பெற்றது. மேலும், டைகர் குளோபல் மற்றும் ஆர்க்கம் வென்ச்சர்ஸ் போன்ற ஜாம்பவான்களிடமிருந்து குறிப்பிடத்தக்க முதலீடுகளுடன் $58 மில்லியன் நிதியுதவியைப் பெற்றார்.

நிறுவனம் தினசரி 3,00,000 பரிவர்த்தனைகளை கையாளுகிறது. அதன் தொடக்க ஆண்டில் மிஸ்பா 300 மில்லியன் டாலர் (ரூ. 2,463 கோடி) மதிப்பீட்டில் $22.6 மில்லியன் திரட்டினார். ஒரே ஆண்டில் நிறுவனம் ரூ.2,463 கோடி மதிப்பைப் பெற்றது. உலகளாவிய நிதி மந்தநிலையைக் கருத்தில் கொண்டுப் பார்த்தால் பல ஸ்டார்ட்-அப்கள் வெறும் ஸ்டார்ட்டுடன் முடிந்த கதைகள் இருக்க, மிஸ்பாவின் ‘ஜார்’ சாதனை மின்னொளி வீசியது.

ஜாரின் தலைமை தயாரிப்பு அதிகாரியாகவும் பணியாற்றும் மிஸ்பா, ‘நிஷ்சய் ஏஜி’ உடன் இணைந்து இந்த முயற்சியை நிறுவினார். அவரது பங்களிப்புகள் கவனிக்கப்படாமல் போகவில்லை. நிதி மற்றும் துணிகர முதலாளித்துவத்தில் அவரது நட்சத்திரப் பணியை அங்கீகரிக்கும் வகையில், ஃபோர்ப்ஸ் 2023-ஆம் ஆண்டிற்கான அவர்களின் மதிப்புமிக்க ‘30 வயதிற்குட்பட்ட 30’ பட்டியலில் அவருக்கு ஒரு கவரவத்தை அளித்தது.

Jar Misba

தொழில்முனைவுக்கு அப்பால்...

மிஸ்பா இந்த வெற்றிகளுக்கு முன்னதாக Pulse.qa, Pursuit, Toymail மற்றும் Spangle போன்ற ஸ்டார்ட்-அப்களுடன் பணிபுரிந்து தனது திறமைகளை மேம்படுத்திக் கொண்டார்.

மிஸ்பா அஷ்ரஃபின் பயணம், பீகாரில் ஒரு நடுத்தர வர்க்க சிறுவன் முதல் பிரபல தொழிலதிபர் வரை, அவரது விடாமுயற்சிக்கு சான்றாகும். விடாமுயற்சி, நுண்ணறிவு மற்றும் சரியான மனப்பான்மையுடன், எந்தவொரு தடையையும் கடந்து, கனவுகளை இணையற்ற யதார்த்தங்களாக மாற்ற முடியும் என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டும், ஆர்வமுள்ள வணிக எண்ணங்களுக்கு இது ஒரு தெளிவான உதாரணமாகும்.

தோல்விகளினால் சோர்வடைந்தால் சாதிக்க முடியாது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுதான் தொழிலதிபர் மிஸ்பா அஷ்ரஃபின் வெற்றிக்கதை.


Edited by Induja Raghunathan