ரசிகர்களுக்கு சன்னி லியோனின் பிறந்த நாள் பரிசு - 'I Dream of Sunny' - கேம், NFT வெளியீடு!
தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு பயன்பாடுகளை ஒருங்கிணைக்கும் ஐ ட்ரீம் ஆஃப் சன்னி பயன்பாடு வெளியாக இருக்கிறது.
"ஐ ட்ரீம் ஆஃப் சன்னி" 'I Dream Of Sunny' என்பது என்எஃப்டிகள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ரசிகர் வசனம், கேமிங், லக்கி டிரா, வின்னிங் காம்பினேஷன் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுகளை இணைக்கும் இதுவரை கண்டிராத தயாரிப்பாக இது இருக்கும் என வெளியாகியுள்ளது.
நடிகை சன்னி லியோன் கடந்த வெள்ளிக்கிழமை 41 வயதை நிறைவு செய்தார். இதை முன்னிட்டு தனக்கும் தனது ரசிகர்களுக்கும் விருந்தளிக்கும் வகையிலான NFT, AI, ரசிகர் வசனங்களை ஒருங்கிணைக்கும் தொழில்நுட்ப தயாரிப்பை ஆன்லைன் தளமான ஹேஹே உடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.
இந்த "ஐ ட்ரீம் ஆஃப் சன்னி" பயன்பாட்டை சன்னி லியோன் சன்சிட்டி மீடியா மற்றும் எண்டர்பிரைசஸ் உடன் இணைந்து வெளியிடுகிறார். 'I Dream Of Sunny' என்பது என்எஃப்டி-கள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ரசிகர் வசனங்கள், கேமிங், லக்கி டிரா, வின்னிங் காம்பினேஷன் உள்ளிட்ட பல பயன்பாடுகளை ஒருங்கிணைக்கும் இதுவரை பார்த்திடாத பயன்பாடாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த சன்னி லியோன் கூறுகையில்,
“எனது பிறந்தநாளை குறிக்க நான் தனித்துவமான மற்றும் இதுவரை செய்யாத ஒன்றை தொடங்க விரும்பினேன். எனவே அதற்கு இது உதவும் என்று உணரும் காரணத்தால், கேமிங் மூலமாக NFT உலகில் நுழைய முடிவு செய்தேன். அதே நேரத்தில் எனது ரசிகர்களுடனான எனது தொடர்பை சிறப்பாக பராமரிக்கவும் நினைத்தேன். இதன்மூலமாக அவர்களுக்கு தனித்துவமான மற்றும் வேடிக்கையான விளையாட்டை வழங்க முடிவு செய்தேன்,” என கூறினார்.
மேலும்,
"ரசிகர்களின் கருத்துகள் என்னை மிகவும் கவர்ந்தது. எனவே அதை ஒருங்கிணைத்து ஒரு உலகத்தை உருவாக்க முடிவு செய்தோம், அதுவே இந்த பயன்பாடு. இதில் மக்கள் என்னுடன் கேம் விளையாடலாம். ரசிகர்கள் என்எஃப்டி கார்ட்களை பெற்று அதில் பங்கேற்பார்கள் என்பதில் ஆவலுடன் இருக்கிறேன். டிஸ்கார்ட் சர்வரில் நடத்தப்படும் கேம் குறித்த முழு விவரங்களையும் எனது இன்ஸ்டாகிராம் தளத்தில் அறிவிப்பேன். இது வெற்றியடைய வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சலுகையின் ஒரு பகுதி மே13 முதல் "ஐ ட்ரீம் ஆஃப் சன்னி" இணையதளத்தில் கிடைக்கிறது. இதற்கு என்எஃப்டி கார்டுகளை முதலில் வாங்குவது முக்கியம். இந்த என்எஃப்டி பயன்பாடுகளை வாங்குவதன் மூலம் நடிகை சன்னி லியோனின் தனிப்பட்ட டிஸ்கார்ட் சேவையகத்திற்கான அணுகலை பெற முடியும்.
கேம் விளையாடுவதற்கு சில்வர், கோல்ட், பிளாட்டினம் மற்றும் ஜோக்கர் என்ற நான்கு வெவ்வேறு என்எஃப்டி கார்ட்கள் தேவை. இந்த ஒவ்வொரு கார்டும் போனஸ் அம்சங்களுடன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயன்பாட்டில் கூட்டாண்மை வகிக்கும் Caleb Franklin நிறுவனர் மற்றும் சிஇஓ ஹேஹே க்ளோபல் இதுகுறித்து கூறுகையில்,
"என்எஃப்டி தொழில்துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பிரபலங்கள் மற்றும் அவர்களது ரசிகர்களுக்கு இடையேயான புதிய தொடர்பு மூலம் என்எஃப்டிகளை ஊக்குவிக்கும் முயற்சி இது. HeyHey உடனான சன்னியின் ஒத்துழைப்புடன் "ஐ ட்ரீம் ஆஃப் சன்னி" என்ற ரசிகர் வசனம், வெப்3 போன்ற புதிய யுக தொழில்நுட்பத்தின் மூலம் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறோம்,” எனக் குறிப்பிட்டார்.