Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

200 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுடன் 'T-Series' - உலகச் சாதனை படைத்த இந்திய யூடியூப் சேனல்!

இந்தியாவில் இதுவரை எந்த யூ-டியூப் சேனலும் செய்யாத வகையில் 200 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்று டி-சீரிஸ் என்கிற யூடியூப் சேனல் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது

200 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுடன் 'T-Series' - உலகச் சாதனை படைத்த இந்திய யூடியூப் சேனல்!

Monday December 13, 2021 , 3 min Read

இந்தியாவில் இதுவரை எந்த யூடியூப் சேனலும் செய்யாத வகையில் 200 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்று டி-சீரிஸ் என்கிற யூடியூப் சேனல் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.


சோசியல் மீடியா என்பது பொழுது போக்குத் தளமாக மட்டுமல்லாமல், ஆன்லைன் யுகத்தில் சாமானியர்களையும் நட்சத்திரங்களாக ஜொலிக்கவைக்கிறது. அதிலும் யூடியூப்பின் பங்கு அளப்பறியது.


இல்லத்தரசிகள் முதல் மிகப்பெரிய கார்ப்ரேட் நிறுவனங்கள் வரை லட்சக்கணக்கான பாலோயர்ஸ்களுடன் தனக்கென தனி யூ-டியூப் சேனலை தொடங்கி நடத்தி வருகின்றனர். காமெடி, பாட்டு, சமையல், நடனம், நடிப்பு என தங்களது தனித்திறமைகளை வைத்து சாதித்து காட்டும் யூடியூப்பர்களை யூ-டியூப் நிறுவனமும் பல வகைகளில் ஊக்குவித்து வருகிறது.

Youtube

1 லட்சம் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றால் சில்வர் பட்டன், 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்றால் கோல்டு பட்டன், 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்றால் டைமண்ட் பட்டன் போன்ற பல சிறப்பு பட்டன்கள் மற்றும் பரிசுகளை தனது யூடியூபர்களுக்கு வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

டி-சீரிஸ் யூ-டியூப் சேனல் பின்னணி:

இந்தியாவில் மியூசிக் மற்றும் படங்கள் தயாரிப்பு நிறுவனமாக டி-சீரிஸ் இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தை குல்ஷான் குமார் என்பவர் 1983ம் ஆண்டு தொடங்கி நடத்தி வந்தார். 1997ஆம் ஆண்டு குல்ஷான் குமார் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது சகோதரர் கிருஷ்ண குமார் மற்றும் மகன் பூஷன் குமார் ஆகியோர் இந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.


இந்நிறுவனம் இந்தியில் ‘கபீர் சிங்’, ‘லுடோ’,‘தன்ஹாஜி, ‘தப்பாட்’, ‘பதி பாட்னி அவுர் வோ‘, ‘சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி’, ‘ரெய்டு’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளது.

T Series

இந்த நிறுவனத்தின் சார்பில் டி-சீரிஸ் என்ற யூடியூப் சேனலும் உள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, கன்னடா, போஜ்பூரி உள்ளிட்ட மொழிகளில் மொத்தம் 29 யூடியூப் சேனல்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக டி-சீரிஸ் நெட்வொர்க்கில் 383 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். அதேபோல் மொத்தம் 718 பில்லியன் பார்வை நேரங்களையும் டி-சீரிஸ் சேனல் கடந்துள்ளது.

200 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் பெற்று சாதனை:

டி-சீரிஸ் யூடியூப் சேனல் தற்போது பெரியளவில் பயனாளர்களை தன் பக்கம் ஈர்த்து புதிய உலகச் சாதனையை படைத்துள்ளது. இந்தியாவில் எந்த யூடியூப் சேனலும் இதுவரை அடையாத வெற்றியாக 200 மில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ள மிகப்பெரிய யூடியூப் சேனலாக டி-சீரிஸ் மாறியுள்ளது.


இதன்மூலம், யூடியூப் தளத்தில் அதிக சப்ஸ்கிரைபர்கள் கொண்ட சேனலாக உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 'பியூடிபை' (PewDiePie) என்கிற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த யூடியூப் சேனல் தான் அதிக சப்ஸ்கிரைபர்களை பெற்று முதல் இடத்தில் இருந்து வந்தது. பல ஆண்டுகளாக அந்த சேனல் தக்கவைத்து வந்த வெற்றியை டி-சீரிஸ் நிறுவனம் தற்போது பின்னுக்குத்தள்ளியுள்ளது.

T Series

இந்தச் சாதனை குறித்து டி-சீரிஸ் தலைவரும், நிர்வாக இயக்குநருமான பூஷன் குமார் கூறிகையில்,

“இந்திய யூடியூப் சேனலில் மிகப்பெரிய சப்ஸ்கிரைபர்களை பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணம். யூடியூப்பில் மகத்தான 200 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைக் கடந்த முதல் சேனலாக உள்நாட்டு இந்திய சேனல் மாறியுள்ளது. எங்களின் படைப்புகளை மிகவும் அன்புடனும் போற்றுதலுடனும் ஏற்றுக்கொண்ட, உலகெங்கிலும் உள்ள எங்களின் ரசிகர்களுக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த வெற்றியின் மூலம் படைப்பு தான் எல்லாவற்றிற்கும் முக்கியம் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். மிகத் திறமையான குழுவைக் கொண்டிருப்பதில் நான் அதிர்ஷ்டசாலி, அவர்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை, மேலும், இந்த வெற்றியை எனது டிஜிட்டல் மற்றும் இசைக் குழுக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்," என உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.
T Series

டி-சீரிஸின் தலைவர் நீரஜ் கல்யாண் கூறுகையில்,

"இசை எப்போதுமே எங்களின் பலம், எங்களது ஆர்வம் மற்றும் தனித்துவமானதாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக எங்கள் உள்ளடக்கம் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பிரமிக்க வைக்கும் வகையில் பிரபலமடைந்து வருகிறது. உலகின் முதல் யூடியூப் சேனலாக இவ்வளவு பெரிய சப்ஸ்கிரைபர்களை எட்டியிருப்பது, இதற்காக இடைவிடாமல் பாடுபட்டு வரும் எங்கள் ஒட்டுமொத்த குழுவிற்கும் கிடைத்த மிகப்பெரிய சாதனையாகும். எங்கள் பார்வையாளர்களை சிறப்பாக மகிழ்விப்பதற்காக ஒவ்வொரு நாளும் எங்களின் படைப்புகளை நாளுக்கு நாள் மெருகேற்றி வருகிறோம் எனத் தெரிவித்தார்.

யூடியூப்பில் 200 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்ற டி-சீரிஸ் யூ-டியூப் சேனலுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் சோசியல் மீடியாவில் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


தொகுப்பு: கனிமொழி