Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

சட்டப்பேரவைத் தொடர் - தொழில்துறை அறிவிப்புகள்; சிறப்பம்சங்கள் என்னென்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை 2024-25ம் நிதியாண்டிற்கான கொள்கை அறிவிப்புகளை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ளார். அதன் தொகுப்பு இதோ:

சட்டப்பேரவைத் தொடர் - தொழில்துறை அறிவிப்புகள்; சிறப்பம்சங்கள் என்னென்ன?

Friday June 28, 2024 , 2 min Read

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை 2024-25ம் நிதியாண்டிற்கான கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இதனை வெளியிட்டுள்ளார்.

Trb Raja

தொழில்துறை அறிவிப்புகளின் சிறப்பம்சங்கள் வருமாறு:

1. தமிழ்நாட்டை விண்வெளித் தொழிலில் முன்னணி மாநிலமாக மேம்படுத்த விண்வெளி தொழில் கொள்கை (Space Tech Policy) வெளியிடப்படும்.

2. சுழற்பொருளாதார துறைகளில் (Circular Economy) முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு தமிழ்நாடு சுழற்பொருளாதார முதலீட்டு ஊக்குவிப்புக் கொள்கை வெளியிடப்படும்.

3. பொம்மைகள், பொழுதுபோக்கு, மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் பெருமளவில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஒரு சிறப்புத் திட்டம் வெளியிடப்படும்.

4. படைப்புத் திறன் பொருளாதாரத்தை (Creative Economy) அடிப்படையாகக் கொண்டு தொழில் வளர்ச்சி அடையும் வகையில் ஒரு செயல்திட்ட வரைபடம் வெளியிடப்படும்.

5. தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவுச் சேவைகள் வழங்கவும் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வழிகாட்டி கிளை நிறுவனம் கோயம்புத்தூரில் தொடங்கப்படும்.

6. ஜப்பான் நாட்டு முதலீடுகளை ஈர்க்க ஜப்பானின் டோக்கியோவில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் மூலம் ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு அமைவு ஏற்படுத்தப்படும்.

7.சுற்றுலாத்துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்க வழிகாட்டி நிறுவனத்தில் ஒரு சிறப்புப் பிரிவு (Tourism Investment Promotion and Facilitation Cell) ஏற்படுத்தப்படும்.

8. PPP மாதிரியைப் பயன்படுத்தி சுற்றுலா வளர்ச்சிக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை SIPCOT மேற்கொள்ள உள்ளது.

9. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 1,500 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் பூங்கா.

10. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் 1,000 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் பூங்கா.

11. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் 175 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் பூங்கா.

12. 150 ஏக்கர்பரப்பளவில் திருச்சி திருவெறும்பூரில் சிப்காட் பூங்கா.

13. திருவாரூர்மாவட்டம் மன்னார்குடியில் 150 ஏக்கரில் சிப்காட் பூங்கா.

14. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா.

15. சென்னை வெளிவட்டச் சாலையை ஒட்டி 200 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் பூங்கா.

16. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

17. கரூர் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப மினி டைட்டல் பூங்கா.

18. திருவண்ணாமலை மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப மினி டைட்டல் பூங்கா.

19. தனியார் பங்களிப்புடன் கூட்டு முயற்சியில் சிப்காட் தொழிற்பூங்காக்களை உருவாக்கம்.

20. தமிழ்நாட்டு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு ரூ.2,100 கோடி கடன் வழங்கப்படும்.

21. சிப்காட் தொழிற்பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளின் தயாரிப்புப் பொருட்களுக்கான காட்சிமையம் ரூ.5 கொடி திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

22. தூத்துக்குடி, மாம்பாக்கம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான விளையாட்டுத்திடல்களுக்கு ரூ.6 கோடி ஒதுக்கப்படும்.

23. ஆலங்குளம் சிமெண்ட் ஆலையில் எம்-சாண்ட் உற்பத்தி ஆலை சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.