தமிழக தேர்தல் 2021: திமுக+ 132; அதிமுக+ 92: தமிழக தேர்தல் முடிவுகள் நிலவரம் என்ன?
வாக்கு எண்ணிக்கை காலையில் இருந்து விறுவிறுப்பாகவே தொடங்கின. தபால் வாக்குகளிலேயே முன்னிலை நிலவரங்கள் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போதையை இந்திய தேர்தல் ஆணையத்தின் காலை 11.30 மணி அதிகாரப்பூர்வ நிலவரப்படி, 218 சட்டமன்ற தொகுதிகளில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு தமிழகம் முழுவதும் 75 மையங்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் குறைந்தபட்சம் 14 மேஜைகள் கொரோனா தொற்றை தவிர்க்க சமூக இடைவெளியுடன் போடப்பட்டு உள்ளன.
அதன்படி, வாக்கு எண்ணிக்கை காலையில் இருந்து விறுவிறுப்பாகவே தொடங்கின. தபால் வாக்குகளிலேயே முன்னிலை நிலவரங்கள் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போதையை இந்திய தேர்தல் ஆணையத்தின் காலை 11.30 மணி அதிகாரப்பூர்வ நிலவரப்படி, 218 சட்டமன்ற தொகுதிகளில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
தமிழகத்தில் திமுக கூட்டணி 132 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் திமுக- 113 இடங்களிலும் காங்கிரஸ்- 13, சிபிஎம்-2, சிபிஐ-2, விசிக-2, முன்னிலை வகித்து வருகின்றன.
இதேபோல், 92 இடங்களில் அதிமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக- 79 இடங்களிலும், பாமக- 9, பாஜக-4 என முன்னிலை வகித்து வருகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தார். ஆனால் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார். எனினும், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் கமல்ஹாசனுக்கும், காங்கிரஸ் வேட்பாளருக்கும் இடையே போட்டிகள் நிலவி வருகிறது.
இதேபோல், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் 24,218 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனை விட முன்னிலையில் இருந்து வருகிறார்.
இதற்கிடையே, அதிமுகவைச் சேர்ந்த தற்போதைய அமைச்சர்கள் பலர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சிவி சண்முகம், ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார், நன்னிலம் தொகுதியில் காமராஜ், வேதாரண்யம் தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஆவடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பாண்டியராஜன், மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பெஞ்சமின் போன்றோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
பாஜக முன்னிலை!
சென்னை துறைமுகம், தாராபுரம் என இரண்டு தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.