'இந்தியாவின் முதல் கொரில்லா கிளாஸ் உற்பத்தி ஆலை' - காஞ்சிபுரம் சிப்காட்டில் உற்பத்தி தொடக்கம்!
ஸ்மார்ட் போன் உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்களுக்கான முகப்பு கண்ணாடிகளை உற்பத்தி செய்வதற்கான பார்த் இன்னவேட்டிவ் டெக்னாலஜிஸ் (பிக் டெக்) ஆலையின் அடிக்கல் நாட்டுவிழா சென்னை அருகே நடைபெற்றது.
ஸ்மார்ட் போன் உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்களுக்கான முகப்புக் கண்ணாடிகளை உற்பத்தி செய்வதற்கான 'பாரத் இன்னவேட்டிவ் டெக்னாலஜிஸ்' (பிக் டெக்) ஆலையின் அடிக்கல் நாட்டுவிழா சென்னை அருகே நடைபெற்றது.
உலகின் முன்னணி மெட்டிரியல் சயின்ஸ் நிறுவனங்களில் ஒன்றான 'கார்னிங் இன்க்' (Corning Incorporated) மற்றும் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு உற்பத்தி நிறுவனம் Optiemus Infracom இடையிலான கூட்டு முயற்சியாக இந்த ஆலை அமைகிறது.
மொபைல் சாதனங்களுக்கான முகப்பு கண்ணாடிகளை இந்தியாவில் உற்பத்தி செய்யும் இந்த முதல் ஆலை, உள்ளூர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமையும். இந்த புதிய ஆலை, காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைபாக்கம் சிப்காட் தொழில்பூங்காவில் அமைந்துள்ளது.
“புதிய ஆலை நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டை சர்வதேச உற்பத்தி மையமாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கும். இந்த உலகத்தரம் வாய்ந்த ஆலை அமைவது தமிழ்நாட்டிற்கு பெருமிதமான தருணம்," என்று மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்த அடிக்கல் நாட்டுவிழா, மாநில தொழில் திறனில் முக்கிய முதலீடாக அமைவதோடு, புதுமையாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் தமிழ்நாட்டின் இடத்தை உறுதி செய்கிறது என்றும் முதல்வர் கூறினார்.
தமிழ்நாட்டின் சிறந்த உள்கட்டமைப்பு வசதிக்கு இந்த ஆலை எடுத்துக்காட்டாக அமைகிறது என மாநில தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
“இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் கார்னிங் 60 ஆண்டுகளுக்கு மேலாக முக்கியப் பங்கு வகிக்கிறது. Optiemus Infracom நிறுவனம் உடனான இந்த கூட்டு முயற்சி, இந்திய சந்தைக்கு முக்கிய புதுமையாக்கத்தை கொண்டு வரும் எங்கள் ஈடுபாட்டை உணர்த்துகிறது,” என கார்னிங் கொரில்லா கிளாஸ் துணை தலைவர் டேவிட் வேலஸ்கியூ கூறியுள்ளார்.
“கார்னிங் நிறுவனத்துடனான எங்கள் கூட்டு, இந்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப மேம்பாடு, அதி நவீன பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் உறுதியாக அமைகிறது,” என Optiemus Infracom செயல் தலைவர் அசோக் குப்தா கூறினார்.
“மொபைல் சாதனங்களுக்கான முகப்பு கண்ணாடி உற்பத்தி ஆலையை முதலில் அமைப்பது நிறுவன வரலாற்றில் ஒரு மைல்கல்," என்றும் கூறினார்.
கார்னிங்கின் புகழ்பெற்ற கொரில்லா கவரிங் கண்ணாடி, 45 பிராண்ட்களின் 8 பில்லியன் சாதனங்களுக்கு மேல் பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் கால் பதிக்கும் அடிடாஸ்; சென்னையில் அமைகிறது பிசினஸ் சென்டர்!
Edited by Induja Raghunathan