Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

ரூ.17,616 கோடி முதலீடு; 64,968 வேலைவாய்ப்பு; 19 தொழில் திட்டங்கள் - தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்!

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்வில் 64,968 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 19 தொழில் திட்டங்களையும் ரூ.51,517 கோடி முதலீட்டில் 41,835 பேருக்கு வேலை வழங்ககூடிய 28 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

ரூ.17,616 கோடி முதலீடு; 64,968 வேலைவாய்ப்பு; 19 தொழில் திட்டங்கள் - தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்!

Wednesday August 21, 2024 , 3 min Read

சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு முதலீட்டு மாநாடு தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 17,616 கோடி முதலீட்டில் உருவான 19 திட்டங்கள் மற்றும் ரூ. 51,157 கோடி முதலீட்டில் உருவாக இருக்கும் 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதலும் மேற்கொண்டார். அதாவது, செம்கார்ப் உள்ளிட்ட 47 நிறுவனங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்வில் 64,968 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 19 தொழில் திட்டங்களையும் ரூ.51,517 கோடி முதலீட்டில் 41,835 பேருக்கு வேலை வழங்ககூடிய 28 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
TN Investors Meet

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறதை உணர்த்திடும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியிருக்கிறோம் மாநாடுகளை நடத்துவதை விட, அவற்றின் மூலம் எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தோம் என்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. அந்த மாநாடு மூலம் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் எண்ணிக்கை 631. இதனால் 14 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 12 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புக் கிடைக்கும்.

"கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 9 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். 19 வகையிலான திட்டங்களை இன்று தொடங்கி வைத்திருக்கிறேன். 17,616 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மூலம் 64968 பேருக்கு வேலை கிடைக்கும்," என்றார்.

மேலும் பேசிய அவர், 28 வகையிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். 51,157 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டங்கள் மூலம் 41 ஆயிரத்து 135 பேருக்கு வேலை கிடைக்கும் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைதியான, சட்டம் ஒழுங்கு சரியாக உள்ள மாநிலங்களை தேடித்தான் தொழில் நிறுவனங்கள் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் தொழிலை நிம்மதியாக நடத்தலாம் என்ற நம்பிக்கை தொழில் அதிபர்களுக்கு வந்துள்ளது. அதன் அடையாளமாகத்தான் கடந்த 3 வருடங்களாக தமிழகத்தில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உருவாகி வருகிறது.

investors meet
நீங்கள் தொழில் நிறுவனங்கள் தொடங்கினால் மட்டும் போதாது. மற்ற தொழில் நிறுவனங்களையும் அழைத்துக் கொண்டு வாருங்கள். தொழில் தொடங்க வையுங்கள். தமிழ்நாட்டின்தொழில்துறை தூதுவராக நீங்கள் அனைவரும் மாற வேண்டும் என முதலீட்டாளர்களை கேட்டுக்கொண்டார் முதல்வர்.

இந்த மூன்று ஆண்டுகளில் எண்ணற்ற தொழில்துறைகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலம் இலக்கை அடைவதற்காக தமிழக அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது.

இன்று தொடங்கப்பட்ட, அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் மூலம் 1,06,803 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் போகிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் பெரும்பாலான வேலைவாய்ப்பு பெண்களுக்கானவை. பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் அரசு நடவடிக்கைக்க இந்த சாதனை ஊக்கமளிக்கிறது.

அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூகத்தின் வளர்ச்சி, அனைத்து மாவட்டத்தின் வளர்ச்சி நான் சொல்லிக் கொண்டு வருவதின் அடையாளம் இதுதான். தமிழ்நாடு முழுவதும் பரவலான மற்றும் நிலைக்க தக்க வளர்ச்சி உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

திறன்மிகு தொழிலாளர்கள், அதிக பெண் தொழிலாளர்கள் கொண்ட சிறப்பம்ச மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பது உலகம் முழுக்கத் தெரியும். உலகமெங்கும் இருக்கும் முதலீட்டார்கள் தேர்வு செய்யும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்கு இன்றைய நிகழ்வு எடுத்துக்காட்டு.

மிகுந்த படைப்பாற்றல், திறமை கொண்டவர்கள் துடிப்பான தமிழக இளைஞர்கள். நம்முடைய இளைஞர்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். இதனால் எங்களுடைய இளைஞர்களின் திறன்களை நன்றாக பயன்படுத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

TN Investors Meet

இன்று தொடங்கப்பட்ட பல்வேறு வகையான தொழில் திட்டங்கள் பட்டியல்:

  • மோட்டார் வாகனங்கள்

  • பொது உற்பத்தி

  • தொழிற்பூங்காக்கள்

  • மின்னணுவியல்

  • மருத்துவ உபகரணங்கள்

  • தகவல் தொழில்நுட்பம்/தகவல் தொழில்நுட்பச் சேவைகள்

  • உணவு பதப்படுத்துதல்

  • ரசாயனங்கள்

  • ஜவுளி மற்றும் ஆடைகள்

  • உயிர் அறிவியல்

  • பசுமை ஹைட்ரஜன்

கட்டுமானப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 1,06,803 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்படவிருக்கிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் பெருமளவிலான வேலை வாய்ப்புகள் பெண்களுக்கானவை.

இன்று தொடங்கப்பட்ட ஒவ்வொரு திட்டத்தின் சுமூகமான செயல்பாட்டிற்கும் சாதகமான சூழலை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு மனப்பூர்வமான ஆதரவளிக்கும் என்று உறுதியளிக்கிறேன், என்று பேசினார் முதல்வர் ஸ்டாலின்.