முற்றிலும் திருநங்கைகளால் நடத்தப்படும் தமிழகத்தின் முதல் ட்ரான்ஸ் உணவகம்!
கோவை மாவட்டம் சிந்தாமணி பகுதியில் திருநங்கைககள் 10 பேர் இணைந்து ‘கோவை டிரான்ஸ் கிச்சன்’ என்ற உணவகத்தை துவக்கி உள்ளனர்.
கோவை மாவட்டம் சிந்தாமணி பகுதியில் திருநங்கைககள் 10 பேர் இணைந்து "கோவை டிரான்ஸ் கிச்சன்" என்ற உணவகத்தை துவக்கி உள்ளனர்.
இந்த உணவகம் முழுக்க முழுக்க திருநங்கைகளால் மட்டுமே செயல்பட கூடிய உணவகம் என்பதே இதன் சிறப்பம்சமாகும். தற்போது 10 பேர் இணைந்து இதை ஆரம்பித்துள்ளனர். இவர்களுக்கு UWC ஸ்வஸ்தி, சி.எஸ்.ஐ, அப்பாசாமி கல்லூரியினர் உதவியுள்ளனர். அப்பாசாமி கல்லூரியில் இந்த 10 பேருக்கு உணவகம் செயல்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது 10 பேரால் இயங்கும் இந்த உணவகமானது மக்களிடையே நன் வரவேற்பை பெற்று செயல்பட்டால் 6 மாதம் கழித்து மற்றொரு கிளை ஆரமிக்க திட்டமிட்டள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கோவிட் -19 காரணமாக திருநங்கை சமூக உறுப்பினர்கள் பலருக்கும் வேலைகள் பறிபோனதாலும், வெளியில் புதிய பணி வாய்ப்புகளும் தற்போதுள்ள சூழலில் கிடைக்கவில்லை என்பதாலும் அவர்கள் சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டதாக கோயம்புத்தூர் மாவட்ட திருநங்கைகள் சங்கத் தலைவர் சங்கீதா தெரிவித்தார்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தமாக கேன்டீனை சங்கீதா நடத்தி வந்துள்ளார். சமையல் வேலை எங்களுடைய முதன்மையான வேலையாக இருந்தது. ஆனால், கோவிட் -19 காரணமாக, எங்கள் திருநங்கை சமூக உறுப்பினர்கள் பணிபுரிந்த பல உணவகங்கள் மூடப்பட்டன. அவர்கள் வேலையில்லாமல் இருந்தனர். எனவே, அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு சிறிய உணவகத்தை திறக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.
திருநங்கையினருக்கு வாழ்வாதாரம் அளிக்க இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்வோம். வழக்கமான ஹோட்டல்களை போன்றே இதுவும் இயங்கும். மேலும் தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக திருநங்கைகளால் முழுக்க முழுக்க செயல்படும் உணவகம் இதுவேயாகும் என்றும் கீதா தெரிவித்தார்.
கோவையில் திருநங்கைகள் சங்கம் மூலம், எங்களுடைய திருநங்கைகள் சமூகத்தைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் இதில் சேர்ந்துள்ளனர். உணவு தயாரித்தல், பேக்கேஜிங் மற்றும் டெலிவரி வரை சமையலறை முழுவதுமாக அவர்களே இந்த உணவகத்தை நடத்துகின்றனர், என்று கூறினார்.
தகவல்: சுதாகர்