Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

தமிழகத்தில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் தொடரும் தடைகள் என்ன?

ஏற்கனவே நடைமுறையில்‌ உள்ள செயல்பாடுகளுக்கானத் தடைகள்‌, மறு உத்தரவு வரும்வரை தொடாந்து அமலில்‌ இருக்கும். அவை என்ன?‌

தமிழகத்தில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் தொடரும் தடைகள் என்ன?

Saturday May 02, 2020 , 2 min Read

அனைத்து மாவட்ட ஆட்சியா்களும்‌, மாநகராட்சி ஆணையர்களும்‌ அரசால்‌ அறிவுறுத்தப்பட்ட தனிநபா்‌ இடைவெளியினை பின்பற்றியும்‌, போதுமான

கிருமிநாசினிகளை பயன்படுத்தியும்‌, பணியாளர்கள்‌, மற்றும்‌ தொழிலாளர்கள்‌ பாதுகாப்பாகப் பணிபுரிவதை கண்காணிக்கவும்‌, அரசால்‌ வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (Standard Operating Procedures) தீவிரமாக கடைபிடிப்பதை உறுதிசெய்யவும்‌ அறிவுறுத்தப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு தொடர்வதால்‌, பொது இடங்களில்‌, 5 நபர்களுக்கு மேல்‌ மக்கள்‌ கூடாமல்‌ இருப்பதை கண்காணிக்கவும்‌ அறிவுறுத்தப்படுகிறது.
TN corona

ஏற்கனவே அரசால்‌ அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும்‌ செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண்மைப்‌ பணிகள்‌, வேளாண்‌ சார்ந்த தொழில்கள்‌ (Agro

Processing), தொழில்‌ மற்றும்‌ வணிகச் செயல்பாடுகளும்‌, மருத்துவப்‌ பணிகள்‌ மற்றும்‌ அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும்‌ துறைகள்‌, வங்கிகள்‌, அம்மா உணவகங்கள்‌, ATM, ஆதரவற்றோர்‌ இல்லங்கள்‌ ஆகியவை எவ்வித தங்குதடையின்றி தொடர்ந்து முழுமையாக செயல்படலாம்‌.


  • கனிமம்‌ மற்றும்‌ சுரங்கப்‌ பணிகள்‌, கட்டுமானப்‌ பணிகளுக்குத் தேவையான பொருட்களை வழங்கும்‌ செங்கல்‌ சூளைகள்‌, கல்‌ குவாரிகள்‌, எம்‌-சாண்ட்‌, கிரஷர்கள்‌ மற்றும்‌ இவற்றிற்கான போக்குவரத்து ஆகியன செயல்படலாம்‌.


  • பெரும்‌ தொழிற்சாலைகளும்‌, தகவல்‌ தொழில்நுட்ப நிறுவனங்களும்‌, கட்டுமானப் பணிகளுக்கும்‌, பணிகளைத்‌ தொடங்க மாவட்ட ஆட்சியா/பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியோரிடம்‌ இணைய வழியில்‌ விண்ணப்பித்து பணியாளர்‌ மற்றும்‌ வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள்‌ பெற வேண்டும்‌.


  • நகரப்‌ பகுதிகளில்‌ பணியாளர்களை நிறுவனங்கள்‌, தாங்கள்‌ இயக்கும்‌ பிரத்யேக பேருந்துகள்‌ / வேன்கள்‌ மூலம்‌ பணிக்கு அழைத்து வரலாம்‌. அந்த வாகனங்களில்‌ 50 சதவிகிதம்‌ அளவிற்கு மட்டுமே தக்க தனிநபர்‌ இடைவெளியை கடைபிடித்து, பணியாளர்களை அழைத்து வர வேண்டும்‌.


  • சிறு, குறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌, கிராமப்புரத் தொழில்கள்‌, தனிக்கடைகள்‌ ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை.


  • மத்திய அரசு மற்றும்‌ மாநில அரசு அலுவலகங்கள்‌, 33 சதவிகித பணியாளர்களுடன்‌ தொடர்ந்து செயல்படும்‌.


ஏற்கனவே நடைமுறையில்‌ உள்ள கீழ்க்காணும்‌ செயல்பாடுகளுக்கான தடைகள்‌, மறு உத்தரவு வரும்வரை தொடாந்து அமலில்‌ இருக்கும்‌ :-


1. பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, பயிற்சி நிறுவனங்கள்‌, ஆராய்ச்சி நிறுவனங்கள்‌ மற்றும்‌ அனைத்து கல்வி நிறுவனங்கள்‌.


2. வழிபாட்டுத்‌ தலங்களில்‌ பொது மக்கள்‌ வழிபாடு மற்றும்‌ அனைத்து மதம்‌ சார்ந்த கூட்டங்கள்‌.


3. திரையரங்குகள்‌, கேளிக்கைக்கூடங்கள்‌, மதுக்கூடங்கள்‌, உடற்பயிற்சிக்‌ கூடங்கள்‌, கடற்கரை, சுற்றுலாத்‌ தலங்கள்‌, உயிரியல்‌ பூங்காக்கள்‌, அருங்காட்சியகங்கள்‌, நீச்சல்‌ குளங்கள்‌, விளையாட்டு அரங்குகள்‌, பெரிய அரங்குகள்‌, கூட்ட அரங்குகள்‌ போன்ற இடங்கள்‌.


4. அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல்‌, விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள்‌, விழாக்கள்‌, கூட்டங்கள்‌ மற்றும்‌ ஊர்வலங்கள்‌.


5. பொது மக்களுக்கான விமான, இரயில்‌, பொது பேருந்து போக்குவரத்து.


6. டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள்‌ ரிக்ஷா.


7. மெட்ரோ ரயில்‌, மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.

8. மாநிலங்களுக்கு இடையேயான பொது மக்கள்‌ போக்குவரத்து.


9. தங்கும்‌ விடுதிகள்‌ (பணியாளர்‌ விடுதிகள்‌ தவிர), தங்கும்‌ ஹோட்டல்கள்‌, ரிசார்ட்டுகள்‌.


10. இறுதி ஊர்வலங்களில்‌ 20 நபர்களுக்கு மேல்‌ பங்கேற்கக்‌ கூடாது.


11. திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள்‌ தொடரும்‌.


அரசு வழங்கியுள்ள இந்த நடைமுறைகளை பின்பற்றி, மாவட்ட ஆட்சியாகள்‌ / சென்னை மாநகர ஆணையர்‌ அனைத்து ஏற்பாடுகளையும்‌ செய்து, தொழிற்சாலைகளுக்கு தக்க அனுமதி வழங்கி, 6.5.2020 முதல்‌ தொழிற்சாலைகள்‌ செயல்பட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்‌.


நோய்த்‌ தொற்றின்‌ பரவலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நோய்த்‌ தொற்று குறையக்‌ குறைய, தமிழ்நாடு அரசு மேலும்‌ பல தளர்வுகளை அறிவிக்கும்‌.


கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்றின்‌ தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும்‌ நடவடிக்கைகளுக்கு, பொது மக்கள்‌, முழு ஆதரவையும்‌, ஒத்துழைப்பையும்‌ நல்குமாறு முதலமைச்சர் கேட்டுக்‌ கொள்கிறேன்‌.