'டாடா குழுமம்: இந்தியாவின் மதிப்புமிக்க ப்ராண்ட்' - பிராண்ட் பைனான்ஸ் அறிக்கையில் தகவல்!
இந்தியாவின் மதிப்பு மிக்க நிறுவனமாக டாடா குழுமம் $28.6 பில்லியன் மதிப்புடன் உள்ளதாக பிராண்ட் பைனான்ஸ் அறிக்கை தெரிவிக்கின்றது.
சமீபத்திய பிராண்ட் ஃபைனான்ஸ் இந்தியா 100 - 2024 அறிக்கையின் படி, டாடா குழுமம் $28.6 பில்லியன் பிராண்ட் மதிப்புடன் இந்தியாவின் அதிமதிப்புமிக்க பிராண்டாகத் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. குழுமத்தின் தாஜ் ஹோட்டல் பிராண்ட் இந்தியாவின் வலிமையான பிராண்டாகவும் முதல் இடத்தைப் பிடித்தது.
14.2 பில்லியன் டாலர் பிராண்ட் மதிப்பு கொண்ட இரண்டாவது மதிப்புமிக்க பிராண்டாக இன்ஃபோசிஸ் உள்ளடு. இது நிலையான 9% வளர்ச்சியைக் காட்டுகிறது. HDFC லிமிடெட் உடன் இணைந்ததைத் தொடர்ந்து HDFC குழுமம் $10.4 பில்லியன் பிராண்ட் மதிப்புடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பிராண்ட் ஃபைனான்ஸ் அறிக்கையின்படி, டாடா குழுமத்தின் பிராண்ட் மதிப்பு, இந்தியப் பொருளாதாரத்தில் நிலவும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில், முதன்முறையாக ஒரு இந்திய பிராண்ட் $30 பில்லியன் பிராண்ட் மதிப்பை நெருங்கியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிராண்ட் மதிப்பில் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்து இந்தியன் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகியவை அறிக்கையில் முன்னணியில் உள்ள வங்கிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
தொலைத்தொடர்புத் துறை பிராண்ட் மதிப்பில் 61% வளர்ச்சியை எட்டியுள்ளது, அதைத் தொடர்ந்து வங்கி 26% ஆக உள்ளது. சுரங்கம் மற்றும் இரும்பு மற்றும் எஃகு துறைகள் சராசரியாக 16% வளர்ச்சி பெற்றுள்ளன.
$545 மில்லியன் மதிப்புள்ள தாஜ், இந்தியாவின் வலிமையான பிராண்டாக உள்ளது, பிராண்ட் ஸ்ட்ரெங்த் இன்டெக்ஸ் (BSI) 100க்கு 92.9 மதிப்பெண்ணையும், பிராண்ட் வலிமைக்கான AAA+ மதிப்பீட்டையும் பெற்று நம்பர் 1 ஆக உள்ளது. தொடர்ந்து 3வது ஆண்டாக தாஜ் ஒரு வலிமையான பிராண்டாக தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளது.
பிராண்ட் பைனான்ஸ் ஆஜிமோன் பிரான்சிஸ் கூறும்போது, “குளோபல் சவுத் என்று அழைக்கப்படும் வளரும் நாடுகளின் குரலாக பிராண்ட் பைனான்ஸ் உள்ளது. இந்த குளோபல் சவுத் நாடுகளில் இந்தியா ஒரு வித்தியாசமேற்படுத்தும் தலைமையிடத்தில் உள்ளது. வளர்ச்சி, தற்சார்பு மற்றும் தன்னாட்சி ஆகிய சொல்லாடல்களை கட்டமைத்து இந்தியா இந்நிலையை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டில், உற்பத்தி, பொறியியல் சேவைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான அறிவு மையமாக இந்தியா மிகவும் சாத்தியமான இடமாக மாறியுள்ளது மற்றும் உலகளவில் தகவல் தொழில்நுட்ப சேவைகளில் கொடிகட்டிப் பறக்கும் நாடாகத் தொடர்கிறது.
இதன் விளைவாக, டாடா, இன்ஃபோசிஸ், எஸ்பிஐ, ஏர்டெல், ரிலையன்ஸ், தாஜ் ஹோட்டல்கள், எல்&டி, எம்ஆர்எஃப் போன்ற வலிமையான பிராண்டுகள் உலக அரங்கில் முத்திரையைப் பதித்துள்ளன,” என்றார்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) இந்தியாவில் தரவரிசையில் உள்ள இரண்டாவது மிக மதிப்புமிக்க வங்கியாக தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது, 33% வளர்ச்சியுடன் ஐசிஐசிஐ வங்கி 4.5 பில்லியன் டாலர்கள் மதிப்பை எட்டியுள்ளது.
அதிவிரைவு வளர்ச்சியில் இருக்கும் வங்கிகளாக இந்தியன் வங்கி, இந்டஸ் இந்த் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
உலோகத் துறையில், இந்தியாவில் டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ குரூப், ஹிண்டால்கோ மற்றும் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் பெரிய அளவில் விரிவாக்கங்கள் செய்து வருகின்றன என்கிறது இந்த அறிக்கை.