Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

[TechSparks 2020] ‘இனி தியேட்டர்கள்; ஓடிடி தளங்கள் இரண்டும் இணைந்தே செயல்படும்’ - BookMyShow ஆசிஷ் ஹேம்ரஜனி!

ஆசிஷ் கோவிட்-19 பெருந்தொற்றிற்குப் பிந்தைய காலகட்டத்தில் பொழுதுபோக்குத் துறை எப்படி இருக்கப்போகிறது என்றும் திரைப்படங்கள் குறித்துத் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருப்பதற்கான காரணம் குறித்தும் யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மா உடன் பகிர்ந்துகொண்டார்.

[TechSparks 2020] ‘இனி தியேட்டர்கள்; ஓடிடி தளங்கள் இரண்டும் இணைந்தே செயல்படும்’ - BookMyShow ஆசிஷ் ஹேம்ரஜனி!

Thursday October 29, 2020 , 2 min Read

BookMyShow இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆசிஷ் ஹேம்ரஜனி வெளிப்படையாகப் பேசுபவர்; தன் கருத்துக்களை திறம்பட வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவர். கோவிட்-19 பெருந்தொற்று பொழுதுபோக்குத் துறையை, குறிப்பாக திரைப்படத் துறையை பெருமளவு பாதித்திருந்தாலும், ஆசிஷ் நம்பிக்கை நிறைந்தவராகவே காணப்படுகிறார்.

“அதிகப்படியான காற்று சிறந்த மாலுமிகளை உருவாக்காது. மிதமான காற்றில் படகை செலுத்தும்போதே சிறந்த மாலுமிகள் உருவாகிறார்கள். இந்தப் பெருந்தொற்று சூழலில் நாம் அதிக காற்றில் படகை செலுத்தும் மாலுமிகளா அல்லது மிதமான காற்றில் செலுத்தும் மாலுமிகளா என்பதே நம் முன் இருக்கும் கேள்வி. அடுத்த 12 முதல் 24 ஆண்டுகள் நாம் எவ்வாறு செயல்படப் போகிறோம் என்பதே நம்மைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப்போகிறது,” என்று டெக்ஸ்பார்க்ஸ் 2020 நிகழ்வின் 'பொழுதுபோக்கின் வருங்காலத்தை மறுவடிவமைத்தல்’ என்பதை மையமாகக் கொண்ட உரையில் ஆசிஷ் குறிப்பிட்டார்.

ஆசிஷ் கோவிட்-19 பெருந்தொற்றிற்குப் பிந்தைய காலகட்டத்தில் பொழுதுபோக்குத் துறை எப்படி இருக்கப்போகிறது என்றும் திரைப்படங்கள் குறித்துத் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருப்பதற்கான காரணம் குறித்தும் யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மா உடன் பகிர்ந்துகொண்டார்.

OTT தளங்கள்

ஓடிடி தளங்கள் இந்தியாவில் ஆங்கிலம் பேசும் மக்களுக்கானது என்பதே ஆசிஷின் கருத்து. இந்தியாவில் அதிவேக இணைய வசதிகள் இருப்பதையும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதையும் ஆசிஷ் சுட்டிக்காட்டினார். ஓடிடி தளங்களில் இடம்பெறக்கூடிய உள்ளடக்கங்கள் அமெரிக்க கலாச்சாரத்தில் வாழ்பவர்களுக்கு ஏற்றதாகவே உள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு உள்ளடக்கம் உருவாக்குபவர்களுக்கு ஓடிடி தளங்கள் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது.


டிஜிட்டல் துறை புதிதாக உருவாகி வணிகங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியது போன்றே ஓடிடி தளங்கள் திறமைகளை ஊக்குவித்து சம வாய்ப்பளிக்கிறது என்கிறார் ஆசிஷ்.

“ஓடிடி தளங்களில் சந்தா தொடர்பான பிரச்சனைகள் இல்லை. ஆனால் சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குவதும் தீர்மானிப்பதுமே சவால்,” என்றார்.

பழையதும் புதியதும் இணைந்திருக்கும்

ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் பொழுதுபோக்கிற்காக வழக்கமாக திரையரங்குகளுக்குச் செல்பவர்கள் ஓடிடி தளங்களை அணுகத் தொடங்கியுள்ளனர். எனினும் ஓடிடி தற்போது மக்கள் கவனத்தைப் பெற்றிருந்தாலும் திரையரங்கு அனுபவத்தை ரசித்துள்ள இந்தியர்கள் தொடர்ந்து திரையரங்குகளுக்குச் செல்வார்கள் என்று ஆசிஷ் நம்பிக்கை தெரிவித்தார்.

2
“பொழுதுபோக்கு என்பது அனைவருக்கும் அவசியமானதாகவே உள்ளது. வீட்டுச் சூழலைத் தாண்டி வெளியில் ஒரு புதிய சூழலை சினிமா வழங்குகிறது. இந்தியாவைப் பொருத்தவரை சினிமா என்பது ஒரு ஏசி அனுபவமாகவே விற்பனை செய்யப்படுகிறது,” என்றார் ஆசிஷ்.

“பொருளாதாரத்தைப் பொருத்தவரை நாம் தற்போது கிருமிகளைக் கண்டு அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஊரடங்கிற்குப் பின்னர் குறுகிய இடத்தில் இருப்பது தொடர்பான அச்சம் ஏற்படும்,” என்றார்.


பொழுதுபோக்கு தொடர்பான புதிய வடிவங்கள் தொர்ந்து நீடித்தாலும்கூட அடுத்த இரண்டு மாதங்களில் வழக்கமான பொழுதுபோக்கு முறைகளுக்கான சந்தை புத்துயிர் பெறும் என்று இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் திரைப்பட புக்கிங் தளமான புக்மைஷோ இணை நிறுவனர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.


மேலும் கோவிட்-19 தொற்றுக்கு பிந்தைய காலகட்டத்தில் கேபிள் டிவி மோசமான பாதிப்புகளை சந்திக்கும் என்றும் கருத்து தெரிவித்தார்.


நாடுதழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதும் புக்மைஷோ விரைவாக ஆன்லைனிற்கு மாறியது. இந்தத் தளம் ஊரடங்கிற்குப் பிறகு 5,000 நிகழ்ச்சிகளை வழங்கியது. பயனர்களுக்கு இலவசமாக இந்த அனுபவத்தை வழங்கியது.

”நாங்கள் 20 ஆண்டுகளாக வருவாய் ஈட்டினோம். பெருந்தொற்று சமயத்தில் நாங்கள் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கவில்லை,” என்றார் ஆசிஷ்.

தற்போது பொருளாதாரம் மீண்டெழும் சூழலில் 70 சதவீத புக்மைஷோ வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி வருகின்றனர். 'Save the Circus’ என்கிற முயற்சி மூலம் ஆன்லைன் சர்கஸ் நிகழ்ச்சிக்காக 40,000 டிக்கெட்டுகளை இந்தத் தளம் விற்பனை செய்துள்ளதாக ஆசிஷ் தெரிவிக்கிறார்.


அடுத்த 18 மாதங்கள் முதல் மூன்றாண்டுகளில் ஐந்து முக்கிய இலக்குகளை எட்ட புக்மைஷோ திட்டமிட்டுள்ளது. இதில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளது.