[TechSparks2020] – இந்தியாவின் சிறந்த டெக் ஸ்டார்ட் அப்கள் பட்டியலில் இடம்பெற ‘Tech30' போட்டிக்கு விண்ணப்பியுங்கள்!
இந்தியாவின் 30 முன்னணி வளரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பட்டியலை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த பட்டியலில் இடம்பெற விண்ணப்பித்து, முதலீட்டாளர்களை நேரடியாக அணுகும் வாய்ப்பு மற்றும் 50 லட்சம் பரிசை வெல்லும் வாய்ப்பை பெறுங்கள்.
இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் TechSparks நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு துவங்கியிருக்கிறது. புதிய இயல்பு நிலைக்கு ஏற்ப, இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட் அப் நிகழ்வான டெக்ஸ்பார்க்ஸ் 11வது நிகழ்வு முற்றிலும் ஆன்லைனில் நிகழ உள்ளது.
இதன் மூலம் 100 மில்லியன் பங்கேற்பாளர்களை அடையும் வாய்ப்பு உள்ளது. எல்லா ஆண்டுகளையும் போலவே, Tech30 பட்டியல் இந்த ஆண்டும் முக்கியமாக எதிர்பார்க்கப்படுகிறது. 2020 முதல், உலக அளவில் வெற்றி பெற வாய்ப்புள்ள 30 வளரும் நிறுவனங்களை டெக் 30 என பட்டியலிட்டு வருகிறது.
50 லட்சம் முதலீடு வெல்ல வாய்ப்பு
டெக்ஸ்பார்க்சில் அறிமுகம் செய்யப்படும் Tech30 பட்டியல், அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அருமையான மேடையாக அமைகிறது. இந்த நிறுவனங்கள் தங்கள் கதைகளை சொல்வதற்கான மேடையை அமைத்துக்கொடுத்து, முதலீட்டாளர்களை சந்திக்க வழி செய்து, வல்லுனர்களுடன் இணைந்து பணியாற்ற வைப்பதன் மூலம் அவை தங்கள் கனவை நிறைவேற்றிக்கொள்ள யுவர்ஸ்டோரி வழி செய்கிறது.
மேலும், 50 லட்சம் நிதி உதவி உள்ளிட்ட பரிசுகளை வெல்லும் வாய்ப்பும் உள்ளது.
பில்லியன் டாலர் குழுவில் சேருங்கள்
Tech30 ஸ்டார்ட் அப்கள், வலுவான ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக உருவாகி இருக்கின்றன. இந்த பட்டியலில் இடம்பெற்ற புகழ் பெற்ற நிறுவனங்களில் சில வருமாறு: Freshworks, Capillary Technologies, LogiNext, Little Eye Labs, Flutura, ForusHealth, Moonfrog Labs, Crayon Data, and Airwoot
கடந்த 8 ஆண்டுகளில் இந்த பட்டியலில் இடம்பெற்ற நிறுவனங்கள் ஒரு பில்லியனுக்கும் அதிகமான முதலீட்டை திரட்டியுள்ளன. அதோடு சிறந்த தொழில் வல்லுனர்கள், துறை ஜாம்பவான்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்பை டெக்30 நிறுவனங்கள் பெறும்.
தேர்வு அம்சங்கள்
- பொருட்கள் புதுமை (Extent of product innovation) ( தொழில்நுட்ப பயன்பாடு),
- சந்தை வாய்ப்பு (Market potential) (இலக்கு வாடிக்கையாளர்கள், போட்டி, வளர்ச்சி வாய்ப்பு, கட்டுப்பாடு சூழல்)
- குழு வலிமை (Team strength) (நிறுவனர் பின்னணி, முதன்மை குழு, குழு அமைப்பு)
- வருவாய் மாதிரி (Revenue model) (மதிப்பு, நீடித்த தன்மை, லாப அம்சம்)
- நிறுவன வளர்ச்சியின் நிலை (Stage in the lifecycle) (வாடிக்கையாளர் அறிதல், புதிய சேவைகள் )
- வளர்ச்சிக்கான வாய்ப்பு (Scope for scale) (விரிவாக்கம் மற்றும் சந்தை வாய்ப்பு)
பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பார் பாரத் அழைப்புக்கு ஏற்ப நிகழ்ச்சியில் மேட் இன் இந்தியா ஸ்டார்ட் அப்களுக்கு தனி கவனம் செலுத்தப்படும்.
Tech30 ஆவதால் உங்களுக்குக் கிடைக்கப்போவது என்ன?
TechSparks நிகழ்வில் டெக் 30 நிறுவனங்களுக்குக் கிடைக்கும் கவனம் நிகரில்லாதது. தொழில்முனைவோர், வழிகாட்டிகள், துறை வல்லுனர்கள், முதலீட்டாளர்கள் முன்னிலையில் எண்ணங்களை விவரிக்கலாம். இவைத்தவிர முதலீட்டாளர்கள், வல்லுனர்களுடன் நேரடியாக பேசி, கூட்டு முயற்சிக்கான வாய்ப்பையும் பெறலாம்.
இறுதியாக, டெக் 30 பட்டியலில் இடம்பெறுவதன் மூலம், யுவர்ஸ்டோரியின் ஆண்டு டெக் 30 அறிக்கையில், யுவர்ஸ்டோரியில் இடம்பெறலாம். சுருக்கமாக சொல்வதானால், Tech 30 பட்டியலில் இடம்பெறுவது என்பது வளர்ச்சிக்கான பாதையில் முன்னேறுவதாகும்.
Tech30, 2020 - விண்ணப்பிக்க! செப்டம்பர் 30 11.59 வரை விண்ணபிக்கலாம்.
இந்தியாவின் முக்கிய தொழில்முனைவு மாநாடான டெக்ஸ்பார்க்ஸ் மீண்டும் நிகழ்கிறது. இதனுடன் ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்ர்களுக்கான வளர்ச்சி வாய்ப்பும் வருகிறது. டெக் 30 பட்டியலில் இடம்பெற விண்ணப்பித்து, 50 லட்சம் பரிசை வெல்லும் வாய்ப்பை பெறலாம்.
ஆங்கிலத்தில்: ரயான் பிரான்ஸ் | தமிழில்-சைபர்சிம்மன்