[TechSparks2020] இந்தியாவின் தொழில்நுட்ப நிகழ்வின் 11வது பதிப்பில் நீங்கள் கலந்து கொள்ள 11 காரணங்கள் இதோ!
இந்திய ஸ்டார்ட் அப் பரப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்ப மாநாட்டிற்கு இன்னமும் ஒரு மாதமே உள்ள நிலையில், டெக்ஸ்பார்க்ஸ் 2020 நிகழ்வை தவற விடாமல் இருப்பதற்கான 11 காரணங்கள்.
யுவர்ஸ்டோரி நடத்தும் முக்கிய நிகழ்வான TechSparks 11 வது ஆண்டுக்கு தயாராகி வருகிறது. இந்தியாவின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த ஸ்டார்ட் அப் தொழில்நுட்ப நிகழ்வான டெக்ஸ்பார்கஸ், இந்திய ஸ்டார்ட் அப் சூழலில் உள்ளவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் நிகவ்ழாக அமைகிறது.
நன்கறியப்பட்ட மற்றும் செல்வாக்கு மிக்க ஸ்டார்ட் அப்களை உருவாக்க உதவுவதன் மூலம், அவற்றின் கதைகளை சொல்வதன் மூலம், உரையாடலுக்கு வழிவகுத்து, தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம், வாய்ப்ப்புள்ள தொழில்முனைவோர்கள் மற்றும் மாற்றத்திற்கான மனிதர்களை அடையாளம் காட்டுவதன் மூலம், இந்தியாவில் தொழில்நுட்ப உரையாடலை மாற்றி அமைத்ததில் யுவர்ஸ்டோரிக்கு முக்கியப் பங்காற்றியிருக்கிறது.
டெக்ஸ்பார்க்ஸ் 2020 மெய்நிகர் நிகழ்வாக, அக்டோபர் 26 முதல் 30 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. நீங்கள் உங்கள் இல்லத்தில் இருந்தே பங்கேற்கலாம்.
ஒரு மாதத்திற்கும் குறைவாக உள்ள நிலையில், டெக்ஸ்பார்க்ஸ் 2020 நிகழ்வில் நீங்கள் பங்கேற்பதற்கான 11 காரணங்கள் இதோ:
பயணம் செய்ய வேண்டாம்
கொரோனா தொற்று பொருளாதாரத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதித்திருக்கிறது. இந்த புதிய இயல்பு நிலைக்கு ஏற்ப டெக்ஸ்பார்க்ஸ் 11 வது ஆண்டு நிகழ்வு ஆன்லைனில் நடைபெற உள்ளது. வல்லுனர் உரையாடல், பயிற்சி வகுப்புகள், பயிலரங்குகள், பொருட்கள் அறிமுகம் என எல்லாமே ஆன்லைனில் நிகழும்.
பங்கேற்பாளர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் துறை வல்லுனர்களுடன், முற்றிலும் புதிய விதமாக, மெய்நிகழ் முறையில் உரையாடலாம்.
தேர்வு செய்யப்பட்டவை
கடந்த 10 ஆண்டுகளாக டெக்ஸ்பார்க்ஸ், செல்வாக்காளர்கள், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் வர்த்தகத் துறையினருக்கான மேடையாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும், பங்கேற்பாளர்களுக்காக 1100க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை கவனமாக தேர்வு செய்துள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மிகச்சிறந்த வல்லுனர்களின் கருத்துகளை இவற்றில் கேட்டறியலாம்.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம், வர்த்தகத்தை வளர்த்தெடுப்பது, துடிப்புடன் இருப்பது, சிக்கல்களை எதிர்கொள்வது உள்ளிட்டவற்றை கற்றுக்கொள்ளலாம். மேலும் பல்வேறு தலைப்புகளில் துறை சார்ந்த வல்லுனர்களின் சிறப்புரையை கேட்கலாம். முக்கியமான மற்றும் பரந்த பார்வையை அளிக்கும் தலைப்புகளில் வல்லுனர் உரையாடல்களையும் கேட்கலாம்.
மேலும், தொழில்துறை முன்னணி நபர்கள் தங்கள் உள்ளொளி, கற்றல், பயணங்கள், சவால்களை பகிர்ந்து கொள்வார்கள்.
பயிலரங்குகள்
TechSparks2020ல், நீங்கள் பல்வேறு தலைப்புகளில் ஆழமான புரிதலை அளிக்கும், சிக்கலான விஷயங்களை எளிமையாக புரிய வைக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம். யுவர்ஸ்டோரி பயிலரங்குகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளது. இவற்றின் மூலம், தொழில்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் செயல்முறையை, குழுக்களை நிர்வகிப்பதை, டிஜிட்டல் வளர்ச்சி பெறுவதை நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.
இந்தியாவில் உருவானவை
பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்ம நிர்பார் பாரத் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, உள்நாட்டில் உருவான தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள், ஐடியாக்களுக்கு யுவர்ஸ்டோரி மேடை அமைத்து கொடுக்கும்.
இந்திய ஸ்டார்ட் அப்கள், தொழில்முனைவோர் மற்றும் புதுமையாளர்களையும் TechSparks 2020 கொண்டாடும்.
இந்திய ஸ்டார்ட் அப் சூழலில் முன்னணியில் விளங்குபவர்களை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பாகவும் நிகழ்ச்சி அமையும். இதற்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வுகளில், டெக்ஸ்பார்க்ஸ் ஓலாவின் பாவிஷ் அகர்வால், குணால் ஷா (க்ரீட்) , பேடிஎம்மின் விஜய்சேகர் சர்மா, இன்மொபியின் நவீன் திவாரி, ஜியோமியின் மனு ஜெயின் உள்ளிட்டவர்களை மேடையேற்றியிருக்கிறது.
டெக்ஸ்பார்க்ஸ் 2020 ல் தோன்ற உள்ள முன்னணி பேச்சாளர்களை அறிய ஆர்வமா!
முதலீட்டாளர்கள்
வென்ச்சர் முதலீட்டாளர்கள் மற்றும் தேவதை முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறீர்களா?
டெக்ஸ்பார்க்ஸ் 2020 தான் அதற்கான இடம். விசி கனெக்ட் பாரம் நிகழ்வில் தொழில் முனைவோர் மற்றும் ஸ்டார்ட் அப்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வழிகாட்டிகளைக் கண்டறியலாம்.
விசி- ஸ்டார்ட் அப் வலைப்பின்னல் மேடை, முக்கிய முதலீட்டாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் மெய்நிகராக சந்திக்க வழி செய்யும். தொழில்முனைவோர் தங்கள் ஸ்டார்ட் அப் ஐடியாக்களை விவரித்து கருத்துக்களை கேட்டறியலாம்.
முந்தைய நிகழ்வுகளில், பிரைம் வென்சர் பாட்னர்ஸ், ஆக்சல், கலாரி கேபிடல், மேட்ரிக்ஸ் பாட்னர்ஸ், நேஸ்பர்ஸ், 3one4 கேபிடல், உள்ளிட்ட முதலீட்டாளர் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
முதலீட்டாளரை சந்திக்க விருப்பமா!
தொழில்முனைவு பங்குதாரர்கள்
டெக்ஸ்பார்க்ஸ் 2020, நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களை கைக்கோர்க்க வைக்கும் வகையில், யுவர்ஸ்டோரி எண்டர்பிரைஸ் கனெக்ட் பாரம் நிகழ்ச்சியை நடத்துகிறது. மற்ற அம்சங்களுடன் துறைவாரியாக மற்றும் பயன்பாடு அடிப்படையில் ஸ்டார்ட் அப்கள் மற்றும் நிறுவனங்கள் பொருத்தப்படும்.
நிறுவனங்கள் , தேர்வு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப்களுடன் தங்களுக்கான பொதுவான அம்சங்களை கண்டறியலாம்.
ஸ்டார்ட் அப்’கள்
ஸ்டார்ட் அப் நிறுவங்கள், நிறுவன CXO க்களை நேரடியாக சந்திக்கலாம். வல்லுனர்களுடன் பேசலாம். இதற்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வுகளில், ஆக்சிஸ் வங்கி, டிவிஎஸ் கிரெடிட், எச்டிஎப்சி வங்கி, உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ள விருப்பமா!
Tech 30
ஆண்டுதோறும், டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வில், மிகவும் எதிர்பார்க்கப்படும் டெக் 30 பட்டியலை வெளியிடும். உலக அளவில் வளரும் வாய்ப்பு கொண்டுள்ள இளம் ஸ்டார்ட் அப்mநிறுவனங்களின் பட்டியலாக இது அமைகிறது.
கடந்த 8 ஆண்டுகளில் இந்த பட்டியலில் இடம்பெற்ற ஸ்டார்ட் அப்கள் மொத்தம் 1 பில்லியன் டாலருக்கு மேல் முதலீட்டு திரட்டியுள்ளன. மேலும், டெக் 30 ஸ்டார்ட் அப்'கள் யுவர் ஸ்டோரியின் டெக் 3- அறிக்கையில் இடம்பெறும் வாய்ப்பை பெறுவதோடு, டெக்ஸ்பார்க்ஸ் மேடையில் முதலீட்டாளர்களிடம் தங்கள் கோரிக்கையை சமர்பிக்கும் வாய்ப்பை பெறலாம்.
இதற்கு முன்னர் டெக் 30 ல் தேர்வான ஸ்டார்ட் அப்கள் சில: Flutura, Little Eye Labs, Capillary Technologies, ForusHealth, Freshworks, LogiNext, and Airwoot.
இதில் பங்கேற்பதற்கான தகுதி அம்சங்களை அறிய ஆர்வமா!
Tech30 ல் பங்கேற்க விண்ணபிக்க!
சர்வதேச அளவில்
டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வு சர்வதேச அளவில் நிகழ உள்ளது. இந்த நிகழ்வில், உலக நாடுகளைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்கள், தொழில்முனைவோர்கள் பங்கேற்று 2021 தொடர்பான பார்வையை பகிர்கின்றனர்.
எல்லைகள் கடந்த கூட்டு முயற்சியில் கவனம் செலுத்தும் வகையில், குளொபல் இன்னவேஷன் டிராக் நடைபெற உள்ளது. இத்தாலி, அமெரிக்கா, யுகே, சிங்கப்பூர், ஸ்வீடன், இஸ்ரேல் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.
வேலைவாய்ப்புகள்
யுவர்ஸ்டோரி அண்மையில், வேலைவாய்ப்புக்கான Jobs For All – இன் இந்தியா, ஃபார் இந்தியா திட்டத்தை துவக்கியுள்ளது. வேலைவாய்ப்பு தேடுபவர்களின் குரலாக, திறன் வளர்ச்சி நிறுவனங்களை அடையாளம் காட்டும் வகையில் இது அமையும். டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில். அரசு அமைப்புகள், நிறுவனங்கள், விசிக்கள், இன்குபேட்டர்களுடன் நீங்கள் உரையாடலாம்.
புதிய இயல்பு நிலை
புதிய இயல்பு நிலையை எதிர்கொள்வதை நாம் அறிந்தாக வேண்டும். அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாற்றத்தை டெக்ஸ்பார்க்ஸ் பிரதிபலிக்க உள்ளது. ஆத்மநிர்பார் பாரத், டிஜிட்டல் மாற்றம், கல்விநுட்ப எழுச்சி, விவசாய நுட்பம் ஆகியவை குறித்து உரையாடலாம்.
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிகழ்வான டெக்ஸ்பார்க்ஸ் மீண்டும் நிகழ உள்ளது. இது ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்’களுக்கான மகத்தான வாய்ப்பு. டெக் 30ல் பங்கேற்க விண்ணப்பித்து, ரூ.50 லட்சம் வரை நிதி வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்
ஆங்கில கட்டுரையாளர்: டெபோலினா பிஸ்வாஸ் | தமிழில்: சைபர்சிம்மன்