நாசா ஏவும் முதல் தனியார் விண்கலம் SpaceX அடுத்த வாரம் விண்ணில் பாயும்!
9 ஆண்டுகளுக்குப் பின் NASA ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய உள்ள SpaceX-ல் செல்லும் குழு தயார் நிலையில்.
இன்னும் ஒரு வாரத்தில் விண்ணில் பாயவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஸ்பேஸ்X' (SpaceX) பயணத்துக்கான இரண்டு விண்வெளி வீரர்கள் கென்னடி ஸ்பேஸ் செண்டருக்கு வருகைத் தந்தனர். 9 ஆண்டுகளுக்குப் பின் விண்வெளி வீரர்களுடன் பறக்கவிருக்கும் ஸ்பேஸ் ப்ளைட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு இல்லாத தனியார் நிறுவனம் ஒன்றால் விண்வெளிக்கு அனுப்பவிருக்கும் முதல் விண்கலம் இதுவாகும். அதில் வீரர்கள் பயணித்து புவிவட்டப்பாதை வரை செல்ல உள்ளனர். NASA-வின் டெஸ்ட் பைலட், டோ ஹர்லே மற்றும் பாப் பென்கென், ஃப்ளாரிடாவில் இருந்து ஸ்பேஸ் ஸ்டேஷன் உள்ள ஹூஸ்டனுக்கும் வந்தடைந்தனர்.
“நாசா-விற்கு இந்த விண்வெளித் திட்டம் ஒரு அற்புதமான வாய்ப்பாகும். அமெரிக்கக் குழு இன்னும் ஒரு வாரத்தில் விண்ணில் பறக்க உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது,” என ஹர்லே தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டு ஜூலை 4ம் தேதி கென்னடி ஸ்டேஷனில் இருந்து விண்ணில் ஸ்பேஸ் ஷட்டில் சென்றபோதும், அப்போதிருந்த வீரர்களில் 4 பேர் ஒருவராக ஹர்லே இருந்துள்ளார்.
“மீண்டும் ஒரு முறை இங்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார் ஹர்லே.
மற்றொரு விண்வெளி வீரரான பென்கன் இந்த ஸ்பேஸ் பயணம் பற்றி பகிர்கையில்,
“இது ஒரு சிறந்த வாய்ப்பு. அமெரிக்க மக்களின் பொறுப்பை ஏற்கும் அதே சமயம் SpaceX குழுவில் நாசா சார்பில் இடம் பெறுவதை அற்புதமாகக் கருதுகிறேன்,” என்றார்.
மே 27ம் தேதி அதாவது அடுத்த புதன்கிழமை மதியம் ‘SpaceX’, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் பாயும். இதற்கு முன் 2011-ல் ‘அட்லாண்டிஸ்’ விண்ணில் ஏவிய அதே தளத்தில் இருந்து ஸ்பேஸ்X ஏவப்படும்.
இது பற்றி டிவிட்டரில் பதிவிட்ட நாசா, SpaceX விண்கலம் ஏவப்படுவதற்காக தயார் நிலையில் இருக்கும் வீடியோவையும் பதிவிட்டுள்ளது.
தகவல்: நாசா