'விஜய் செல்பி டூ மோடி தீபம் வரை: 2020ல் இந்தியாவில் ட்ரென்ட் ஆன டிவிட்டர் பதிவுகள்!
2020ன் டாப் டிரென்டிங் என்ன என்பதை டிவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.
அதில் நெய்வேலியில் நடிகர் விஜய் தன் ரசிகர்களுடன் இணைந்து எடுத்த செல்பி அதிக ரீடிவிட் செய்யப்பட்ட பதிவாக முன்னணியில் இருக்கிறது. அதாவது,
அந்த செல்ஃபி 145.7k ரிடிவீட் செய்யப்பட்டு, 203.9k முறை லைக் செய்யப்பட்டு 2020ன் டாப் 10 டிரென்டிங்கில் முதலிடத்தை பெற்றுள்ளது.
டிவிட்டர் இந்தியா #ThisHappened2020 என்ற ஹேஷ்டேக்குடன் இந்தாண்டு நடந்த சம்பவங்களில் டிரென்டிங்குகளை தொகுத்து வெளியிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாகத்தான் இந்த செல்ஃபி முதலிடத்தை பிடித்துள்ளது.
பிப்ரவரி மாதம் 10தேதி ‘Thank you Neyveli’ என்று தனது ரசிகர்கள் படை சூழ முன்னால் நின்றுகொண்டு விஜய் எடுத்த செல்ஃபிதான் அது. கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு முன், மாஸ்டர் படப்பிடிப்பின்போது, ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்ஃபி பெரிய அளவில் அப்போது வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு மட்டுமின்றி, கடந்தாண்டு 2019ல் கூட பிகில் படம் குறித்து விஜய் பதிவிட்டது பதிவுதான், டிவிட்டரின் டாப் 10 ட்வீட்டுகளில் இடம்பெற்றது. இதனால் குஷியடைந்துள்ள அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தங்கள் கொண்டாட்டத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.
அதேபோல ட்விட்டர் இந்தியா பட்டியலிட்டுள்ள டாப் ட்ரென்டிங் ட்வீட்ஸ் எது என்று பார்ப்போம்:
- விராட் கோலி தன் மனைவியும் பாலிவுட் நடிகருமான அனுஷ்கா சர்மா, கர்பமாக இருக்கும் செய்தியை புகைப்படத்துடன் ட்வீட் செய்திருந்த பதிவு ரசிகர்களின் மனம் கவர்ந்த பதிவானது. அதனால் அந்த புகைப்படமும் டிரென்ங்கில் இடம்பெற்றுள்ளது. இந்த பதிவு 645.2k லைக்குகளும், 93.9k ரீட்வீட்டுகளும் கிடைத்துள்ளது.
- அதேபோல, பாலிவுன் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், தனக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யபட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது 43.6k என்ற அளவில் அதிகம் பேரால் quoted tweet செய்யப்பட்ட பதிவு என டிவிட்டர் இந்தியா தெரிவித்துள்ளது.
- நடிகர்கள் மட்டும் டிவிட்டரில் பிரபலம் இல்லை என நிரூபிக்கும் வகையில், நம் பிரதமர் நரேந்திர மோடி தனது வீட்டில் கொரோனா காலத்தில் விளக்கெற்றி, அதை டிவிட்டரில் பதிவிட்டிருந்ததும் மக்களால் பெரிதும் லைக் செய்யப்பட்டு, மறுபதிவு செய்யப்பட்டது.
இப்பதிவு 513.9k முறை லைக் செய்யப்பட்டு, 165.5k முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அடுத்து நம்ம தல தோனி செய்த ட்வீட் ஹிட் அடித்துள்ளது. இது அரசியல் களத்தில் அதிக அளவில் ரீடிவிட் செய்யப்பட்ட பதிவு எனவும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்த டிவீட் விளையாட்டு துறையின் அதிகம் ரீடிவீட் செய்யப்பட்ட பதிவு எனவும் டிவிட்டர் இந்தியா தெரிவித்துள்ளது.
இவை தவிர, #Covid19 ஹேஷ்டேக் மற்றும் கொரோனா தொடர்பான பல ஹேஷ்டாக்குகள் ட்ரென்ட் ஆகியுள்ளது என ட்விட்டர் தெரிவித்துள்ளது. #WearAMask #Coronavirus, #JantaCurfew well #StayHomeStaySafe #SocialDistancing இவையெல்லாம் கோவிட் தொடர்பான 2020 ட்ரெண்ட் ஹேஹ்டாக்கள் ஆகும்.
விளையாட்டு பிரிவில் #IPL2020, #WhistlePodu மற்றும் #TeamIndia தான் டிரெண்டிங்கில் ரசிகர்களால் அதிக அளவில் உபயோகப்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகள் என தெரிவித்துள்ளது டிவிட்டர்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் மற்றும் மனதை உலுக்கிய ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமை ஆகிய இரண்டு சம்பவங்கள் குறித்து தான் டிவிட்டரில் அதிகளவில் டிவீட்டுகள் பதியபட்டுள்ளன. #SushantSinghRajput #Hathras ஹேஷ்டாகுகளுடன் ஷாஹீன் பாக் போராட்டம், விவசாயிகள் போராட்டமும் 2020ல் ட்ரெண்ட் ஆனதாக ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது. #StudentLivesMatter, #ShaheenBagh மற்றும் #FarmersProtest,
டிவிட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனீஷ்மகேஸ்வரி,
“2020ம் ஆண்டின் டிவிட்டர் உரையாடல் என்பது தனித்துவமானது. கொரோனா வைரஸூக்கு எதிரான போராட்டங்கள், கொண்டாட்டத் தருணங்களின்போது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக துணைநின்றது, மீம்ஸ்கள், என எல்லாவற்றையும் டிவிட்டர் அழகாக தொகுத்துள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.